Monday, July 5, 2010

அமைதி




தகிக்கின்ற பூமி
கொதிக்கின்ற பாதை
வெறிக்கின்ற கதிரவன்
எரிக்கின்ற பார்வை

முத்துமுத் தெனவே
முளைத்து முகிழ்த்திடும்
சொத்துக்கள் சேர்ந்தென்னை
சோர்ந்திட வைத்திடும்

ஆயாசம் மேலும் கூடும்
ஆகாயம் போலே நீளும்
நெஞ்சுக்குள் தீயை மூட்டி
நினைவுக்குள் கங்காய்க் காய்க்கும்

முட்களே பாதை போடும்
வலிகளே வாழ்க்கை ஆகும்
கண்ணீரே காயம் ஆற்றும்
குருதியே தாகம் தீர்க்கும்

உள்ளுக்குள் உறையும் நேசம்
உயிரெல்லாம் வாசம் வீசும்
வெந்தாலும் வேதனை இல்லை
குளிர்ந்தாலும் குதூகலம் இல்லை

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.southshoreyoganetwork.com/db4/00355/southshoreyoganetwork.com/_uimages/lotuspose.bmp

4 comments:

  1. நல்லாயிருக்கு ;)

    ReplyDelete
  2. நன்றி கோபி :)

    ReplyDelete
  3. //உள்ளுக்குள் உறையும் நேசம்
    உயிரெல்லாம் வாசம் வீசும்
    வெந்தாலும் வேதனை இல்லை
    குளிர்ந்தாலும் குதூகலம் இல்லை//

    நல்ல வரிகள்.

    ReplyDelete
  4. நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)