கண்ணீர் விடறது நல்ல விஷயம். கண்ணுக்கு. கண்ணு வரண்டு போயிடுச்சுன்னா, மருத்துவர் 'செயற்கை கண்ணீர்'னு ஒரு சொட்டு மருந்து போடச் சொல்லுவார். அந்த பிரச்சனையெல்லாம் நமக்கு வராதுன்னு நினைக்கிறேன் :)
நாம நிறைய்ய்ய அழுதாலும் மற்றவங்க கண்டு பிடிக்காம இருக்கறதுக்கு ஒரு வழி இருக்கு. அதாவது அழும்போது வழியற கண்ணீரை மட்டுமே துடைக்கணும். கண்ணை அழுத்தித் துடைச்சு, மூக்கைச் சிந்தி, இப்படில்லாம் செஞ்சாதான், கண்ணு சிவந்து, முகம் வீங்கி, காட்டிக் குடுத்துடும் :)
நமக்காக அழறதைக் காட்டிலும், பிறருக்காக அழும் போது நம்ம மனசு தூய்மையாகுது. அதுக்காக உக்காந்து அழணும்னு இல்ல, பிறர் துயரத்தை உணர்ந்து அவங்க துன்பம் தீர்ந்து நல்லாருக்கணும்னு மனசார நினைச்சாலே போதும். இல்லன்னா நாம மனுஷங்களா பொறந்ததுக்கு என்னதான் அர்த்தம் இருக்கு?
தண்ணீர் தரியாமல்
தவித்
தலையும் மேகமே!
என்னிடத்தில்
நீ வந்தால்,
உன்
சூல் நிரம்பக்
கண்ணீர்
தருவேன், உனக்கு.
**
பனித்
துளிகள் பிறப்பெடுக்கும்
அதிகாலையில்
மட்டும்
ஆனால்,
நேரம்
காலம் எதுவுமில்லை
விழித்
துளிகள் பிறப்பதற்கு.
**
கண்ணீர்
மட்டும்
உப்புக்
கரிக்காதிருந்தால்
இவ்வுலகில்,
தண்ணீர்
பஞ்சமே
இல்லாது
போயிருக்கும்.
**
இந்த ரெண்டு கவிதையும் ஏற்கனவே குட்டிக் கவிதைப் பக்கம் வந்திருக்கு -
அவள் கண்களை மீன்கள் என்று
சொல்லாதவரே இல்லை.
அவை எப்போதும்
கண்ணீரில் மிதப்பதாலோ?
**
இன்பம் என்ன துன்பம் என்ன
இதுதான் உலக வாழ்க்கையடி
கண்ணில் கண்ணீர் இதழில் சிரிப்பு
பழகிப் போன பாஷையடி
எது வந்தாலும் எது போனாலும்
கலங்கா மனமே வேண்டுமடி
முயன்று பார்த்தால் முடியும் பெண்ணே - உன்
வாழ்க்கை உந்தன் கையிலடி!
**
இந்த ரெண்டு கவிதையும் ஏற்கனவே குட்டிக் கவிதைப் பக்கம் வந்திருக்கு -
அவள் கண்களை மீன்கள் என்று
சொல்லாதவரே இல்லை.
அவை எப்போதும்
கண்ணீரில் மிதப்பதாலோ?
**
இன்பம் என்ன துன்பம் என்ன
இதுதான் உலக வாழ்க்கையடி
கண்ணில் கண்ணீர் இதழில் சிரிப்பு
பழகிப் போன பாஷையடி
எது வந்தாலும் எது போனாலும்
கலங்கா மனமே வேண்டுமடி
முயன்று பார்த்தால் முடியும் பெண்ணே - உன்
வாழ்க்கை உந்தன் கையிலடி!
**
--கவிநயா
படத்துக்கு நன்றி: கூகுளார்
இதையும் வாசிங்க!
