இன்றைக்கு வரலக்ஷ்மி நோன்பு. ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயாருடைய 108 திவ்ய நாமாவளியில கடைசி நாமம் "ஓம் புவனேஸ்வர்யை நமஹ!" அப்படிங்கிறது. அந்த புவன மாதாவை நினைச்சு எழுதின பாடலை இங்கே பதியறேன். படத்திலும் அவளே. (படத்தை க்ளிக்கி பார்க்க மறக்க வேண்டாம்!).
அது மட்டுமில்லாம எனக்கு தோணின மெட்டுல நானே பாடியும் இருக்கேன். யாருப்பா அது... தடதடன்னு ஓடறது?! அட, ஓடாதீங்கப்பா..! ஜகன்மாதாவே கேட்கிறாதானே :) ரொம்ப சிரமமா இருந்தா கண்ணை மூடிக்கிட்டு கேளுங்க! :))
அது மட்டுமில்லாம எனக்கு தோணின மெட்டுல நானே பாடியும் இருக்கேன். யாருப்பா அது... தடதடன்னு ஓடறது?! அட, ஓடாதீங்கப்பா..! ஜகன்மாதாவே கேட்கிறாதானே :) ரொம்ப சிரமமா இருந்தா கண்ணை மூடிக்கிட்டு கேளுங்க! :))
பொன்னை நிகர்த்த.wa... |
பொன்னை நிகர்த்த மேனி
கோடிச் சூரியராய் ஜொலிக்க
கண்ணை நிகர்த்தவளே
உன்னைக் காணவே ஓடிவந்தேன்
புன்னகை பார்த் திருந்தேன்
உந்தன் பூமுகம் பார்த்திருந்தேன்
என்னை மறந் திருந்தேன்
உன்னை ஏற்றி மகிழ்ந்திருந்தேன்
மலர்முகம் பார்த் திருந்தேன்
முழு மதிமுகம் பார்த் திருந்தேன்
கனவினில் ஆழ்ந் திருந்தேன்
உந்தன் நினைவினில் தோய்ந்திருந்தேன்
பண்கள் பல பாடி
தினம் போற்றித் துதிக்கின்றேன்
கண்கள் திறவாயோ
அம்மா கருணை செய்வாயோ
புவி எல்லாம் ஆளுகின்ற
எழில் புவனத்தின் ஈஸ்வரியே
என்னையும் ஆண்டு கொள்வாய்
அம்மா இன்னும் தாமதம் ஏன்?
--கவிநயா
//என்னையும் ஆண்டு கொள்வாய்
ReplyDeleteஅம்மா இன்னும் தாமதம் ஏன்?
//
மங்களகரமாக உங்கள் வலைத்தளத்துடன் ஆரம்பமாகிறது நாள்.
வரிகளும் குரலும் நன்றாயிருக்கின்றன.
நானும் வேண்டிக்கொள்கிறேன்.
வரலஷ்மி விரத நாள் அதுவுமா சூப்பர் பதிவு ! அம்மா(என்னை பெற்றவளும்+என்னை காப்பவளும்) நியாபகம் வந்திருச்சு :)
ReplyDeleteஹிம்ம் பாட்டு எல்லாம் ரொம்ப அழகாவே இருக்கே..இனிமையா இருக்குங்க உங்க குரல் :)
ஸ்ரீ வரலஷ்மி நோஸ்துப்யம்....பாடலுடன் நான் நாளைத் துவங்கி இங்கு வந்தால் பொன்னை நிகர்த்த அன்னை...புவனத்தின் ஈஸ்வரி எல்லோருக்கும் அருளட்டும்..
ReplyDeleteநல்ல பாடல், நல்லாப் பாடியிருக்கீங்க..
வாழ்த்துக்கள்..
//கனவினில் ஆழ்ந் திருந்தேன்
ReplyDeleteஉந்தன் நினைவினில் தோய்ந்திருந்தேன்
பண்கள் பல பாடி
தினம் போற்றித் துதிக்கின்றேன்.//
கனவினில் ஆழ்ந்து நினைவினில் தோய்ந்து மருகி எழுதியதை குரலில் தேன் குழைத்து உருகிப் பாடி போற்றித் துதித்திருக்கிறீர்கள்.
//எழில் புவனத்தின் ஈஸ்வரியே
என்னையும் ஆண்டு கொள்வாய்
அம்மா இன்னும் தாமதம் ஏன்?//
வந்திடுவாள் விரைந்து.. வாழ்த்துக்கள்!
//பொன்னை நிகர்த்த மேனி
ReplyDeleteகோடிச் சூரியராய் ஜொலிக்க
கண்ணை நிகர்த்தவளே
உன்னைக் காணவே ஓடிவந்தேன்//
எடுத்தவுடனே, தயங்காமல், சட்டென்று கோடி சூர்யப்பிரகாசம் கண்டு, எடுப்பாக எடுத்திருக்கிறீர்கள்..
இன்று வரலெஷ்மி அம்மன் பூஜை முடிந்ததும் உங்கள் குழந்தைக்குரலும் எங்கள் வீட்டில் ஒலித்தது..
மிக்க நன்றி.
அழகான கவிதை. இனிமையான குரல். இறைவியை தாயாகவே நீங்கள் கருதுவது உங்கள் எல்லா கவிதைகளிலும் தெரிகிறது. ஒலிப்பதிவு முடிந்தவுடன் சத்தத்தை கொஞ்சம் அதிகரிக்கவும்.
ReplyDeleteதாயார் படம் கொள்ளை அழகு. :)
ReplyDeleteநல்லா இருந்ததுங்க, வாழ்த்துக்கள்!
ReplyDelete//மங்களகரமாக உங்கள் வலைத்தளத்துடன் ஆரம்பமாகிறது நாள்.//
ReplyDelete:)) நாளும் பொழுதும் நலமே இருக்க அன்னை அருள்வாள். உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி :) நன்றி நிர்ஷன்.
//அம்மா(என்னை பெற்றவளும்+என்னை காப்பவளும்) நியாபகம் வந்திருச்சு :)//
ReplyDeleteஎனக்கும்! அம்மாவை அழைத்து பேசினீங்களா? :) வருகைக்கும் ரசனைக்கும் நன்றி ரம்யா.
//பொன்னை நிகர்த்த அன்னை...புவனத்தின் ஈஸ்வரி எல்லோருக்கும் அருளட்டும்..//
ReplyDeleteததாஸ்து! நன்றி மௌலி. நீங்கள் கொடுத்த ஊக்கத்தினாலேயே என் குரலிலிலேயே பாடலைப் பதியத் துணிந்தேன். அன்புக்கு மீண்டும் நன்றி :))
//வந்திடுவாள் விரைந்து.. வாழ்த்துக்கள்!//
ReplyDeleteநீங்கள் இப்படி சொல்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. தவறாமல் வந்து அன்பை வழங்கும் உங்களுக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி!
//எடுத்தவுடனே, தயங்காமல், சட்டென்று கோடி சூர்யப்பிரகாசம் கண்டு, எடுப்பாக எடுத்திருக்கிறீர்கள்..
ReplyDeleteஇன்று வரலெஷ்மி அம்மன் பூஜை முடிந்ததும் உங்கள் குழந்தைக்குரலும் எங்கள் வீட்டில் ஒலித்தது..
மிக்க நன்றி.//
என் குரலையும் கேட்டிருக்கிறீர்களே. உங்களுக்கல்லவா நான் நன்றி சொல்ல வேண்டும்! குழந்தைக் குரல் என்றதும் புன்னகை பிறந்தது :) ரசனைக்கு மிக்க நன்றி ஜீவி ஐயா.
//அழகான கவிதை. இனிமையான குரல். இறைவியை தாயாகவே நீங்கள் கருதுவது உங்கள் எல்லா கவிதைகளிலும் தெரிகிறது. ஒலிப்பதிவு முடிந்தவுடன் சத்தத்தை கொஞ்சம் அதிகரிக்கவும்.//
ReplyDeleteஉங்கள் புரிதல் எப்போதும் எனக்கு ஆச்சர்யம் அளிப்பது. ஒலிப்பதிவில் அடுத்த முறை (என்று ஒன்று இருந்தால் :) மேலும் கவனம் செலுத்துகிறேன். அன்புக்கு மிக்க நன்றி ரமேஷ்!
//தாயார் படம் கொள்ளை அழகு. :)//
ReplyDelete:)))
//நல்லா இருந்ததுங்க, வாழ்த்துக்கள்!//
ReplyDeleteநன்றிங்க ஜீவா!
மதுரை மீனாட்சி வஸந்த ராகத்தில் வருவாள்.
ReplyDeleteமஹாலட்சுமியான வரலட்சுமியோ
அழகான ஆபோஹியில்
ஆரோகணிப்பாள்.
யூ ட்யூபிலே ( மதுரை மீனாட்சி என்று கூப்பிடுங்கள் )
யாவரும் காண, இல்லை கேட்க வாருங்கள்.
சுப்பு தாத்தா.
( ரயில் பயணத்தில், ஓசி லேப் டாப்பில் )
வாங்க சுப்புரத்தினம் ஐயா. உங்களை பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். மதுரை மீனாட்சியைக் கண்டு பிடிச்சிட்டேன். வஸந்த ராகத்தில் இனிமையாக ஒலித்தாள் :) ஆனா வரலக்ஷ்மியை கண்டு பிடிக்கமுடியல :(
ReplyDeletehttp://in.youtube.com/watch?v=OHO3wdE-NLI
ReplyDeleteSee varalakshmi song here (in raag abhohi)
and
madurai meenakshi song in raag vasamtha here
http://in.youtube.com/watch?v=WxDbr0E3060
subbu thatha
thanjai.
PS: In the absence of a quality singer, I have myself sung this.
ஆபோஹியில் ஆரோகணித்த வரலக்ஷ்மியையும் தரிசித்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி சுப்பு தாத்தா.
ReplyDeleteஉங்களது
ReplyDeleteமதுரை மீனாட்சி பாடலுக்கு
கிராமீய இசையிலே ( folk music )
ட்யூன் போடப்பட்டு இரு குழந்தைகள்
நடனமாடுவதை ? கொட்டமடிப்பதை !!
இங்கே பாருங்கள்.
http://in.youtube.com/watch?v=GyWn8JAVLDs
சுப்பு தாத்தா.
தஞ்சை.
ஆகா. மிக அழகாக இருந்தது பாடலும் குரலும்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சியும் நன்றியும் குமரா :)
ReplyDelete