தண்ணியில தாமரப்பூ
தள்ளாடி மறுகுதடி
சேத்துவச்ச சேறுஅத
உள்ளுக்குள்ள இழுக்குதடி
சிக்கிக்கிட்ட தாமரக்கு
தப்பவழி இல்லயடி
கத்துக்கிட்ட பாடம்ஒண்ணும்
கைகுடுக்க வில்லயடி
ஆனாலும் தாமரப்பூ
அசந்துபோக வில்லயடி
மறுகித் தொவளும்போதும்
மனஞ்சளக்க வில்லயடி
மூச்சப் புடிச்சிக்கிட்டு
மேலஎட்டிப் பாக்குதடி
பச்சப் புள்ளயப்போல
பளிச்சுன்னுதான் சிரிக்குதடி!
--கவிநயா
எண்ணி எண்ணி வியக்குறேன்-இந்தத்
ReplyDelete"தண்ணியில தாமரப்பூ" சொல்லித்
தர்ற பாடமது எத்தனை எத்தனை
உசந்ததடி உள்ளமும் நிறைஞ்சதடி
//ஆனாலும் தாமரப்பூ
அசந்துபோக வில்லயடி
மறுகித் தொவளும்போதும்
மனஞ்சளக்க வில்லயடி
மூச்சப் புடிச்சிக்கிட்டு
மேலஎட்டிப் பாக்குதடி
பச்சப் புள்ளயப்போல
பளிச்சுன்னுதான் சிரிக்குதடி!//
இந்த வரிகளைப் வாசிக்கையில்
நொந்த மனங்கள் சிரிக்குமடி!
வாவ்.. கவி.. என்ன அழகா சொல்லியிருக்கீங்க.. நல்ல நடை.. நல்ல கருத்து.. மிக ரசித்தேன் :)
ReplyDeleteநல்ல கவிதை கவிநயா. சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் தாமரையை பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது. "தாமரை இந்திய ஆன்மிகத்தில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. காரணம் தாமரை சாக்கடையில் இருந்து மலர்கிறது. எனினும் அது சாக்கடையாக மாறுவதில்லை. மாறாக சாக்கடையையே ஆகாரமாக கொண்டு தன்னை ஒரு வாசமுள்ள மலராக மாற்றிக் கொண்டுவிடுகிறது. இந்த உலகம் ஒரு சாக்கடை. இந்த சாக்கடையிலிருந்து நம்மால் ஓடிவிட முடியாது. வேறு வழி தெரியாமல் பெரும்பாலானோர் சாக்கடையாகவே மாறிவிடுகிறார்கள். சாக்கடையிலிருந்து தப்ப முடியாது என்பது தெரிந்தும் சாக்கடையாக மாறிவிடக் கூடாது என வைராக்கியம் கொண்டவர்கள் எப்படியும் தாமரைகளாக மலர்ந்து விடுகிறார்கள். அப்படிப் பட்ட தாமரைகள் இறைவன் சன்னிதியை சென்று சேர்கின்றன." இவ்வள்வு பெரிய விஷ்யத்தை எவ்வளவு அழகாக சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteகவிதை, கவிதை. வாழ்த்துகள்!
ReplyDeleteஅழகிய தாமரைப்பூ, அதனுள் இத்தனை எண்ணங்களா?...வியக்கிறேன்.. :)
ReplyDelete// மூச்சப் புடிச்சிக்கிட்டு
ReplyDeleteமேலஎட்டிப் பாக்குதடி//
எட்டிப்பாத்த தாமரய
" என்ன சேதி சொல்லு " என்றேன்.
"கவி நயா பாடுறாக
கேக்க நான் மேல வந்தேன்."
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பி.கு: அது என்ன பின்னோட்டங்களோடு ஏகப்பட்ட இலக்கங்களுடன்
மறுமொழி வருகிறது !!
http://in.youtube.com/watch?v=ft07NUQ35c8
ReplyDeletepl see
subbu rathinam
thanjai
ஆஹா, அழகு கவிதைப் பின்னூட்டத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி!
ReplyDeleteவாங்க கோகுலன். ரொம்ப நாளாச்சு பார்த்து :) ரசிச்சதுக்கு நன்றி.
ReplyDeleteவருக ரமேஷ். வழக்கம் போல கரெக்டா பாயிண்ட்டைப் பிடிச்சிட்டீங்க :) நீங்களும் அழகா சுருக்கமா சொல்லீட்டிங்க. மிக்க நன்றி.
ReplyDeleteநன்றி அகரம்.அமுதா :)
ReplyDeleteவாங்க மௌலி. கவிதை படிச்சதுக்கும் ரசிச்சதுக்கும் மிக்க நன்றி :)
ReplyDeleteவாங்க சுப்பு தாத்தா. கவிதை வாசிச்சதுக்கும், வழக்கம் போல இசையமைச்சதுக்கும் மிக்க நன்றி!
ReplyDeleteஅடடா...தாமரை மாதிரியே உங்க கவிதையும் மணம் வீசுது...ரொம்ப ரசிச்சு படிச்சேன்...வாழ்த்துக்கள்...!
ReplyDeleteஅட, நிஜமா நல்லவரா? இதென்ன வெண்புறா பின்னூட்டமா? எப்படியோ நிஜமாவே விடை பெறாதது குறித்து சந்தோஷம் :) கவிதை படிச்சதுக்கு நன்றி.
ReplyDelete"தண்ணியில தாமரப்பூ" க்கு பதிலாக தாமரப்பூ நல்லா இருக்குமோ
ReplyDeleteவித்தியாசமா இருக்கு..
ReplyDelete:))
வருக குடுகுடுப்பையாரே. நீங்க சொல்றது புரியலயே :( தலைப்பை சொல்றீங்க போல. முதல் வருகைக்கு நன்றி.
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றிங்க சரவணகுமார் :)
ReplyDeleteவித்தியாசமான கற்பனை கவிநயா.
ReplyDeleteஅழகான எண்ணங்கள் கவியாகியிருக்கிறது சகோதரி.
நன்றி ரிஷான் :)
ReplyDeleteஅடடா. அருமையா சொன்னீங்க அக்கா. :-)
ReplyDeleteவாங்க குமரா. நன்றி! நட்சத்திர 'hang over' (தமிழ்ல என்ன?) முடிஞ்சிருச்சா? :)
ReplyDeleteபாட்டு சூப்பர். யூ ட்யூபில் பார்த்தேன்.
ReplyDeleteசுப்பு தாத்தா சார்பில் நன்றி ரமேஷ்.
ReplyDelete