நிஜம்
நிமிர்ந்து ஜொலிக்கிறது நெருப்பு!
நீண்டு வளைந்து வானத்தை
எட்டி முத்தமிடும் உத்தேசத்துடன்...
என்ன வனப்பு! என்ன கம்பீரம்!
நெற்றிக் கண்ணில் பிறந்த நெஞ்சுரமோ
சீதையையும் சிதையிலேந்திய கருவமோ
தன்பலம் தானறிந்த தைரியமோ
ஏதோ ஒன்று...
தகதகத்து நகைநகைத்து
தன்னெழிலில் தானே மயங்கி
சுற்றியுள்ள உயிர்களெல்லாம்
சூழ்ந்து நின்று பார்த்திருக்க
கண்கவரும் ஜ்வாலையுடன்
கடலலைபோல் ஆர்ப்பரித்துக்
கருத்தை மயக்கும்
கொள்ளை அழகுடன்
ஜொலிக்கிறது!
பக்கத்திலே போய்
பாசமுடன் தொடுகையில்தானே
தெரிகிறது நெருப்பின் குணம்...
--கவிநயா
நெருப்பினை வியந்து பாடி கூடவே
ReplyDeleteபொறுப்புடன் அதன் குணத்தைக் கூறி
எச்சரிப்பாய் முடித்திருப்பது அருமை.
//நெற்றிக் கண்ணில் பிறந்த நெஞ்சுரமோ
ReplyDeleteசீதையையும் சிதையிலேந்திய கருவமோ
தன்பலம் தானறிந்த தைரியமோ
ஏதோ ஒன்று...
தகதகத்து நகைநகைத்து
தன்னெழிலில் தானே மயங்கி//
மிக அருமையான வரிகள் கவிக்கா!!...சூப்பர்.
நெருப்பு அழகியது. நானும் பல முறை ரசித்ததுண்டு. கவிதை நன்று. நெற்றிக் கண்ணில் தொன்றிய நெஞ்சுரம் தான் போலிரிக்கிறது.:)
ReplyDelete"தகதகத்து..
ReplyDeleteஜொலிக்கிறது.."
'விருவிரு'வென்று வார்த்தைகள் வரிகளாய் ஓடி, 'திகுதிகு'வென்று நெருப்பைப் போலவே முடிந்திருக்கின்றன.
தீக்குள் விரலை வைத்தால்,
நந்தலாலா...
வார்த்தை வழி காட்சி அனுபவம் சுவையாக சூடாக இருந்தது கவிநயா ...வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் ....நானும் ஒரு வலைபூ வளர்க்கிறேன் பாருங்களேன்
ReplyDeletevalaikkulmazhai.wordpress.com
-கார்த்தி
மிக்க நன்றி ராமலக்ஷ்மி :)
ReplyDeleteரசனைக்கு மிக்க நன்றி மௌலி :)
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி ரமேஷ் :)
ReplyDeleteவருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா :)
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி கார்த்தி :)
ReplyDeleteஉங்க பூவைப் போய்ப் பார்த்தேன். நல்லா வாசனையா இருந்தது. 'ஜோடி'யையும் 'நிலாச்சாரலை'யும் ரசித்தேன் :) ஆனா பின்னூட்டம் இடறதுக்குதான் பெயர், மின்னஞ்சல், இப்படி எல்லாமே குடுக்கணும் போல...
இறுதி பந்தி....நிஜம்..
ReplyDeleteநல்ல பதிவு
good one
ReplyDelete//பக்கத்திலே போய்
ReplyDeleteபாசமுடன் தொடுகையில்தானே
தெரிகிறது நெருப்பின் குணம்...//
அதன் வலி, கொடுமை..
நல்லா எழுதி இருக்கீங்க கவிநயா..
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteஎன்.கணேசன்
வாங்க தூயா. மிக்க நன்றி :)
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சரவணகுமார் :)
ReplyDeleteநல்வரவு கணேசன். முதல் வரவுக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி :)
ReplyDelete/பக்கத்திலே போய்
ReplyDeleteபாசமுடன் தொடுகையில்தானே
தெரிகிறது நெருப்பின் குணம்.../
அருமையான வரிகள்
வாங்க திகழ்மிளிர். மிக்க நன்றி :)
ReplyDeleteஅன்பின் கவிநயா,
ReplyDeleteவாழ்வின் எல்லா வனப்புகளும் உள்ளே ஒரு தீயினை வைத்துக்கொண்டுதான் ஆங்கரித்துக் கொண்டிருக்கும். அது உபயோகமாவதும் பொங்கி அழிப்பதுவும் தொடும் விரல்களில் தங்கியிருக்கிறது.
அழகான வரிகள் சகோதரி. :)
வாங்க ரிஷான். உண்மையை கவித்துவமா சொல்லிட்டீங்க கவிஞரே. மிக்க நன்றி :)
ReplyDelete