Thursday, December 31, 2009

வாழ்க அனைவரும்! வாழ்க வளமுடன்!!



வானம் மகிழ்ந்து பொழியணும்
பூமி நிறைஞ்சு விளையணும்
விளைநிலங்கள் கட்டிடங்கள்
ஆகாமே இருக்கணும்!

கா டெல்லாம் செழிக்கணும்
நா டெல்லாம் கொழிக்கணும்
புவியெங்கும் இயற்கை வளம்
அழியாமே காக்கணும்!

நோய் நொடிகள் குறையணும்
ஆரோக்யம் நிறையணும்
அன்பு ஒன்றே இல்லந்தோறும்
பெருஞ் செல்வம் ஆகணும்!

கல்வி சிறந்து வளரணும்
தமிழும் கலையும் தழைக்கணும்
சத்தியமே நித்தியமா
என்றும் எங்கும் ஒளிரணும்!!


--கவிநயா

அனைவருக்கும் மனம் கனிந்த புது வருட நல்வாழ்த்துகள்!
வாழ்க! வளர்க!!

12 comments:

  1. அழகான கவிதையுடன் ஆரம்பம்...

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. புது வருட நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. உலகம் அனைத்துமே வளமுற்று, சிறப்புற்று செழிக்கவேண்டும் உலகத்தார் யாவருமே அன்பு மழையில் திளைக்கவேண்டும் என வேண்டுபவரில் மேடம் கவி நயா அவர்களும் இருக்கிறார்கள்.
    மிகவும் மகிழ்ச்சி.
    என்னால் இயன்றவரை ஹம்ஸ்த்வனி ராகத்தில் பாட முயன்றிருக்கிறேன்.
    http://vazhvuneri.blogspot.com

    subbu thatha.

    ReplyDelete
  4. வேண்டப்படும் நிறைய 'வேண்டும்'ங்கள்
    நிதர்சன உண்மைகளாகட்டும்!..

    தங்களும் அன்பான ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. The speciality of your Kavithai is simplicity with some message and here the message is not to pollute the world and to maintain and increase the greenary.

    ReplyDelete
  6. வாங்க வசந்த்! மிக்க நன்றி. உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. மிக்க நன்றி உழவன். உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. வாங்க சுப்பு தாத்தா. உடனே பாடிட்டீங்களே :) கனெக்ஷன் சரியில்லாததால இன்னும் சரியா கேட்க முடியலை. ஆனால் வழக்கம் போலவே அருமையா இருக்கும் என்கிறதில் சந்தேகமும் இல்லை :) மிக்க நன்றி தாத்தா.

    ReplyDelete
  9. வாங்க ஜீவி ஐயா! உங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  10. நன்றி திரு.நடராஜன் :)

    ReplyDelete
  11. மிகவும் சிறப்பான வேண்டுகோள், பிரார்த்தனை, ஆசை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வரியும் அர்த்தம் நிரம்பியது. வாழ்க.

    புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. மிக்க மகிழ்ச்சி கபீரன்பன் ஐயா. ஆசிகளுக்கு நன்றிகளும், உங்களுக்கும் வாழ்த்துகளும்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)