அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தித் திரு நாள் நல்வாழ்த்துகள்!
ஆனை முக நாயகனே! ஆதிசக்தி பாலகனே!
ஐந்து கரம் கொண்டவனே! ஆறுமுகன்
சோதரனே!
பெற்றோரே உலகமென்று சுற்றி வந்தவனே!
சிற்றம்பலத்தானின் செல்வப் புதல்வனே!
ஒற் றைத் தந்தமுடன் ஒப்பின்றித்
திகழ்பவனே!
பற் றிக் கொண்டு விட்டால் பட்சமுடன் காப்பவனே!
பற் றிக் கொண்டு விட்டால் பட்சமுடன் காப்பவனே!
சுழி போட்டுத் தொடங்கி விட்டால்
வழி காட்டி உதவிடுவாய்!
பழி யேதும் வாராமல் விழியிமை
போல் காத்திடுவாய்!
அருகம் புல் மாலைக்கும் அன்புக்கும்
வசப்படுவாய்!
கரிமுகத்து நாயகனே இருவினையை அழித்திடுவாய்!
கரிமுகத்து நாயகனே இருவினையை அழித்திடுவாய்!
மூஞ்சூறு வாகனத்தில் முந்தி வந்து
அருளிடுவாய்!
மோதகத்தை விரும்பிடுவாய், மோகத்தை
விரட்டிடுவாய்!
ஆனைமுகம் கண்டால் அல்ல லெல்லாம்
ஓடிவிடும்!
பானை வயிறோனால் பட்ட துன்பம் மாறிவிடும்!
பானை வயிறோனால் பட்ட துன்பம் மாறிவிடும்!
அஞ்சற்க என்று சொல்லி அபயம் தந்து
விடும்!
நம்பிக்கை கொண்டோரைத் தும்பிக்கை
காத்து விடும்!
--கவிநயா
சிறப்புக் கவிதை
ReplyDeleteவெகு வெகுச் சிறப்பு
நல் வாழ்த்துக்களுடன்...
மிக்க நன்றி ரமணி!
Deleteநல்ல பாடல். உங்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி வெங்கட்!
Deleteமிக அருமையான பாடல்.. பண்டிகை தின நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteமிக்க நன்றி பார்வதி!
Deleteஅழகான பாடல் கவிநயாம்மா. இன்றுதான் பார்த்தோம் மன்னிக்கவும்.
ReplyDelete