சுமதிக்கு வேலையே ஓடவில்லை. அனிதா யாருடன் அரை மணி நேரமாகக் குசுகுசுவென்று தொலை பேசிக் கொண்டிருக்கிறாள்? அவள் ஒரு அறையில் பேசும்போது இவள் ஏதாவது வேலை வைத்துக் கொண்டு அங்கே போனால், உடனே வேறு அறைக்கு நழுவி விடுகிறாள்; சற்று நேரம் கழித்து அதே போல செய்தால், அவளும் அதே போல! ஒரு வாரமாகவே இப்படித்தான். இதென்ன கண்ணாமூச்சி ஆடுகிறாளா என்னோடு? சுமதிக்கு இயலாமையால் ஏற்படும் எரிச்சலும் கோபமும் வந்து முட்டிக் கொண்டு நின்றன. அந்த வேகத்தில் அடுக்களையில் பாத்திரங்கள் படாத பாடு பட்டன.
“அம்மா. சாப்பிடலாமா?” என்று கேட்டுக் கொண்டே அடுக்களைக்குள் நுழைந்தாள், அனிதா.
மகள் முகத்தைப் பார்த்ததும் வழக்கம்போல கோபமெல்லாம் ஆவியாகி விட்டது, சுமதிக்கு! 18 வயதுக்கே உரிய செழுமையான அழகுடன், முத்துப் பற்கள் தெரியப் புன்னகைத்தபடி வந்த மகள் மீது அவளுக்குக் கொள்ளைப் பிரியம்!
மறந்து போன கோபத்தை அவசரமாக நினைவுபடுத்திக் கொண்டாள்.
“யார்கிட்ட இவ்வளவு நேரம் அரட்டை, மேடம்?”
“என் ஃப்ரெண்டு திவ்யா, அம்மா”, வழக்கமான பதில். அம்மா எதிர்பார்த்த, ஆனால் திருப்தியடையாத பதிலை அசுவாரஸ்யமாகத் தந்து விட்டு,
“இன்னிக்கி என்னம்மா சமையல்?” என்றபடி ஒவ்வொரு பாத்திரமாக திறந்து ஆராயத் தொடங்கினாள்.
“ஏய். உண்மையச் சொல்லுடா. என்கிட்ட சொன்னா என்ன?”, தோழி போல பழகும் அம்மாவிடம் அனிதா இது வரை எதையும் மறைத்ததில்லை.
“அம்மா. எங்க காலேஜ் ம்யூசிக் க்ரூப்ல கிடார் வாசிக்கிற ரமேஷை எனக்கு ரொம்பப் பிடிக்கும்மா. ஸோ க்யூட்!”, என்று அவளிடமே சொல்பவள்! இப்போது என்ன திடீரென்று ஒளிவு மறைவு ரகசியம் எல்லாம் வந்து விட்டது?
“அம்மா! விட மாட்டியா! ஒண்ணும் இல்லம்மா. டீனேஜ் பொண்ணுங்க வேறென்ன பேசுவோம்? அதாம்மா. எல்லாமே உங்கிட்ட சொல்ல முடியுமா? எனக்கு ரொம்ம்ம்ம்பப் பசிக்குதும்மா. இப்ப சாப்பாடு போடப் போறியா இல்லையா?”, சிணுங்கியபடி கழுத்தைக் கட்டிக் கொண்டு “நச்”சென்று கன்னத்தில் முத்து பதித்தாள், செல்ல மகள்.
***
“கிஃப்ட் வாங்க போகணும்னு சொன்னேனே. என்னம்மா பண்றே? திவ்யா அக்கா கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள்தாம்மா இருக்கு. திவ்யா வீட்டுக்குப் போய் அவளையும் கூட்டிட்டுப் போகணும். சீக்கிரம் வா!”
“ரெடியாதாண்டா இருக்கேன். வா போலாம்”, வாஷ் பேசின் கண்ணாடியில் ஒரு முறை அலங்காரத்தைச் சரி பார்த்துக் கொண்டு கிளம்பினாள், சுமதி.
திவ்யா வீட்டுக்குப் போனபோது வாசலில் ஏகப்பட்ட செருப்புகள்!
