என்மனதில் உன்வதனம் வரைந்து பார்க்கிறேன்
என்னுடலில் உன்னுயிரால் வாழ்ந்து
பார்க்கிறேன்
கண்ணிமையில் உன்கனவு ரசித்துப்
பார்க்கிறேன்
கனியிதழில் உன்பெயரை ருசித்துப்
பார்க்கிறேன்!
எண்ணி எண்ணிப் பார்த்திருந்தேன்
எண்ணம் நின்றது
வண்ண வண்ண வார்த்தை சொல்லிக்
கவிதை என்றது
முன்னும் பின்னும் நடந்த தெல்லாம்
மறந்து போனது
நேற்றும் இன்றும் நாளும் பொழுதும்
கலந்து போனது!
மறையாத கதிரவனாய் மனதில் இருக்கிறாய்
மடுவின் நடுவில் தாமரை போல் மலர்ந்து
சிரிக்கிறாய்
காயாத சுனையாக என்னை நனைக்கிறாய்
தாயாக பேரன்பால் அள்ளி அணைக்கிறாய்!
வானைப் போல விரிந்த அன்பில் தொலைந்து
போகிறேன்
தேனைக் குடித்த வண்டாய் நானும்
கிறங்கிப் போகிறேன்
நுனி விரலால் தீண்டினாலும் உருகிப்
போகிறேன்
பனி மலராய்ப் பாதம் சேர்ந்து
புனிதமாகிறேன்!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.kateathome.com/love-birds/
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.kateathome.com/love-birds/
உங்கள் வரிகளில் உருகிப் போவதா...? கிறங்கிப் போவதா...?
ReplyDeleteவாழ்த்துக்கள்...
//உங்கள் வரிகளில் உருகிப் போவதா...? கிறங்கிப் போவதா...?//
Deleteஉருகிக் கிறங்கிப் போகலாம்... அல்லது கிறங்கி உருகிப் போகலாம்... :)
நன்றி தனபாலன்!
''...காயாத சுனையாக என்னை நனைக்கிறாய்
ReplyDeleteதாயாக பேரன்பால் அள்ளி அணைக்கிறாய்!...''
மிக நல்ல வரிகள் சேர்ந்திங்கு கவிநயம் காட்டுகிறது.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
மிகவும் நன்றி வேதா. இலங்காதிலகம்!
Deleteஉன்மனதின் உள் உதித்த மாற்றமோஇது
ReplyDeleteமென்னிறகால் வருடுகின்ற மென்மை ஆனது
இன்னும் என்ன இயம்பிவிடு இருக்குதோஅதை
கன்னலென கவிதந்தாய் வாழ்த்தினேன் உனை!
அருமை தோழி உங்கள் அழகு கவிதை!
வாழ்த்துக்கள்!
அழகான கவிப் பாராட்டிற்கு நன்றி இளமதி! :)
Delete////காயாத சுனையாக என்னை நனைக்கிறாய்
ReplyDeleteதாயாக பேரன்பால் அள்ளி அணைக்கிறாய்!////
அருமையான கவிதை!!!. மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன். பகிர்விற்கு மிக்க நன்றி!!!
மீண்டும் மீண்டும் வாசித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி பார்வதி! :)
Deleteகாதல் கவிதை???? ஆச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சரியம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கே. இல்லை இதுவும் அம்மாவைத் தானா சொல்றீங்க?
ReplyDeleteஹி... ஹி... நோ கமெண்ட்ஸ்! :)
DeleteFor the record - நான் நெறய்ய்ய காதல் கவிதைகள் எழுதியிருக்கேனே அம்மா... :)
அருமையான கவிதை சகோ.....
ReplyDeleteபடித்தேன் ரசித்தேன்!
மிகவும் நன்றி வெங்கட்!
Delete//மறையாத கதிரவனாய் மனதில் இருக்கிறாய்
ReplyDeleteமடுவின் நடுவில் தாமரை போல் மலர்ந்து சிரிக்கிறாய்.. //
மறையும் கதிரவனை மறையாத கதிரவனாய் மனதில் தேக்கும் அற்புதம்!
இலக்கண அழகு!
மடுவின் நடுவில் தாமரை! என்ன அழகான தோற்ற களிப்பு!
வாங்க ஜீவி ஐயா! வெகு நாட்கள் கழித்து உங்களைப் பார்த்ததில் ரொம்பவே மகிழ்ச்சி :)
Delete//தோற்ற களிப்பு!//
இந்தப் பிரயோகத்தை ரசித்தேன். ரசித்ததை நீங்கள் சொல்லும் அழகே தனிதான். மிகவும் நன்றி ஐயா.
அன்பு ததும்பும் வரிகள். அழகு.
ReplyDeleteமிக்க நன்றி ராமல்க்ஷ்மி! :)
Delete