உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Saturday, December 26, 2009
என்னைத் தொட்ட பட்டாம்பூச்சி
பட்டாம் பூச்சி ஒன்று என்னை
தொட்டுப் பார்த்துச் சென்றது
விட்டம் பார்த்து நானிருந்தேன்
கிட்டே வந்து நின்றது
ஏனோ இந்தச் சோகம் என்று
என்னைக் கேள்வி கேட்டது
சோகம் விட்டுச் சிரித்துப் பாரேன்
என்றே கொஞ்சிச் சொன்னது
நாவால் கண்ணீர் தொட்டுப் பார்த்து
கொஞ்சம் உப்பு என்றது
கண்ணீர் இல்லா வாழ்வும் உண்டோ
சொல்லேன் என்று கேட்டது
கூட்டுப் புழுவாய்த் தான் இருந்த
துயரக் கதையைச் சொன்னது
அதையும் தாண்டிச் சிற கடிக்கும்
என்னைப் பாரேன் என்றது
பட்டாம் பூச்சி பேச்சைக் கேட்டு
பூவாய் மனசு விரிந்தது
ஏதோ ஒன்று புரிந்தது போல்
தானும் சிரித்துக் கொண்டது.
--கவிநயா
உரையாடல் கவிதைப் போட்டிக்கு
Subscribe to:
Post Comments (Atom)
//கூட்டுப் புழுவாய்த் தான் இருந்த
ReplyDeleteதுயரக் கதையைச் சொன்னது
அதையும் தாண்டிச் சிற கடிக்கும்
என்னைப் பாரேன் என்றது//
சிந்திக்க வைத்து விட்டது.
உங்களைத் தொட்ட பட்டாம்பூச்சி
எங்கள் மனதையும் தொட்டது. நன்று கவிநயா.
வெற்றி பெற வாழ்த்துக்கள் கவிநயா.
நன்றாக இருக்கிறது
ReplyDeleteவாழ்த்துகள்
நாவால் கண்ணீர் ன்னு இருக்கலாமோ?
ReplyDeleteகருத்து நல்லா இருக்கு!
:-)
நன்றாக உள்ளது கவிதை
ReplyDeleteநெஞ்சில் ஒருவித உணர்வு
//சிந்திக்க வைத்து விட்டது.
ReplyDeleteஉங்களைத் தொட்ட பட்டாம்பூச்சி
எங்கள் மனதையும் தொட்டது. நன்று கவிநயா.//
நல்லது ராமலக்ஷ்மி :) வாழ்த்துகளுக்கும் நன்றி.
//நன்றாக இருக்கிறது//
ReplyDeleteநன்றி திகழ்.
//நாவால் கண்ணீர் ன்னு இருக்கலாமோ?
ReplyDeleteகருத்து நல்லா இருக்கு!
:-)//
வாங்க தி.வா.ஜி. நீங்க சொன்னபடி மாத்திட்டேன். நன்றி :)
//நன்றாக உள்ளது கவிதை
ReplyDeleteநெஞ்சில் ஒருவித உணர்வு//
மிக்க நன்றி கவிக்கிழவன்.
அருமையான கவிதை
ReplyDeleteநல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
//நாவால் கண்ணீர் தொட்டுப் பார்த்து
ReplyDeleteகொஞ்சம் உப்பு என்றது//
அருமை, அழகான வார்த்தைப்ரயோகம்... வெற்றிபெற வாழ்த்துக்கள்...
ஆஹா.. அருமை. படிக்கும்போது ஒரு ஃபீல் இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள் :-)
ReplyDeleteபட்டாம் பூச்சி மனதைத் தொட்டது கவிநயா. வெற்றி பெற வாழ்த்துகள்.
ReplyDeleteஒவ்வொரு பட்டுப்பூச்சியும் சொல்கிறதே..
ReplyDeleteஇருட்டும் வெளிச்சமுமே வாழ்க்கை என்கிறதே...
