டிக் டிக் டிக் எனும் கடிகாரம்
டக் டக் டக்கென அது ஓடும்
பட் பட் பட்டெனப் பறப்போர்க்கு
சட் சட் சட்டென மணி சொல்லும்!
நிற்கும் இடத்தில் ஓடிடுமாம்
நேரம் சரியாய்க் காட்டிடுமாம்
முட்கள் இரண்டால் பேசிடுமாம்
மொழியே இல்லாக் கடிகாரம்!
ஊருக்கெல்லாம் மணி சொல்ல
மணிக் கூண்டினிலே அமைந்திருக்கும்
கண்ணில்லார்க்கும் மணி சொல்ல
கண்டாமணியென ஒலித்திருக்கும்!
டிங் டிங் டாங்கென்று ஒலிக்கும்
ஒன்று
குக் குக் கூவெனக் கூவும் ஒன்று
சப்தமின்றி மணி காட்டும் ஒன்று
சகலருக்கும் உதவும் கடிகாரம்!
காலம் காட்டும் கடிகாரம்!
கடமை தவறாக் கடிகாரம்!
சற்றும் ஓயாக் கடிகாரம்!
அயரா உழைப்பே அதன் சாரம்!
--கவிநயா
படத்துக்கு நன்றி: கூகுளார்
வணக்கம்
ReplyDeleteகவியின் கற்கனை அபாராம்.... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன்!
Deleteஅருமையான பாடல். குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.
ReplyDeleteமிக்க நன்றி வெங்கட்!
Delete