நான்முகனின் நாயகியே நாமகளே நலம்தருவாய்!
நாமணக்க பாடுகின்றேன் நாரணியே மனம்கனிவாய்!
நாதவடி வானவளே ஐந்தவியே அலர்மகளே
பாதமலர் பணிந்துன்னை பாடுகின்றேன் கலைமகளே
சீதள மதி முகத்தை சிந்தையிலே நிறுத்துகின்றேன்
பூதலத்தை ஆளுகின்ற பூவை உன்னை போற்றுகின்றேன்!
வேதவடி வானவாளே வித்தகியே உத்தமியே
பேதமில்லா பிள்ளை நெஞ்சில் வாழும் ப்ரம்மன் பத்தினியே
தித்திக்கும் தெள்ளமுதே தீந்தமிழே தேன்மொழியே
பக்திக்கு வித்தாகும் பசும்பொன்னே பைங்கிளியே!
ஞானவடி வானவளே பாமகளே பைரவியே
வானவரும் தானவரும் வணங்கிடும் வசுந்தரியே
கானமழை பொழிந்துன்னை காலமெல்லாம் போற்றிடவே
ஞாலமெல்லாம் விளங்குகின்ற நாயகியே அருள்வாயே!

--கவிநயா
ஹைலஜா அக்கா இந்த பாடலை பாடித் தந்திருக்காங்க. கேட்டு கருத்து சொல்லுங்க. ஷையக்காவிற்கு நன்றிகள் பல.
Saraswathi_song.wa... |
//வேதவடி வானவாளே வித்தகியே உத்தமியே
ReplyDeleteபேதமில்லா பிள்ளை நெஞ்சில் வாழும் ப்ரம்மன் பத்தினியே
தித்திக்கும் தெள்ளமுதே தீந்தமிழே தேன்மொழியே
பக்திக்கு வித்தாகும் பசும்பொன்னே பைங்கிளியே!//
மிக அழகாக சரஸ்வதியை கண்முன் கொண்டுவரும் வரிகள். அருமை கவிக்கா.
நல்ல கவிதை கவிநயா. நவராத்திரி சிறப்பு தமிழ் விருந்து தொடரட்டும்.
ReplyDelete"நான்முகனின் நாயகியே !"
ReplyDeleteஷண்முகப்பிரியா ராகத்தில் இப்பாடலைக்
கேட்க,
http://menakasury.blogspot.com
subbu rathinam.
thanjsai.
நவராத்திரி சமயத்தில் முப்பெரும் தேவியருக்கும் மூன்று முத்தான பாடல்கள்.
ReplyDeleteஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
வாழ்த்துக்கள்
வாங்க மௌலி. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் :)
ReplyDeleteவாங்க ரமேஷ். மிக்க நன்றி :)
ReplyDeleteபாடல் அருமை தாத்தா. மிக்க நன்றி!
ReplyDeleteவாங்க கைலாஷி. மிக்க நன்றி!
ReplyDeleteஓம் சக்தி!
சரஸ்வதி பூஜையன்று அன்னையைப் பற்றிய பாடலைப் படித்துவிட்டேன். மிக்க மகிழ்ச்சி. :-)
ReplyDeleteநல்லது குமரா. மிக்க நன்றி :)
ReplyDeleteஷைலஜா அக்கா இந்த பாடலை ராகமாலிகால பாடித் தந்திருக்காங்க. பதிவுல இணைச்சிருக்கேன். கேட்டு கருத்துகளை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கறேன்.
ReplyDeleteநாமணக்கப் பாடி நாமெல்லாம் நாமகளின் பூரண அருளைப் பெற அற்புதமான பாடலைத் தந்ததோடு ஷைலஜாவின் குரலின் தேன்மழையும் பொழிய வைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாங்க ராமலக்ஷ்மி. பாடலை படித்ததற்கும் கேட்டதற்கும் நன்றி!
ReplyDelete