13.
நமோஸ்து ஹேமாம்பு(3)ஜ பீடிகாயை
நமோஸ்து பூ(4)மண்ட(3)ல நாயிகாயை
நமோஸ்து தே(3)வாதி(3) த(3)யாபராயை
நமோஸ்து சா(H)ர்ங்காயுத(4) வல்லபா(4)யை
தங்கத் தாமரை மீதில் வீற்றிருக்கும் தாயே போற்றி
தாமரைகள் தாள் பணியும் தாமரை வதனியே போற்றி
தரங்கக் கடலின் நடுவே முகிழ்த்ததா மரையே போற்றி
தரணி யெல்லாம் ஆளுகின்ற தன்னிகரில்லாத் தலைவி போற்றி
தேவருக்கு அருளுகின்ற தேவதேவி தாள்கள் போற்றி
சாரங்க மேந்துகின்ற சக்ரபாணி சகியே போற்றி போற்றி!
14.
நமோஸ்து தே(3)வ்யை ப்(3)ருகு(3)நந்த(3)னாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தா(3)மோத(4)ர வல்லபா(4)யை
பிரம்ம தேவன் புத்திரனாம் பிருகுவின் புதல்வியே போற்றி
ஸ்ரீயென்னும் பெயர் கொண்டு ஸ்ரீதரனை மணந்தாய் போற்றி
கோவிந்தனின் மார்பில் விளங்கும் கோமள வல்லியே போற்றி
தாமரையைத் தன் னுடைய இருப்பிடமாய்க் கொண்டவளே போற்றி
தாமரைக்கு எழில் கூட்டும் இன்னமுதத் தாமரையே போற்றி
தாமோ தரனை வரித்த தாமரைக் கரத்தாளே போற்றி போற்றி!
--கவிநயா
(தொடரும்)
மூலத்தையும் மொழி பெயர்ப்பையும்
ReplyDeleteமுழுவதும் சொல்லி மன மகிழ்ச்சி கொண்டோம்
தொடர வாழ்த்துக்கள்
சம்ஸ்க்ருத வரிகளில் உள்ள எண்கள் எதைக்குறிக்கின்றன?
ReplyDeleteமிக அழகான நடை!மூலத்தில் உள்ள பாவங்களை அழகாக பிரதிபலிக்கின்றன இந்தத் தமிழ் வரிகள்!!
//மூலத்தையும் மொழி பெயர்ப்பையும்
ReplyDeleteமுழுவதும் சொல்லி மன மகிழ்ச்சி கொண்டோம்//
தொடர்ந்த வருகைக்கு மிக்க நன்றி ரமணி.
//சம்ஸ்க்ருத வரிகளில் உள்ள எண்கள் எதைக்குறிக்கின்றன?//
ReplyDeleteஉச்சரிப்புக்கு உதவுவதற்கு லலிதாம்மா.
உ-ம்.: ka, kha, ga, gha என்பது 'க'வுடன் எண் 2 சேர்த்தால் kha, க[3] == ga, க[4] == gha
நல்லா குழப்பிட்டேனா? :)
//மிக அழகான நடை!மூலத்தில் உள்ள பாவங்களை அழகாக பிரதிபலிக்கின்றன இந்தத் தமிழ் வரிகள்!!//
சமஸ்கிருதம் தெரிஞ்சவங்க சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவளுக்கு நன்றி. உங்களுக்கும்தான் :)
அழகான வரிகள். அதற்கேற்ற படம். நன்றி கவிநயா.
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி!
ReplyDeleteஅன்னை மாலையிடும் அழகைக் கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது. தேடித் தேடி எடுத்துப் போடும் படங்களும், மொழியாக்கமும் அருமை. எந்தச் சொல்லைப் போட்டுத் தேடினால் இந்தப் படங்கள் கிடைக்கும்? மஹாலக்ஷ்மி என்று போட்டுத் தேடினேன், கிடைக்கலை.
ReplyDeleteவாங்க கீதாம்மா. vishnu and lakshmi, என்கிற மாதிரி இருவர் பெயர்களையும் போட்டு தேடினால் கிடைக்கிறது அம்மா.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி.