சமீபத்தில் பூ வனத்தில் ஜீவி ஐயா வரம் என்னும் சிறுகதை எழுதியிருந்தார். அந்தக் கதை, நீண்ட நாட்களுக்கு முன் அதே கருத்தைக் கொண்டு நான் எழுதிய இந்தக் கவிதையை நினைவுபடுத்தியது. வலைபூவில் பதிவதாக அவரிடமும் கூறியிருந்தேன். அதன்படி...
ஏக்கம்
அடுத்த வீட்டுச் சிறுவன்
அறிவுக் களஞ்சியம்;
பக்கத்து வீட்டுச் சிறுமி
பாடினால் குயிலினம்;
நாத்தனாரின் புதல்வி
நாட்டியத்தில் நாயகி;
கொழுந்தனாரின் மைந்தனோ
கராத்தேயில் ப்ளாக் பெல்ட்.
என் பிள்ளைகள் இரண்டும் மட்டும்
எதிலும் இல்லையே
என்று இவள் ஏங்குகையில்,
என் பிள்ளை எதில் என்று
ஏங்க மாட்டேன் நிச்சயம்
எனக்கொரு பிள்ளை வரம்
மட்டும் கிடைத்து விட்டால்...
அதுவே பெரும் பாக்கியம்
என்று அவள் ஏங்குகிறாள்!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/chrisanddave/510847809/sizes/m/#cc_license
இருப்பவர்க்கு அதன் அருமை புரிவதில்லை எல்லா விஷயங்களிலும்தான். இல்லாதவரின் ஏக்கத்தை உணர்ந்தால் எல்லாமே நமக்கு அருமையாகி விடும் இல்லையா கவிநயா?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபதினேழே வரிகளில் பாங்காக அந்தத் தாயின் ஏக்கத்தைப் பதிவு செய்து விட்டீர்கள்..
ReplyDeleteஇயல்பாக வார்த்தைகள் வந்து விழுந்து அற்புதம் படைத்திருக்கின்றன.
தமிழைப் பருகிக் சுவைக்கும் ஆவலில், இன்னும் இன்னும் அவை போய்க்கொண்டேயிருக்காதா என்கிற ஏக்கம் தான் மிஞ்சுகிறது.
'திகழ்மிளிரும்' அழகழகான வரிகளுக்கு சொந்தக்காரராய் பிரமாதப்படுத்திவிட்டார். ஒரு கவிதைக்கு இரு கவிதைகள் இப்பொழுது 'ஏக்க'த்திற்கு.
இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை சகோதரி..!
ReplyDeleteஇறுதிவரிகளைப் படிக்கும் போது மனதில் இனம்புரியாத சோகம் தொற்றிக்கொள்கிறது. கவிதை அருமை.
ReplyDeleteநல்ல கருத்துள்ள கவிதைகள் - இடுகையிலும் பின்னூட்டத்திலும். :-)
ReplyDeleteஅருமையான கருத்து + கவிதை கவிநயா :))
ReplyDeleteஉண்மைதான் ராமலக்ஷ்மி. இல்லாததை நினைத்து ஏங்குவதே மனித இயல்பு. வருகைக்கு நன்றி.
ReplyDeleteஅசத்திட்டீங்க திகழ்மிளிர். "உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" என்கிற கவியரசோட வரிகள் நினைவுக்கு வருது, உங்கள் கவிதை வரிகளைப் படிக்கையில். மிக்க நன்றி.
ReplyDeleteவருக ஜீவி ஐயா. வாழ்த்துக்கும், ரசனைக்கும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் மிகுந்த நன்றிகள்.
ReplyDeleteநல்வரவு ரிஷு. ரொம்ப நாளைக்கப்புறம்... நன்றிப்பா :)
ReplyDeleteவருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி அகரம்.அமுதா.
ReplyDeleteநல்வரவு குமரா. நன்றி.
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரம்யா.
ReplyDeleteதாயவளுக்கு மழலையின் ஒவ்வொரு அசைவும் ஆனந்தம் தான்.
ReplyDeleteதாய்மைக்கான ஏக்கம் கவிதை வரிகளில் அருமை!!!
//தாயவளுக்கு மழலையின் ஒவ்வொரு அசைவும் ஆனந்தம் தான்.//
ReplyDeleteஉண்மைதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இசக்கிமுத்து அவர்களே.
நல்ல கவிதை. வாழ்வதே மகிழ்ச்சி என்பதை உணர்ந்த பின் ஏக்கங்கள் கிடையாது.
ReplyDelete