எல்லாம் நன்று; அனைத்தும் நன்று;
உணவும் உடையும் இடமும் நன்று;
பசியேயில்லா உலகம் நன்று;
உலகம் நன்று; மக்கள் நன்று;
அன்பே நிறைந்த மனங்கள் நன்று;
மனங்கள் நன்று; குணங்கள் நன்று;
மகிழ்வே நிறைந்த உயிர்கள் நன்று;
உயிர்கள் நன்று; உறவுகள் நன்று;
உள்ளே ஒளிரும் ஒளியும் நன்று;
ஒளியும் நன்று; வளியும் நன்று;
உலகை நடத்தும் இயற்கை நன்று;
இயற்கை நன்று; இயல்பும் நன்று;
அனைத்தும் காக்கும் இறைமை நன்று;
எல்லாம் நன்று; அனைத்தும் நன்று-
என் கனவுகளில் மட்டும்...
--கவிநயா
கனவும் நன்று;கற்பனையும் நன்று ;
ReplyDeleteகற்பனைக் கனவின் கவிதையும் நன்று!
நனவிலும் நடக்கட்டும் நன்றே என்றும்:)!
ReplyDeleteஅழகான கவிதை.
எல்லோருக்கும் எல்லாமும் நனவிலும் நன்றாக நடக்கப் பிரார்த்திக்க வைக்கும் கவிதை.
//கனவும் நன்று;கற்பனையும் நன்று ;
ReplyDeleteகற்பனைக் கனவின் கவிதையும் நன்று!//
நன்றி லலிதாம்மா :)
//நனவிலும் நடக்கட்டும் நன்றே என்றும்:)!
ReplyDeleteஅழகான கவிதை.
எல்லோருக்கும் எல்லாமும் நனவிலும் நன்றாக நடக்கப் பிரார்த்திக்க வைக்கும் கவிதை.//
நன்றி ராமலக்ஷ்மி :)
நன்று கவிக்கா....நமது சூரி சார் வந்து பாடிக் கொடுத்தால் இன்னமும் நன்று....:-)
ReplyDeleteவாங்க மௌலி. வருகைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஎல்லாம் இனிது என்று சொன்னவன் இல்லையா, பாரதி!
ReplyDeleteஇவ்வுலகம் இனியது
தீ இனிது; நீர் இனிது; நிலம் இனிது
ஞாயிறு நன்று; திங்களும் நன்று
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன
மழை இனிது; மின்னல் இனிது; இடி இனிது
கடல் இனிது. மலை இனிது.காடு நன்று
ஆறுகள் இனியன.
........
மனிதர் மிகவும் இனியர்
ஆண் நன்று; பெண் இனிது
குழந்தை இன்பம்.
இளமை இனிது. முதுமை நன்று.
உயர் நன்று. சாதல் இனிது
பாரதிதான் இனியவை என்று தனக்குத் தட்டுப்பட்டவை அனைத்தையும் எவ்வளவு அழகாக அடுக்கியிருக்கிறான் என்று வியக்கத் தோன்றுகிறது. மகாகவியின் வழியில் எல்லாமே நன்றாக உங்களுக்குப் பட்டதிலும் உள்ளத்தின் அழகு வெளிப்பட்டிருக்கிறது.
வாழ்த்துக்கள்.
//பாரதிதான் இனியவை என்று தனக்குத் தட்டுப்பட்டவை அனைத்தையும் எவ்வளவு அழகாக அடுக்கியிருக்கிறான் என்று வியக்கத் தோன்றுகிறது.//
ReplyDeleteஉண்மைதான் ஜீவி ஐயா.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)