காதல் - எவ்வளவு அழகான தமிழ் சொல்! காதலிக்கப் பிடிக்குமா உங்களுக்கு? காதலில் விழுந்தவரா நீங்கள்? அல்லது விழ இருப்பவரா? எப்படியிருந்தாலும் நீங்கள் எவ்வளவு romantic ஆனவர் என்று உலகிற்கு காட்ட உங்களுக்கு ஒரு வாய்ப்பு! ஆமாங்க, கரும்பு தின்னக் கூலி கூடத் தர்றாங்களாம்! காதல் கடிதம் எழுதுங்கள்!
படத்துக்கு நன்றி: கூகுளார்
இதையும் வாசிங்க!
காதல் - எவ்வளவு அழகான தமிழ் சொல்! காதலிக்கப் பிடிக்குமா உங்களுக்கு? காதலில் விழுந்தவரா நீங்கள்? அல்லது விழ இருப்பவரா? எப்படியிருந்தாலும் நீங்கள் எவ்வளவு romantic ஆனவர் என்று உலகிற்கு காட்ட உங்களுக்கு ஒரு வாய்ப்பு! ஆமாங்க, கரும்பு தின்னக் கூலி கூடத் தர்றாங்களாம்! காதல் கடிதம் எழுதுங்கள்!
கடைசிக் கவிதை ரொம்பப் பிடிச்சது. காதல் கடிதம் தேர்ந்தெடுக்கும் நடுவர்களில் நீங்களும் ஒருத்தரா? எங்கே போனாலும் காதல்கடிதம் எழுதச் சொல்லிக் கேட்டுட்டு இருக்காங்களே! :)))))
ReplyDeleteநன்றி கீதாம்மா :)
Deleteகாதல் கடித நடுவர்களில் நானில்லை... ஆனால் எழுதலாமான்னு ஒரு எண்ணம் இருந்தது (கவனிக்க: இறந்த காலம்). அதான் துணைக்கு ஆள் சேர்க்கலாமேன்னு... :) நடுவர்களுக்கும் நிறைய்ய வேலை குடுக்கலாமே! :)
அனைத்தும் அருமை... முக்கியமாக /// கண்ணீரில் மிதப்பதாலோ? ///
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன் :)
Deleteஎண்ணமும் கவிதைகளும் அருமை. பாருங்க, முதலாவதிலிருந்து கடைசிக்கு வரும்போது பக்குவம் வந்து விட்டிருக்கிறது:)! அதுதான் வாழ்க்கை.
ReplyDeleteஹி...ஹி... பக்குவம்? அது ஒரு மாயத் தோற்றம். போய்ப் போய் வரும் :) ஆனால் உங்கள் பார்வை நன்று!
Deleteஉண்மையா timeline படி பார்த்தா, கடைசி ரெண்டும் முதலில் எழுதினது, மற்றதெல்லாம் சமீபத்தில் எழுதினது :)
நன்றி ராமலக்ஷ்மி!
// கண்ணீர் மட்டும்
ReplyDeleteஉப்புக் கரிக்காதிருந்தால்
இவ்வுலகில்,
தண்ணீர் பஞ்சமே
இல்லாது போயிருக்கும்.//
ஆமாம்.... வீட்டுக்கு வீடு லிட்டர் லிட்டராகக் கிடைத்திருக்கும்! :)
நல்ல கவிதைகள். ரசித்தேன் கவிநயா....
நன்றிங்க வெங்கட்!
Delete//அழுதாலும் மற்றவங்க கண்டு பிடிக்காம இருக்கறதுக்கு ஒரு வழி இருக்கு.
ReplyDeleteஇதுக்கெல்லாம் நுட்பம் இருக்குதா - தெரியவே தெரியாதுங்க.
ராமலக்ஷ்மியின் பின்னூட்டம் சுவாரசியம்.
விழித்துளி பனித்துளி - ரசித்தேன்.
//இதுக்கெல்லாம் நுட்பம் இருக்குதா - தெரியவே தெரியாதுங்க.//
Deleteஉங்களுக்குத் தெரியாமயா? ச்சும்மானாச்சிக்கும்தானே சொல்றீங்க? :)
//ராமலக்ஷ்மியின் பின்னூட்டம் சுவாரசியம்.//
ஆமால்ல? :)
//விழித்துளி பனித்துளி - ரசித்தேன்.//
நன்றிங்க!