Saturday, October 1, 2011

கனக தாரை - 11, 12



11.
ச்(H)ருத்யை நமோ(அ)ஸ்து சு(H)ப(4)கர்ம பலப்ரஸூத்யை
ரத்யை நமோ(அ)ஸ்து ரமணீய கு(3)ணார்ணவாயை
ச(H)க்த்யை நமோ(அ)ஸ்து ச(H)தபத்ர நிகேதனாயை
புஷ்ட்யை நமோ(அ)ஸ்து புருஷோத்தம வல்லபா(4)யை


நற்பலன்கள் எல்லாம் அளிக்கும் நான்மறையின் தலைவி போற்றி
அகிலத்தின் அழகுக் கெல்லாம் ஆதார ஸ்ருதியே போற்றி
அழகுக்கு அழகு செய்யும் அழகுருவே அமுதே போற்றி
ஆயிரம்இதழ் தாமரையில் அமர்ந் தாட்சி செய்வாய் போற்றி
செல்வங்கள் எல்லாம் வணங்கும் செல்வநா யகியே போற்றி
புருஷோத்தமன் மார்பில் விளங்கும் பொன்மகளே போற்றி போற்றி!


12.

நமோ(அ)ஸ்து நாளிக நிபா(4)னனாயை
நமோ(அ)ஸ்து து(3)க்(3)தோ(4)த(3)தி(4) ஜன்மபூ(4)ம்யை
நமோ(அ)ஸ்து ஸோமாம்ருத ஸோத(3)ராயை
நமோ(அ)ஸ்து நாராயண வல்லபா(4)யை


எழி லென்னும் சொல்லுக்குப் பொருளான திருவே போற்றி
கமலந்தான் விரிந்தது போல் மலர்ந்திட்ட முகத்தாய் போற்றி
கடைந்திட்ட பாற்கடலில் கதிரவன்போல் உதித்தாய் போற்றி
இன்னமுதும் மதியும் மகிழ இளையவளாய் எழுந்தாய் போற்றி
ஆதிசேஷன் மடியில் துயிலும் அரங்கனவன் மனையே போற்றி
அஞ்சனக் கருமை வண்ணன் அருமைத் துணையே போற்றி போற்றி!



--கவிநயா

(தொடரும்)

4 comments:

  1. உண்மையிலேயே தாரைதான்; கொட்டுது அருவியாய்.

    ReplyDelete
  2. மிக அழகாக தமிழ் படுத்தித் தருகிறீர்கள்
    என் மனைவி நவராத்திரி பூஜைக்கு
    தங்கள் மொழி பெயர்ப்பைத்தான்
    பயன்படுத்தி பூஜை செய்கிறார்
    அர்த்தம் தெரிந்து பூஜிப்பது அவருக்கு மிக்க சந்தோஷம்
    தொடர வாழ்த்துக்கள் த.ம 1

    ReplyDelete
  3. //உண்மையிலேயே தாரைதான்; கொட்டுது அருவியாய்.//

    நன்றி கீதாம்மா.

    ReplyDelete
  4. //என் மனைவி நவராத்திரி பூஜைக்கு
    தங்கள் மொழி பெயர்ப்பைத்தான்
    பயன்படுத்தி பூஜை செய்கிறார்
    அர்த்தம் தெரிந்து பூஜிப்பது அவருக்கு மிக்க சந்தோஷம்//

    ஆஹா, கேட்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கு. மிக்க நன்றி ரமணி. உங்கள் மனைவிக்கும் என் நன்றியும் வணக்கங்களும்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)