சந்தோஷமோ சஞ்சலமோ, அவள்தானே எல்லாம்? அதென்னவோ இப்போ அவள் பாட்டு போடணும்னு தோணுச்சு. அன்னையின் திருவடிகள் சரணம்.
சக்தி உந்தன் பெயர் சொல்லையிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே!
சக்தி உன்னை மனம் நாடையிலே - என்
துன்பங்கள் தீருதுன் ஜாடையிலே!
அன்னை உந்தன் பெயர் சொல்லையிலே - எண்ண
மெல்லாம் நிறையுது அன்பினிலே!
அன்னை உன்னை மனம் நாடையிலே - என்
ஊழ்வினை ஓடுதுன் பார்வையிலே!
தேவி உந்தன் பெயர் சொல்லையிலே - ஒரு
தேறுதல் பிறக்கு துள்ளத்திலே!
தேவி உன்னை மனம் நாடையிலே - என்
தேடுதல் தீர்ந்த தின்னாளினிலே!
துர்க்கை உந்தன் பெயர் சொல்லையிலே - ஒரு
சொர்க்கம் தெரியுது கண்களிலே!
துர்க்கை உன்னை மனம் நாடையிலே - வாழும்
மார்க்கம் ஒளிருதென் நெஞ்சினிலே!!
--கவிநயா
படிக்க படிக்க
ReplyDeleteபரவசம் அடைகிறது
உள்ளம்
திகழ்மிளிர் said...
ReplyDelete//படிக்க படிக்க
பரவசம் அடைகிறது
உள்ளம்//
எனக்குப்
படிக்கப் படிக்க
சக்தி பெருகுகிறது
வெள்ளமாய்..
நன்றி கவிநயா.
தேவி உந்தன் பெயர் சொல்கையிலே - ஒரு
ReplyDeleteதேறுதல் பிறக்கு துள்ளத்திலே!
தேவி உன்னை எண்ணிப் பாடுகையிலே என்
தேடுதல் தீர்ந்த தின்னாளினிலே!
--சிறப்பாக, ராகத்துடன் பாடுதலுக்கு
வசப்பட்டு இருக்கிறது.
எல்லா இடங்களிலும், 'சொல்கையிலே'
'பாடுகையிலே' என்று இருந்திருக்கலாமோ?
(பிரசுரத்திற்கு அல்ல)
அக்கா
ReplyDeleteஇந்தக் கவிதை அம்மன் பாட்டுக்குச் சொந்தமானது! அதை இங்கே இட்ட உங்களைக் கன்னா பின்னான்னு கண்டிக்கிறேன்! :)
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்!
ReplyDeleteபரவாயில்லை ஜீவி ஐயா. கேஆரெஸ்ஸும் சொன்னாரு. இப்ப
ReplyDelete"உன்னை மனம் நாடையிலே"ன்னு மாத்திட்டேன். இருவருக்கும் நன்றி.
//படிக்க படிக்க
ReplyDeleteபரவசம் அடைகிறது
உள்ளம்//
மிக்க நன்றி திகழ்மிளிர்.
//எனக்குப்
ReplyDeleteபடிக்கப் படிக்க
சக்தி பெருகுகிறது
வெள்ளமாய்..//
அப்படியே ஆகட்டும். மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
//இந்தக் கவிதை அம்மன் பாட்டுக்குச் சொந்தமானது!//
ReplyDelete:) அவ பாட்டை இங்கே போட்டதாலேதானே இப்போ வந்தீங்க :) நன்றி கண்ணா.
வருகைக்கு நன்றி கீதாம்மா.
ReplyDelete//சக்தி உந்தன் பெயர் சொல்லையிலே - ஒரு
ReplyDeleteசக்தி பிறக்குது மூச்சினிலே!
சக்தி உன்னை மனம் நாடையிலே - என்
துன்பங்கள் தீருதுன் ஜாடையிலே!//
ஒம் சக்தி, ஓம் சக்தி, ஓம் சக்தி
நல்ல சந்தத்தோட இருக்கு அக்கா.
ReplyDeleteவருகைக்கு நன்றி கைலாஷி.
ReplyDelete//நல்ல சந்தத்தோட இருக்கு அக்கா.//
ReplyDeleteமிக்க நன்றி குமரா.
கவிதை அருமை சற்றே சந்த ஓசை நீள்கிறது சற்றே சரி செய்தால் சிறப்பாக இருக்கும்;
ReplyDeleteகாட்டுக்கு:-
சக்தி உன்பெயர் சொல்லையிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே!
சக்தி உனைமனம் நாடையிலே - என்
துன்பங்கள் தீருதுன் ஜாடையிலே!
வருகைக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி அகரம்.அமுதா. முயற்சி செய்து பார்க்கிறேன் :)
ReplyDeleteதுர்க்கை உன்னை மனம் நாடையிலே - வாழும்
ReplyDeleteமார்க்கம் ஒளிருதென் நெஞ்சினிலே!!
இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்தது. வழி காட்டும் ஒளியும், வழியும் அன்னை தானே!
//வழி காட்டும் ஒளியும், வழியும் அன்னை தானே!//
ReplyDeleteஉண்மை. வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி ரமேஷ்.