Sunday, November 2, 2008

சொந்தமும் பந்தமும் நீயே முருகா !

சஷ்டி கொண்டாட்டத்தை முன்னிட்டு எங்க ஊர் கோவில்ல பாடறதுக்காக எழுதிய எளிய பஜனைப் பாடல்கள் -


(1)

முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வா
செந்தில் நாதா சிங்கார வேலா செந்தமிழ்க் குமரா வா
ஆவினன் குடியில் வீற்றிருக்கின்ற அம்பிகை மைந்தா வா
அகம் மிக மகிழ்ந்து உனைப் பணிகின்றோம் அழகா முருகா வா

குமரா குமரா குமரா குமரா குமரா குமரா வா
கந்தா கடம்பா கதிர்வேல் முருகா கார்த்திகை பாலா வா
ஓம் எனும் ப்ரணவப் பொருள் உரைத்தவனே போற்றுகின்றோம் நீ வா
ஓயாமல் உனைத் தொழுது நின்றோமே தாமதிக்காதே வா

வேலா வேலா வேலா வேலா வேலா வேலா வா
வடிவேல் முருகா வள்ளி மணளா வணங்குகிறோம் நீ வா
சூரனை அழித்து தேவரைக் காத்த சிவனுடை பாலா வா
சொந்தமும் பந்தமும் நீயே முருகா சோதிக்காதே வா

***

(2)

அழகனே முருகனே குமரனே வாவா

ஆறுதல் தந்திட அறுமுகா வாவா

இறைஞ்சியே அழைக்கிறோம் இக்கணம் வாவா

ஈசனின் மைந்தனே சடுதியில் வாவா

உலகெலாம் போற்றிடும் உத்தமா வாவா

ஊழ்வினை நீக்கிடும் வித்தகா வாவா

எங்கும் நிறைந்தவனே இங்கு நீ வாவா

ஏறுமயில் ஏறியே என்னிடத்தில் வாவா

ஐங்கரன் சோதரா அடிபணிந்தோம் வாவா

ஒப்பில்லா மணியேநீ ஓடோடி வாவா

ஓம்காரத் தத்துவமே விரைந்தோடி வாவா

ஔடதமே அன்புருவே எமைக் காக்க வாவா


***

(3)


வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்
வேல்முருகா வேலாயுதா வேல்முருகா வேல்வேல்

ஆறுபடை வீடு கொண்ட ஆறுமுகா வேல்வேல்
ஏறுமயில் வாகனனே வேல்முருகா வேல்வேல்

ஓம்முருகா என்றுதினம் உந்தன் நாமம் வேல்வேல்
ஓயாமல் ஜெபித்திருப்போம் வேல்முருகா வேல்வேல்

பாலாபிஷேகங்கள் ஏற்றுக் கொள்வாய் வேல்வேல்
பக்தர்களைக் காத்திடுவாய் வேல்முருகா வேல்வேல்

தேனாபிஷேகங்கள் ஏற்றுக் கொள்வாய் வேல்வேல்
தெரியாமல் செய்யும்பிழை பொறுத்தருள்வாய் வேல்வேல்

வாசமலர் மாலைகளை ஏற்றுக் கொள்வாய் வேல்வேல்
தேசொளிரும் பாலகனே வேல்முருகா வேல்வேல்

வீசுகின்ற தென்றல் போல வேல்முருகா வேல்வேல்
எங்கள் வாழ்வில் வந்தவனே வேல்முருகா வேல்வேல்

அன்போடு நாங்கள் செய்யும் அத்தனையும் வேல்வேல்
ஆதரவாய் ஏற்றுக் கொண்டு அருள்புரிவாய் வேல்வேல்

***

அனைவருக்கும் கந்த சஷ்டி திருநாள் வாழ்த்துகள்!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா!!

அன்புடன்
கவிநயா

14 comments:

  1. /அழகனே முருகனே குமரனே வாவா

    ஆறுதல் தந்திட அறுமுகா வாவா

    இறைஞ்சியே அழைக்கிறோம் இக்கணம் வாவா

    ஈசனின் மைந்தனே சடுதியில் வாவா

    உலகெலாம் போற்றிடும் உத்தமா வாவா

    ஊழ்வினை நீக்கிடும் வித்தகா வாவா

    எங்கும் நிறைந்தவனே இங்கு நீ வாவா

    ஏறுமயில் ஏறியே என்னிடத்தில் வாவா

    ஐங்கரன் சோதரா அடிபணிந்தோம் வாவா

    ஒப்பில்லா மணியேநீ ஓடோடி வாவா

    ஓம்காரத் தத்துவமே விரைந்தோடி வாவா

    ஔடதமே அன்புருவே எமைக் காக்க வாவா/

    சொல்ல இனிக்கின்றது

    வாழ்த்துகள்

    ReplyDelete
  2. மிக அருமை கவிக்கா....மிக அழகாக வந்திருக்கிறது.

    கந்தவேளுக்கு அரோஹரா!!!

    ReplyDelete
  3. //எங்க ஊர் கோவில்ல பாடறதுக்காக எழுதிய எளிய பஜனைப் பாடல்கள்//

    உங்கள் பாடல்களின் தனிச் சிறப்பே அதுதான். எளிமையான வார்த்தைகள் இறைவனுடனான ஒரு ஐக்கியத்தைத் தானாகவே தந்து விடுகின்றன.

    //வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
    வீரவேல் முருகனுக்கு அரோகரா!!//

    நன்றி கவிநயா.

    ReplyDelete
  4. தங்களுக்கும் கந்த சஷ்டி திருநாள் வாழ்த்துகள் அக்கா. முருகன் ஆத்திச்சூடி அருமை!

    ReplyDelete
  5. வாங்க திகழ்மிளிர்.

    //இனிக்கின்றது//

    உங்க வருகையும் :) மிக்க நன்றி.

    ReplyDelete
  6. //மிக அருமை கவிக்கா....மிக அழகாக வந்திருக்கிறது.//

    மிக்க மகிழ்ச்ச்சி மௌலி. கந்தவேளின் கருணையே காரணம் :) மிக்க நன்றி.

    ReplyDelete
  7. //உங்கள் பாடல்களின் தனிச் சிறப்பே அதுதான். எளிமையான வார்த்தைகள் இறைவனுடனான ஒரு ஐக்கியத்தைத் தானாகவே தந்து விடுகின்றன.//

    அன்பு கனிந்த வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  8. வாங்க ஜீவா. ரசித்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. நல்ல பாடல் கவிநயா. பாடிக் கேட்டால் இன்னும் ரசிக்கலாம் என நினைக்கிறேன். ஒரு சந்தேகம், ஔடதம் என்றால் என்ன?

    ReplyDelete
  10. நன்றி ரமேஷ். ஔடதம்னா மருந்துன்னு பொருள். பிறவிப் பிணிக்கு மருந்து இறைவன்தானே.

    ReplyDelete
  11. அருமையும் எளிமையுமாக இருக்கின்றன அக்கா பாடல்கள். மனப்பாடம் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  12. குமரா குமரான்னு எவ்ளோ நேரம் கூப்பிட்டேன். இப்பதான் வர்றீங்க? :)

    ReplyDelete
  13. பிறவிப் பிணிக்கு மருந்து இறைவன் தான். நன்றி கவிநயா.

    ReplyDelete
  14. மீள்வருகைக்கு நன்றி ரமேஷ்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)