“அட, திவ்யா வீட்ல அதுக்குள்ளயும் கல்யாண களை கட்டிடுச்சே!”, வியந்து கொண்டே உள்ளே நுழைந்ததும் –
“சர்ப்ரைஸ்!! ஹாப்பி பர்த் டே டு யூ…”, என்று ஒரு பெரிய்ய்ய்ய்ய கும்பல் கத்தியது!
அப்போதுதான் சுமதிக்கு நினைவே வந்தது, தன் பிறந்த நாளைப் பற்றி. நேற்றுதான் பிறந்த குழந்தையைப் போல் ஒன்றும் புரியாமல் விழித்தவளை இறுக அணைத்து முத்தமிட்டு, “பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா!” என்றாள், மகள். கணவரும் அருகில் வந்து, “ஹாப்பி பர்த் டே சுமி! சர்ப்ரைஸ் எப்படி? எல்லாம் உம் பொண்ணோட ஏற்பாடுதான்”, என்றார், மகளைப் பார்த்து கண் சிமிட்டியபடி.
“இதாம்மா நானும் திவ்யாவும் குசுகுசுன்னு பேசின விஷயம்”, அம்மாவின் காதோடு கிசுகிசுத்தாள் மகள்.
“கேக் வெட்ட வாங்க சுமதி”, என்று திவ்யாவின் அம்மா வந்து அழைக்க, பிரமிப்பு விலகாமல் அவளுடன் போனாள், சுமதி.
--கவிநயா
//"அப்படி என்னதான் பேசுவாளோ?"//
ReplyDeleteஎல்லா அம்மாக்களுக்கும் இயல்பாய் ஏற்படுகிற கவலை.
எல்லாமுமாய் இருக்கிற அம்மாவுக்கு அனிதா தந்தது இனிய சர்ப்ரைஸ்.
நல்ல கதை கவிநயா!
நல்ல கதை அக்கா. எங்க வீட்டுல தங்கமணிக்கு இப்பவே இந்தக் கவலை வந்தாச்சு. பொண்ணுக்குப் பதின்ம வயசு வர்றதுக்கு இன்னும் நெறைய நாள் இருக்குன்னு சொன்னாலும் கேக்குறதில்லை.
ReplyDeleteஆமாம். உங்களுக்கு இந்த வயசுல பொண்ணு இருக்கா என்ன? பொதுவுல பதில் சொல்ல வேணாம். :-)
ஆஹா...
ReplyDeleteஎதிர்பாராத ஆச்சரியத்தை அனிதாவின் அம்மாவுக்கு மட்டுமா தந்துவிட்டீர்கள்?
இறுதி சஸ்பென்ஸை எதிர்பார்க்கவில்லை சுமதியின் மனநிலையிலின்றும் வாசித்ததனால்..!
அழகாக எழுதியிருக்கிறீர்கள் சகோதரி !
நல்ல இருக்கிறது கதை
ReplyDelete//எல்லா அம்மாக்களுக்கும் இயல்பாய் ஏற்படுகிற கவலை.//
ReplyDeleteஆம், ராமலக்ஷ்மி. அந்த எண்ணத்தில் பிறந்ததுதான் இந்தக் கதையும்.. :) வாசித்தமைக்கு நன்றி!
//நல்ல கதை அக்கா.//
ReplyDeleteநன்றி குமரா!
//எங்க வீட்டுல தங்கமணிக்கு இப்பவே இந்தக் கவலை வந்தாச்சு.//
ஹ்ம்.. என்ன சொன்னாலும் கவலைப்படாம இருக்க முடியாது. இருந்தாலும் சிவக்கொழுந்து பத்தி கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லன்னு, நானும் சொன்னதா சொல்லி வைங்க :)
//அழகாக எழுதியிருக்கிறீர்கள் சகோதரி !//
ReplyDeleteஎழுதும்போது ரொம்ப சாதாரண கதைன்னு நினைச்சே எழுதினேன், ரிஷான். நீங்க ரசிச்சுப் படிச்சதுல ரொம்ப மகிழ்ச்சி. மிக்க நன்றி! :)
//நல்ல இருக்கிறது கதை//
ReplyDeleteவாங்க திகழ்மிளிர்! கதை வாசிச்சு ரசிச்சதுக்கு மிக்க நன்றி!
இது போன்று தான் எல்லா செல் பேச்சுக்களும் இருக்கும் என
ReplyDeleteநினைத்து திடீரென ஒரு நாள் அதிர்ச்சிக்குள்ளான சுமதி போல் ஒரு
அம்மாவின் நிஜக்கதை கண்முன்னிருந்து
இன்னமும் மறைய வில்லை.
மீனாட்சி
தஞ்சை.
அன்னையர் யாவருக்கும் அமையவேண்டிய பதட்டம்தான். க(வி)தை அருமை! வாழ்த்துக்கள். (நான் வேற ஏதோ இருக்கும் போல இண்ணுல்ல நினைச்சேன்)
ReplyDeleteவாங்க பாட்டீ! கதை வாசிச்சு, கருத்தை பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி! நிஜக் கதைக்கு சுப முடிவுதானே :)
ReplyDelete//(நான் வேற ஏதோ இருக்கும் போல இண்ணுல்ல நினைச்சேன்)//
ReplyDeleteஅப்படி நினைக்க வைக்கதான் கதை அப்படி ஆரம்பிச்சு, இப்படி போகுது :) நன்றி அகரம்.அமுதா!
ஓடும் நதியதற்கும் சுற்றும் புவியதற்கும்
ReplyDeleteபாடும் தமிழதற்கும் பாங்கான பெண்டிருக்கும்
பொய்யில் புலவர்க்கும் இல்லை எனும்போதில்
வெய்யிலுக்கும் உண்டோ விடுப்பு
கவிநயா! இது உங்களுடைய வெண்பா தானே? வரும் திங்கட்கழமையிலிருந்து வெண்பா விளையாட்டைத் துவங்குகிறேன். கட்டாயம் கலந்து கொள்ளவும். திங்கட்கிழமை வெண்பா எழுதலாம் வாங்க வலைக்கு வந்து பாருங்க
//கவிநயா! இது உங்களுடைய வெண்பா தானே?//
ReplyDeleteஎன் வெண்பாதான். ரொம்ம்ம்ப கஷ்ஷ்ஷ்டப்படு எழுதினது :)
//திங்கட்கழமையிலிருந்து வெண்பா விளையாட்டைத் துவங்குகிறேன். கட்டாயம் கலந்து கொள்ளவும்.//
அழைப்புக்கு நன்றி அகரம்.அமுதா. வந்து வேடிக்கை பார்க்கவேனும் முயற்சிக்கிறேன். ஆணி அதிகமாயிடுச்சு :(
கதை நல்லா இருக்கு!
ReplyDeleteநன்றி!
//கதை நல்லா இருக்கு!//
ReplyDeleteநன்றி சிபி!
//பாங்கான பெண்டிருக்கும விடுப்பு//
ReplyDeleteசீரியல் பார்ப்பதற்தில் விடுப்பு இல்லைன்னு சொல்றீங்களா?
//சீரியல் பார்ப்பதற்தில் விடுப்பு இல்லைன்னு சொல்றீங்களா?//
ReplyDeleteவாங்க சிபி. கிண்டல்தானே :) சிரிப்பானைக் காணோமே? அதான் சந்தேகம். இருந்தாலும் விளக்கிடறேன் :)
ஆண்கள் அலுவலகப் பணி முடிஞ்சதும் "ஓய்வுக் காலத்"தில சுகமா உட்கார்ந்திடறாங்க. ஆனா பெண்களுக்கு சமையல்கட்டுல இருந்தும், வீட்டு வேலைகள்ல இருந்தும், குடும்பத்தைக் கவனிக்கிறதுல இருந்தும் என்றைக்காவது ஓய்வு இருக்கா? அதைத்தான் சொல்ல வந்தேன் :)
(அது மட்டுமில்லங்க. இப்பல்லாம் ஆண்கள்தான் அதிகமா தொ(ல்)லைக் காட்சித் தொடர்களை விரும்பிப்(!) பார்ப்பதா கேள்வி :)
//சிரிப்பானைக் காணோமே? அதான் சந்தேகம். இருந்தாலும் விளக்கிடறேன் :)//
ReplyDeleteஎன்ன! சிபியின் பின்னூட்டத்தில் சிரிப்பான் வேறு தனியாக தேவையா?
