Friday, November 19, 2010

அண்ணாமலையாய் அருள்பவன்!

அனைவருக்கும் திருக்கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்!


அடிமுடி யில்லா அழலாகி
முதல்முடி வில்லா ஒளியாகி
கனலாய் கனன்று எழுந்தவனே!
தீயாய் திசைகள் அளந்தவனே!

கண்ணால் மதனை எரித்தவனே!
காதல் உமையை வரித்தவனே!
எண்ணும் மனதில் இனிப்பவனே!
ஏற்றம் யாவும் அளிப்பவனே!

விண்ணோர் போற்றிப் பணிபவனே!
மண்ணோர் வணங்க மகிழ்பவனே!
உண்ணா முலையுடன் உறைபவனே!
அண்ணா மலையாய் அருள்பவனே!

--கவிநயா

8 comments:

  1. //அடிமுடி யில்லா அழலாகி
    முதல்முடி வில்லா ஒளியாகி
    கனலாய் கனன்று எழுந்தவனே!
    தீயாய் திசைகள் அளந்தவனே!//

    அருமையான பாடலுக்கு நன்றி கவிநயா.

    கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. பதிவை இட்டு திரும்பிப் பார்க்கிறதுக்குள்ள படிச்சிட்டீங்களே! :) நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  3. அற்புதமான பாடல்.
    அண்ணாமலைக்கு அரோஹரா .

    தீபத்திரு நாளாம் கார்த்திகை அன்று தங்கள் பாடல்
    பெருமைப்படக்குரியதாய் அமைந்துள்ளது.

    இதோ !! மத்யமாவதி ராகத்தில் !!
    எல்லோரும் பாடவேண்டும்.
    இன்புற்றிருக்கவேண்டும்.
    சிவனின் கிருபை பெற்று
    பிறவிப்பயனைப் பெறவேண்டும்.

    சுப்பு தாத்தா.
    http;//menakasury.blogspot.com

    ReplyDelete
  4. அனுபவித்துப் பாடியிருப்பது தெரிகிறது தாத்தா :) அருமை. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

    ReplyDelete
  5. நல்லா இருந்துச்சுங்க..
    சந்தம் ரொம்ப அழகா உங்கள் கட்டுப்பட்டுக்குள் வருகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. //நல்லா இருந்துச்சுங்க..
    சந்தம் ரொம்ப அழகா உங்கள் கட்டுப்பட்டுக்குள் வருகிறது. வாழ்த்துக்கள்.//

    வாங்க ஜீவி ஐயா. 'ங்க' புதுசா இருந்துச்சு :) ரசித்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. கவிநயா....

    கவிதை வரிகளில் அண்ணாமலையின் ஆனந்த தரிசனம் கண்டேன்...

    அதிலும் குறிப்பாக இந்த வரிகள் :

    //கண்ணால் மதனை எரித்தவனே!
    காதல் உமையை வரித்தவனே!
    எண்ணும் மனதில் இனிப்பவனே!
    ஏற்றம் யாவும் அளிப்பவனே!//

    மிக மிக அருமை...

    உங்கள் பதிவை தொடர்ந்து படித்து தான் நானும் கவிதை எழுத முயற்சிக்கணும்....

    உங்களுக்கும், குடும்பத்தார்க்கும், மற்ற வலையுலக தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய திருக்கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  8. //கவிதை வரிகளில் அண்ணாமலையின் ஆனந்த தரிசனம் கண்டேன்...

    மிக மிக அருமை...

    உங்கள் பதிவை தொடர்ந்து படித்து தான் நானும் கவிதை எழுத முயற்சிக்கணும்....

    உங்களுக்கும், குடும்பத்தார்க்கும், மற்ற வலையுலக தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய திருக்கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துக்கள்.....//

    ரசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோபி. உங்கள் விருப்பம் போல் விரைவிலேயே கவிதைகள் எழுத என்னுடைய வாழ்த்துகளும்!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)