Sunday, November 23, 2008

சின்னஞ் சிறிய அணிற் பிள்ளை...

குடுகுடுன்னு ஓடிக்கிட்டு, குட்டிக் கையில கொய்யாப் பழத்தை ஏந்திக்கிட்டு, கூர் பல்லால நறுக் நறுக்னு கடிச்சிக்கிட்டு, துறுதுறுன்னு திரியற அணிலை வேடிக்கை பார்க்க எனக்குப் பிடிக்கும்! உங்களுக்கு?



சின்னஞ் சிறிய அணிற் பிள்ளை
சுறு சுறுப்பாகச் சுற்றி வரும்

துறு துறுவென்ற கண்களினால்
சுற்றுப் புறத்தை நோட்டம் விடும்

பக்குவமான கொய்யாக் கனியைக்
கண்டு பிடித்துக் கடித்துண்ணும்

பாவம் மனிதர் என்றெண்ணி
மீதம் கொஞ்சம் வைத்து விடும்

வாசல் சற்றே திறந்திருந்தால்
குடு குடுவென உள் புகுந்து விடும்

வெளியேறும் வழி தெரியாவிடில்
திரு திருவெனவே விழித்து நிற்கும்

சிறிய உதவி செய்திடினும்
பெரிய மனதைப் பெற்றதினால்

மனித தெய்வம் ராமனுக்கு
பிரிய முடையதாய் ஆனதுவே

நாமும் தினமும் அது போலே
பிறர்க்கு உதவி மகிழ்ந்திடுவோம் !

--கவிநயா

படத்துக்கு நன்றி - http://www.flickr.com/photos/yeliseev/2748470727/sizes/m/

28 comments:

  1. அணிற் பிள்ளையை ஆருக்குத்தான் பிடிக்காது. துறுதுறு அணிலை ரசித்து விறுவிறுவென விவரித்து.. முடிவில் சொன்ன சேதி சூப்பர் கவிநயா!

    ReplyDelete
  2. சென்ற தடவை அமெரிக்கா சென்றிருந்த பொழுது, முதுகில் மூன்று கோடிகளில்லா அணில்களை ஆர்வத்துடன் பார்த்தேன். கோடிகளில்லையே தவிர, அத்தனை குண நலன்களும், கோடுகள் உள்ளது போலதான்.
    குழந்தைகளுக்கான கவிதைகளை எழுதும் பொழுதும், எழுதியவற்றைப் படிக்கும் பொழுதும், குழந்தை மனமே
    பெரியவர்களான பின்னும் நம்மை ஆக்கிரமித்துக் கொள்வதால், அப்படிப்பட்ட கவிதைகளை அதிகம் எழுதுவதும், படிப்பதும் மனசுக்கு ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
    க்டைசியில் சொன்ன கருத்து,
    வெற்று கவிதைகளையும் இதையும்
    வேறுபடுத்திக் காட்டுகிறது.
    மிக்க நன்றி, கவிநயா!

    ReplyDelete
  3. //பாவம் மனிதர் என்றெண்ணி
    மீதம் கொஞ்சம் வைத்து விடும் //

    கவிநயாவின் கவிநயம் ரொம்பவே அழகு

    ReplyDelete
  4. //பாவம் மனிதர் என்றெண்ணி
    மீதம் கொஞ்சம் வைத்து விடும்//

    ஆழ்ந்த கவனிப்பு! நல்லா இருக்கு, அணிலையும், அது வெடுக் வெடுக்குனு கத்தறதையும் கேட்டுட்டே தான் மத்தியானம் பொழுதே கழிப்பது! ஒரு நாள் அந்தக் கூப்பாடு இல்லைனால் மனசே வெறிச்சிட்டுப் போகும்!

    ReplyDelete
  5. இந்தப் பாட்டு 'பாப்பா பாட்டு' வரிசையில் ஒன்றா அக்கா?

    நேற்று தான் 'கைவீசம்மா கைவீசு' பாட்டை மகளுக்குச் சொல்லிக் கொடுக்க முயன்றேன். தமிழ் கொஞ்சம் கொஞ்சம் (சன் தொலைக்காட்சியின் உதவியால்) மட்டுமே தெரிவதால் கற்றுக் கொள்ள சரவலாக இருந்தது. மீண்டும் மீண்டும் முயல்கிறேன்.