மனித வாழ்வின் ஏற்ற இறக்கங்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல ஒரு பட்டாம்பூச்சியின்
ReplyDeleteவாழ்வினை அடித்தளமாகக் கொண்டு வர்ணித்திருக்கிறீர்கள்.
உண்மையிலேயே, நமது இன்பம் மற்றும் துன்பம் ஆகிய மன நிலைகள் எல்லாமே நமது
வசத்தில் இருக்கவேண்டும் என்பது தலையாயது.
என்னால் இயன்ற வரை வழக்கம்போல பாடியிருக்கிறேன்.
எனது வலைத்தளத்தில் இருக்கிறது.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும், தங்கள் வலைக்கு வரும் அன்பர், நண்பர்களுக்கும்
சுப்பு தாத்தா மீனாட்சி பாட்டியின் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சுப்பு ரத்தினம்.
http://menakasury.blogspot.com
பட்டாம்பூச்சி அருமை!
ReplyDelete// தியாவின் பேனா said...
ReplyDeleteஅருமையான கவிதை
நல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.//
மிக்க நன்றி :)
//அருமை, அழகான வார்த்தைப்ரயோகம்... வெற்றிபெற வாழ்த்துக்கள்...//
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி காயத்ரி :)
//ஆஹா.. அருமை. படிக்கும்போது ஒரு ஃபீல் இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள் :-)//
ReplyDeleteரசித்தமைக்கு மிக்க நன்றி உழவன் :)
//பட்டாம் பூச்சி மனதைத் தொட்டது கவிநயா. வெற்றி பெற வாழ்த்துகள்.//
ReplyDeleteமிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஜெஸ்வந்தி :)
//ஒவ்வொரு பட்டுப்பூச்சியும் சொல்கிறதே..
ReplyDeleteஇருட்டும் வெளிச்சமுமே வாழ்க்கை என்கிறதே...//
ஆம் ஜீவி ஐயா, மனசுதான் புரிந்து கொள்ள மறுக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க சுப்பு தாத்தா. ரொம்ப நாளாச்சு பாத்து. நலம்தானே?
ReplyDelete//உண்மையிலேயே, நமது இன்பம் மற்றும் துன்பம் ஆகிய மன நிலைகள் எல்லாமே நமது
வசத்தில் இருக்கவேண்டும் என்பது தலையாயது.//
உண்மைதான் தாத்தா. ஆனால் நடைமுறையில்தான் கஷ்டமா இருக்கு. என்ன செய்யலாம்?
//என்னால் இயன்ற வரை வழக்கம்போல பாடியிருக்கிறேன்.//
அருமையாகவும் பாடியிருக்கீங்க. மிக இயல்பா, இனிமையா இருக்கு. மிக்க நன்றி தாத்தா.
//தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும், தங்கள் வலைக்கு வரும் அன்பர், நண்பர்களுக்கும்
சுப்பு தாத்தா மீனாட்சி பாட்டியின் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.//
மீண்டும் நன்றி தாத்தா. உங்களுக்கும், பாட்டிக்கும், மற்றும் உங்களைச் சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளும்!
//பட்டாம்பூச்சி அருமை!//
ReplyDeleteஅப்ப கவிதை? :)
வருகைக்கு நன்றி குமரன்.
கவிதையின் தன்னம்பிக்கை மிளிர்கிறதுங்க வாழ்த்துக்கள்.
ReplyDelete//கவிதையின் தன்னம்பிக்கை மிளிர்கிறதுங்க வாழ்த்துக்கள்.//
ReplyDeleteமிக்க நன்றிங்க கருணாகரசு :)
மிக அருமை வெற்றி பெற வாழ்த்துகிறேன்
ReplyDelete//மிக அருமை வெற்றி பெற வாழ்த்துகிறேன்//
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி, தேனம்மை லக்ஷ்மணன் :)
தானும் சிரித்துக் கொண்டது.
ReplyDeletenanum sirikkiren...
//nanum sirikkiren...//
ReplyDeleteமிக்க நன்றி, சக்தியின் மனம் :)
வெற்றி பெற வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி திகழ் :)
ReplyDelete