Sunday, December 20, 2009

அந்தக் கால கவுஜ

'85-ல் எழுதிய கவிதை ஒன்று... திகழுக்காக... :)





நிலவு

நிலவே நிலவே! கொஞ்சம் நில்!
நினைவில் சற்றே தேங்கிச் செல்.

அல்லிகள் மலரும் உன் அழகினைக் கண்டு;
உள்ளங்கள் மலரும் உன் உருவினைக் கண்டு.

பௌர்ணமி நிலவே, வேடிக்கை ஏன்?
வளர்ந்தும் தேய்ந்தும் வேதனை ஏன்?
இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி.
இதனை உணர்த்தவோ இவ் விளையாட்டு?

நட்சத்திரங்களின் நலமார்ந்த அன்னையே!
எத்தனை அருமைக் குழந்தைகள் பெற்றாய்!
குடும்பக் காட்டுப்பாடு உனக்கு மட்டும் இல்லையா?

இருள் எனும் அரக்கனின் இனிய எதிரியே!
காதலர் அனைவரின் கௌரவ சாட்சியே!

முழுமதியே! வெண்ணிலவே!
கதிரவனின் காதலியே!

சற்றே நில்!

உன் அழகின் இரகசியம்
சொல்லிச் செல்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/agrinberg/3347917839/sizes/m/

16 comments:

  1. //நினைவில் சற்றே தேங்கிச் செல்.//

    கேட்டதுமே கவிதையாய் 25 ஆண்டுகள் நினைவில் தேங்கி..நன்றி நிலவே!
    நன்றி திகழ்!

    அருமை கவிநயா:)!

    ReplyDelete
  2. நினைவுகளைத் தேக்கி வைத்த கவிதை மிக அழகாக இருக்கிறது கவிநயா,

    ReplyDelete
  3. எளிமையாகவும் அழகாகவும் உள்ளது. ஒன்றாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் இதனை வைக்கலாம்.
     
    நிலவுக்கு மட்டும் குடும்பக்கட்டுப்பாடு வேண்டாமே... :-)

    ReplyDelete
  4. ஆஹா!, 25 வருஷங்களுக்கு முன்னாடியே இப்படியெல்லாம் போட்டுத் தாக்கியிருக்கீங்களா?....சூப்பர். :)

    ReplyDelete
  5. முதலில் எனக்காக கவிதை தேடி எடுத்து இடுகை இட்டதற்கு மிக்க நன்றிங்க‌

    கவிதைக்கு அகவை 25 என்றாலும்
    இன்னும் இளமையாக, இனிமையாக தான் இருக்கிறது

    //நிலவே நிலவே! கொஞ்சம் நில்!
    நினைவை கொஞ்ச‌ம் சொல்.//
    //

    அற்புதம்

    இன்னும் இன்னும்...........

    வ‌ரிசையாய்..........

    ReplyDelete
  6. வாங்க ராமலக்ஷ்மி. நன்றி :)

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி ஜெஸ்வந்தி!

    ReplyDelete
  8. //நிலவுக்கு மட்டும் குடும்பக்கட்டுப்பாடு வேண்டாமே... :-)//

    ஆமாங்க உழவன், விதிவிலக்கு கொடுத்தாச்! :)

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. வாங்க மௌலி. வாசிப்பிற்கு நன்றி :)

    ReplyDelete
  10. //கவிதைக்கு அகவை 25 என்றாலும்
    இன்னும் இளமையாக, இனிமையாக தான் இருக்கிறது//

    :)))

    ரசித்தமைக்கு நன்றி திகழ்.

    //இன்னும் இன்னும்...........

    வ‌ரிசையாய்..........//

    அவ்ளோ இல்லை திகழ். அப்போ எழுதின கவிதைகளை விரல் விட்டு எண்ணிடலாம். படிச்சிக்கிட்டு வேற இருந்தேனா... அதான் :) உங்க ஆர்வத்தைப் பார்த்தா இன்னும் எழுதியிருக்கக் கூடாதான்னு தோணுது :) கண்டிப்பா அவ்வப்போது இடறேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  11. பழைய கவிதையும் மிக அழகாத்தான் இருக்கு. வாழ்த்துக்கள்..இவ்வளவு நாள் நினைவில் சுமந்ததிற்கு.

    ReplyDelete
  12. //பழைய கவிதையும் மிக அழகாத்தான் இருக்கு. வாழ்த்துக்கள்..இவ்வளவு நாள் நினைவில் சுமந்ததிற்கு.//

    கவிதையை என்னோட டயரிதான் சுமந்திச்சு! :)

    முதல் வருகைக்கு மிக்க நன்றி, திரு.கருணாகரசு.

    ReplyDelete
  13. //பௌர்ணமி நிலவே, வேடிக்கை ஏன்?
    வளர்ந்தும் தேய்ந்தும் வேதனை ஏன்?
    இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி.
    இதனை உணர்த்தவோ இவ் விளையாட்டு?//

    'வளர்ந்ததும், தேய்ந்ததும்'க்கு முறையே 'இன்பமும், துன்பமும்' ஏற்றிச் சொன்னது
    அழகாக இருக்கிறது. 'வேதனை'க்கு சமாதான்ம் சொல்லி தேற்றுகிற மாதிரி,இது இயற்கையின் நியதி' என்கிற வார்த்தை வந்து விழுந்திருக்கு, பாருங்கள்!

    இந்தக் கவிதையையே இப்பொழுது எழுதச் சொன்னால், சில திருத்தங்களைச் செய்வீர்கள் என்பது என் ஊக்ம்!

    ReplyDelete
  14. //'வேதனை'க்கு சமாதான்ம் சொல்லி தேற்றுகிற மாதிரி,இது இயற்கையின் நியதி' என்கிற வார்த்தை வந்து விழுந்திருக்கு, பாருங்கள்!//

    கவனித்து சொன்னமைக்கு மிக்க நன்றி ஜீவி ஐயா.

    //இந்தக் கவிதையையே இப்பொழுது எழுதச் சொன்னால், சில திருத்தங்களைச் செய்வீர்கள் என்பது என் ஊக்ம்!//

    உங்கள் ஊகம் சரிதான் என்பதே என் ஊகமும் :)

    ReplyDelete
  15. மீண்டும் மலரும் நிலா வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. வாங்க மாதேவி. நன்றி :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)