- ஒவ்வொரு நாளின் ஆரம்பத்திலும் 5 நிமிடங்கள் செலவிடுங்கள். நாம் அனைவரும்வேண்டுவது ஒன்றையே என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதாவது, அனைத்து மனிதர்களும் வேண்டுவது சந்தோஷமும், அன்புமே. நாம் அனைவரும் ஒருவரோடுவர் பிணைக்கப்பட்டவர்கள்.
- 5 நிமிடங்கள் ஆழ்ந்து சுவாசியுங்கள். மூச்சை உள்ளிழுக்கும்போது, உங்களைப் பற்றியும், வெளி விடும்போது பிறரைப் பற்றியும் அன்புடன் சிந்தியுங்கள். சில பேரிடம் அன்பு செலுத்துவது சிரமமாக இருக்கும். இருந்தாலும் முயற்சித்து அவர்களுக்கும் உங்கள் எண்ணத்தின் மூலம் அன்பை அளியுங்கள்.
- நாள் முழுவதும் சந்திக்கும் அனைவரிடமும் அத்தகைய அன்பையே வெளிப்படுத்துங்கள். அன்றாட வேலைகளில் சாதரணமாக நாம் அதிகம் கவனிக்காதவர்களிடமும், (கடைக்காரர், ஆட்டோ ஓட்டுநர், இப்படி) அன்பை விரிவுபடுத்துங்கள்.
- என்ன ஆனாலும் இந்த பயிற்சியைக் கை விடாதீர்கள். தொடர்ந்து கடைப்பிடியுங்கள்.
அன்பு சார்ந்த இத்தகைய எண்ணங்கள் மிக எளிமையாகத் தோன்றினாலும், மிகவும் வலிமையானவை. ஆன்மாவின் இயல்பான அன்பை ஆழமாக உணரச் செய்யும் அருமையான பயிற்சியைத் தருபவை.
--தலாய் லாமா
ஆங்கிலத்தில் படித்ததை தமிழில் எழுதி இருக்கிறேன்
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன்
கவிநயா
படத்திற்கு நன்றி: http://revelationsofprofoundlove.com/somehow-i-am-always-held/
வணக்கம்
ReplyDeleteஅருமையான சிந்தனைத் துளி பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன்.
Delete
ReplyDeleteஅன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (16/06/2015)
தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை, மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
தகவலுக்கு மிக்க நன்றி திரு.வேலு. திரு வை.கோ. ஐயாவின் அன்பிற்கும் மிகவும் நன்றி. அவர் பதிவிலும் சென்று பார்க்கிறேன்...
Deleteஅன்புள்ள சகோதரி கவிநயா அவர்களுக்கு வணக்கம்! நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.
ReplyDeleteதங்களின் வலைத்தளத்தினை இன்று (16.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
நினைவில் நிற்போர் - 16ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/16.html
மிக்க நன்றி திரு.தமிழ் இளங்கோ. திரு வை.கோ.ஐயா சிறந்த பணி செய்து பதிவர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார். அவருக்கும் நன்றிகள் பல.
Delete