ஆயிர மாயிரம் விளக்கேற்றி
அவனியில் அன்பெனும் ஒளியேற்றி
ஆடியும் பாடியும் கொண்டாடுவோமே
ஆனந்தமான தீபாவளி!
வைகறைப் பொழுதில் விழித்தெழுந்து
வாகாய்க் கங்கா ஸ்நானம் செய்து
புத்தாடைகள் பல புனைந்து
பலகாரங்கள் பகிர்ந்திடுவோம்!
படபட பட்டாசு முரசொலிக்க
பளபள மத்தாப்பு ஜொலிஜொலிக்க
ஊருடன் உறவுடன் ஒன்றாகி
நானிலம் நலம்பெற வாழ்த்திடுவோம்!
அகஇருள் அகன்று ஒளி பெறட்டும்!
முகம்மிகும் அன்பால் பொலிவுறட்டும்!
தீயன யாவையும் திசைநடுங்க
தீபஒளிதனில் கருகிடட்டும்!
ஆயிர மாயிரம் விளக்கேற்றி
அவனியில் அன்பெனும் ஒளியேற்றி
ஆடியும் பாடியும் கொண்டாடுவோமே
ஆனந்தமான தீபாவளி!
--கவிநயா
பி.கு. இந்தப் பாடலுக்கும், இந்தக் கண்ணன் பாடலுக்கும் எங்க ஊர் ஆஸ்தான இசையமைப்பாளர் மீனா இசையமைக்க எங்க ஊர் தமிழ்ச் சங்கத்துக்காகப் பாடப் போறோம். ஒலிப்பதிவை அப்புறமா (நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு)வலையேத்தறேன் :)
அருமையான தீபாவளி வாழ்த்துக்கள் கவிதை.
ReplyDeleteவாழ்த்தோடு கவி சொல்லும் இனிய சேதியும் அருமை கவிநயா.
ReplyDelete//அகஇருள் அகன்று ஒளி பெறட்டும்!
முகம்மிகும் அன்பால் பொலிவுறட்டும்!//
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
[ஒலிவடிவம் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.]
ஆயிர மாயிரம் விளக்கேற்றி
ReplyDeleteஅவனியில் //அன்பெனும் ஒளியேற்றி
ஆடியும் பாடியும் கொண்டாடுவோமே
ஆனந்தமான தீபாவளி//
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கவிநயா.
உங்களுடன் சேர்ந்து அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். தோழியர் மீனாவுக்கும் எங்களது தீபாவளி வாழ்த்துக்களைத் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜீவி ஐயா! எல்லோருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteபாட்டு படு சூப்பர்!
-Meena
உங்களுக்கும், மற்ற எல்லா நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் கவிக்கா...
ReplyDelete//ஆயிர மாயிரம் விளக்கேற்றி
அவனியில் அன்பெனும் ஒளியேற்றி//
மிக அழகான வரிகள்....
வருக சதங்கா. நன்றி.
ReplyDeleteவாங்க ராமல்க்ஷ்மி. உங்க தீபாவளியும் இனியதாக இருந்திருக்கும்னு நம்பறேன். ரசனைக்கு நன்றி.
ReplyDeleteவருக கைலாஷி. வாழ்த்துகளுக்கு நன்றி.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி ஜீவி ஐயா.
ReplyDeleteவாங்க மீனா. நன்றி. தமிழ் தட்டச்சுல கலக்கிட்டீங்க :)
ReplyDeleteவாங்க மௌலி. ரசனைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஒலிவடிவம் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.. :)
வாழ்த்துக்கும் ஆர்வத்துக்கும் நன்றிகள் சரவணகுமார் :)
ReplyDeleteநல்ல பாடல். தீபாவளிக்கு ஊருக்கு சென்றுவிட்டதால் வலை நண்பர்கள் யாருக்கும் தீபாவளி வாழ்த்துச் சொல்ல முடியவில்லை. எனினும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ரமேஷ். உங்க தீபாவளியும் இனியதாக இருந்திருக்கும்னு நம்பறேன்.
ReplyDeleteகவிநயா, ஒளியும் வாழ்க்கையும் சேர்ந்து அழகான கவிதை வடிவத்தில் வந்துவிட்டட்தா.
ReplyDeleteவெகு அருமை கவிநயா.
மிண்டும் வாழ்த்துகள்.
அடடே, வல்லிம்மா. வாங்க வாங்க. உங்க வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் :)
ReplyDeleteபாடல் மிக அருமை. மிக அழகிய சொற்சேர்க்கை. வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க அகரம்.அமுதா. ரொம்ப நாள் கழிச்சு உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி :)
ReplyDelete