என்ன கொடுமைங்க சிபி இது!
//என்ன! சிபியின் பின்னூட்டத்தில் சிரிப்பான் வேறு தனியாக தேவையா?
ReplyDeleteஎன்ன கொடுமைங்க சிபி இது!//
வாங்க, வியப்பவன்! நல்லாதான் வியந்திருக்கீங்க :) ஆனா சிபி இப்பதானே இந்தப் பக்கம் வராரு. இனி தெரிஞ்சுக்குவேனுல்ல? :)
யக்கோவ் கதை சூப்பரக்கோவ்....
ReplyDelete//யக்கோவ் கதை சூப்பரக்கோவ்....//
ReplyDeleteமுதல் வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றிங்க, இவன்!
இப்ப என் கவலை என்ன தெரியுமா...என் பொண்ணுக்குப் பொண்ணு பிறக்கலையே ரெண்டும் பையன்களாப் போச்சேன்னு தான். நான் பட்ட பாட்டை அவள் பட வேண்டாமோன்னு ஒரு ஆதங்கம்:)))
ReplyDeleteநல்ல கதை கவிநயா.
//வாங்க, வியப்பவன்! நல்லாதான் வியந்திருக்கீங்க :) ஆனா சிபி இப்பதானே இந்தப் பக்கம் வராரு. இனி தெரிஞ்சுக்குவேனுல்ல? :)//
ReplyDeleteஅப்ப சரி!
//யக்கோவ் கதை சூப்பரக்கோவ்....//
ReplyDeleteஇதை நான் வழிமொழிகிறேன் அக்கா!
//வாங்க, வியப்பவன்! நல்லாதான் வியந்திருக்கீங்க :) ஆனா சிபி இப்பதானே இந்தப் பக்கம் வராரு. இனி தெரிஞ்சுக்குவேனுல்ல? :)//
ReplyDeleteநல்லாத் தெரிஞ்சிகிட்டீங்க போங்க!
அவரு நடந்தா அந்த நடை காமெடி!
அவரு முறைச்சா அந்த முறைப்பும் காமெடி!
அவரு பார்த்தா அந்த பார்வையிலயும் காமெடி!
அவரு தும்முனா கூட காமெடி! அவரு இருமுனா காமெடி!
ஏப்பம் விட்டாலும் காமெடிதான் போங்க!
(அப்பாடா! அவருகிட்டே இருந்து கண்டிப்பா செக் வந்துடும்)
//நான் பட்ட பாட்டை அவள் பட வேண்டாமோன்னு ஒரு ஆதங்கம்:)))//
ReplyDeleteஆஹா, நல்ல அம்மா! :))
கதை உங்களுக்கு பிடிச்சது பற்றி மகிழ்ச்சி வல்லிம்மா. நன்றி :)
வாங்க அமைதி ஆனவன். வந்துட்டு கதை பத்தி ஒண்ணும் சொல்லாம அமைதியாவே போய்ட்டீங்க? :) படிக்கலயா?
ReplyDelete////யக்கோவ் கதை சூப்பரக்கோவ்....//
ReplyDeleteஇதை நான் வழிமொழிகிறேன் அக்கா!////
நன்றிங்க சிபி.
//(அப்பாடா! அவருகிட்டே இருந்து கண்டிப்பா செக் வந்துடும்)//
ReplyDeleteநல்லதுங்க வியப்பவன். இப்ப தெரிஞ்சுக்கிட்டேன், அவரைப் பத்தியும், உங்களப் பத்தியும் :)
//நல்லதுங்க வியப்பவன். இப்ப தெரிஞ்சுக்கிட்டேன், அவரைப் பத்தியும், உங்களப் பத்தியும் :)//
ReplyDeleteஅப்ப என்னைப் பத்தியும் தெரிஞ்சி போச்சா!