    ReplyDelete
  6. ஓ. பாப்பா பாட்டுன்னு வகைப்படுத்தியிருக்கீங்களா. கவனிக்கலை. :-)

    ReplyDelete
  7. எளிமையான எழுத்து நடை... ஒவ்வொரு வரியும் என் கண் முன்னே திரையாய்...
    எளிமைக்கான அழகு உங்கள் வரிகளில் தெரிந்தது.

    ReplyDelete
  8. ரொம்ப அழகா வந்திருக்கு...கவிதாயினி கவிக்கா...

    ReplyDelete
  9. // வாசல் சற்றே திறந்திருந்தால்
    குடு குடுவென உள் புகுந்து விடும்

    வெளியேறும் வழி தெரியாவிடில்
    திரு திருவெனவே விழித்து நிற்கும் //


    இவ்வுல‌கிற்கு உள்ளே வ‌ரும் ஜீவ‌னெல்லாமே இப்ப‌டித்தானோ !
    இன்ன‌ல்ப‌ல‌ க‌ண்ட‌ பின்னே வெளியேறும் வாச‌ல் தெரியாம‌ல்
    திகைக்கும் த‌விக்கும் அவ‌ல‌ங்க‌ளோ !!

    இன்னொரு கோண‌த்தில் வ‌ள்ளுவ‌ன் கூறுவதும் அதுவே:

    குட‌ம்பை த‌னித்தொழிய‌ புள் ப‌ற‌ந்து அற்றே
    உட‌ம்போடு உயிர் இடை ந‌ட்பு.

    ஒரு உலக ந‌ட‌ப்பைச் சொல்லி ம‌ற்றோர் உண்மைத‌னைச்
    சொல்லாம‌ல் சொல்லும் த‌ங்க‌ள் திற‌ன்தான் என்னே !!

    சுப்பு ர‌த்தின‌ம்.

    ReplyDelete
  10. அருமையான, எளிமையான கவிதை.

    //அணிற் பிள்ளையை ஆருக்குத்தான் பிடிக்காது. //

    ரிப்பீட்டேய்ய்ய்ய் :))

    ReplyDelete
  11. ஆணி ரொம்ப ரொம்ம்ம்ப அதிகமா இருக்கதால பின்னூட்டங்களுக்கு உடனே பதிலிட முடியல. மன்னிச்சுக்கோங்க. பாப்பா பாட்டு படிச்சவங்களுக்கெல்லாம் மிக்க நன்றி. சீக்கிரமே வந்து பதிலிடறேன் :)

    ReplyDelete
  12. கலக்கல் பிளஸ் அழகு.. :)

    ReplyDelete
  13. //அணிற் பிள்ளையை ஆருக்குத்தான் பிடிக்காது. துறுதுறு அணிலை ரசித்து விறுவிறுவென விவரித்து.. முடிவில் சொன்ன சேதி சூப்பர் கவிநயா!//

    மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  14. வாங்க ஜீவி ஐயா.

    //சென்ற தடவை அமெரிக்கா சென்றிருந்த பொழுது, முதுகில் மூன்று கோடிகளில்லா அணில்களை ஆர்வத்துடன் பார்த்தேன்.//

    ஆமா, அதோட இங்கெல்லாம் நல்லா பெரீசா இருக்கும்.

    //அப்படிப்பட்ட கவிதைகளை அதிகம் எழுதுவதும், படிப்பதும் மனசுக்கு ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது.//

    சரியாச் சொன்னீங்க. குழந்தை பாடல்கள் குதூகலம் தருவது உண்மைதான்.

    வருகைக்கும் ரசனைக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  15. //கவிநயாவின் கவிநயம் ரொம்பவே அழகு//

    மிக்க நன்றி கபீரன்பன் ஐயா :)

    ReplyDelete
  16. வாவ்..அணில்குஞ்சைப் பற்றிய கவிதை..

    சிறுவயதில் வளர்த்திருக்கிறேன்..சிறு கரண்டிப் பால் கொடுத்து குஞ்சிலிருந்து வளர்க்கலாம். கொஞ்சம் வளரும் இடத்து மனிதர் மீது மிகவும் உரிமை எடுத்துப் பழகும்.. பழைய நினைவுகளைத் திருப்பிவிட்டீர்கள் சகோதரி :)

    ReplyDelete
  17. //நல்லா இருக்கு, அணிலையும், அது வெடுக் வெடுக்குனு கத்தறதையும் கேட்டுட்டே தான் மத்தியானம் பொழுதே கழிப்பது!//

    :)) வருகைக்கு நன்றி கீதாம்மா.

    ReplyDelete
  18. //நேற்று தான் 'கைவீசம்மா கைவீசு' பாட்டை மகளுக்குச் சொல்லிக் கொடுக்க முயன்றேன். தமிழ் கொஞ்சம் கொஞ்சம் (சன் தொலைக்காட்சியின் உதவியால்) மட்டுமே தெரிவதால் கற்றுக் கொள்ள சரவலாக இருந்தது.//

    முயன்று கொண்டே இருங்க. சீக்கிரமே சரளமாகவும் வரும் :) வருகைக்கு நன்றி குமரா.

    ReplyDelete
  19. //எளிமையான எழுத்து நடை... ஒவ்வொரு வரியும் என் கண் முன்னே திரையாய்...
    எளிமைக்கான அழகு உங்கள் வரிகளில் தெரிந்தது.//

    முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி அருள்!

    ReplyDelete
  20. //ரொம்ப அழகா வந்திருக்கு...கவிதாயினி கவிக்கா...//

    மிக்க நன்றி மௌலி :)

    ReplyDelete
  21. //இவ்வுல‌கிற்கு உள்ளே வ‌ரும் ஜீவ‌னெல்லாமே இப்ப‌டித்தானோ !
    இன்ன‌ல்ப‌ல‌ க‌ண்ட‌ பின்னே வெளியேறும் வாச‌ல் தெரியாம‌ல்
    திகைக்கும் த‌விக்கும் அவ‌ல‌ங்க‌ளோ !!//

    நான் சாதாரணமாதான் எழுதினேன், ஆனா நீங்க ரொம்ப அழகான பொருள் சொல்லீட்டிங்க. உண்மைதானே? வருகைக்கு நன்றி தாத்தா. உங்களுடைய, பாட்டியுடைய உடல் நலம் இப்போ பரவாயில்லையா?

    ReplyDelete
  22. //அருமையான, எளிமையான கவிதை.//

    வருகைக்கும் ரிப்பீட்டுக்கும் நன்றி சதங்கா.

    ReplyDelete
  23. //பழைய நினைவுகளைத் திருப்பிவிட்டீர்கள் சகோதரி :)//

    அதென்னவோ பழைய நினைவுகளுக்குத்தான் ருசி அதிகமா இருக்கு :) வருகைக்கு நன்றி ரிஷான்.

    ReplyDelete
  24. //கலக்கல் பிளஸ் அழகு.. :)//

    வாங்க சரவணகுமார். ரசனைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  25. //பாவம் மனிதர் என்றெண்ணி
    மீதம் கொஞ்சம் வைத்து விடும்//
    சிரிப்பு தாங்கலை! எனக்கு ரொம்ப பிடிக்கும்!
    அதுகளோட பேசுவேன். என்ன- அதுகள் பேசினா புரிஞ்சுக்க முடியலை. அதனாலென்ன?
    :)

    ReplyDelete
  26. //சிரிப்பு தாங்கலை! எனக்கு ரொம்ப பிடிக்கும்! அதுகளோட பேசுவேன். என்ன- அதுகள் பேசினா புரிஞ்சுக்க முடியலை. அதனாலென்ன? :)//

    :)) வாங்க திவா. ரசனைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  27. //சிறிய உதவி செய்திடினும்
    பெரிய மனதைப் பெற்றதினால்

    மனித தெய்வம் ராமனுக்கு
    பிரிய முடையதாய் ஆனதுவே//

    :) நல்ல வரிகள். அப்படியே அவர் போட்ட கோடு பற்றியும் எழுதியிருக்கலாமே.. அணிலை வேடிக்கைப் பார்க்க எனக்கும் பிடிக்கும்.

    குழந்தைகளுக்காக பாட்டெழுதும் உங்கள் முயற்சியை மனதார பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  28. வாங்க ரமேஷ். ராமர் பற்றி எழுதினா உங்களுக்குப் பிடிக்கமயா? அந்த வரி தட்டச்சும்போது உங்க நினைவு வந்தது :) ஊக்கத்திற்கும் ரசனைக்கும் நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)