வெள்ளைக் கமலத்திலே வீற்றிருப்பாள்
வெள்ளை உள்ளத் தாமரையில் குடியிருப்பாள்
(வெள்ளை)
நாமகள் என்னும் பெயர் கொண்டவளாம்
நான்முகன் நாவினிலே நின்றவளாம்
(வெள்ளை)
வீணை அவள் கரங்களிலே தவழ்ந்திருக்கும்
மானனைய கருவிழிகள் மருண்டிருக்கும்
தேனனைய இதழில் நகை மலர்ந்திருக்கும்
ஞானம் அவள் வடிவினிலே ஒளிர்ந்திருக்கும்
(வெள்ளை)
--கவிநயா
அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!
தங்களுக்கும் இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.
ReplyDeleteசரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்.....
ReplyDelete