Sunday, February 19, 2012

வாயில் இருக்கு வழி!


சில நாட்களுக்கு முன்னால் வெளியூர் போக வேண்டியிருந்தது. வழக்கமாகப் போகிற ஊர் இல்லை, அதனால் வழி எல்லாம் புதுசாக இருந்தது. போகும் போது பரவாயில்லை, ஆனா வரும்போது இருட்டு; எக்கச்சக்க போக்குவரவு; கூடவே மழை வேறே. அதனால வண்டி சாரத்தியம் அத்தனை சுலபமாக இருக்கலை. வழி சொல்கிறவங்க (அதாங்க GPS) அவங்களே தொலைஞ்சு போயிட்டாங்க. அதனால சில சமயம் வழியில் நிறுத்திக்கிட்டு, வரைபடத்தை வச்சு பார்த்துக்கிட்டு, இப்படியே மெதுவா வர வேண்டியதாயிடுச்சு.

இந்த மாதிரி பிரயாணம் பண்ணும்போதுதானே குருட்டாம்போக்குல யோசனை ஓடும்? (அப்ப மட்டுந்தானான்னு கேக்குறீங்க… தெரியுது தெரியுது!). அப்ப தோணுச்சு, நம்ம ஊர்லன்னா அங்கங்க நிறுத்தி நிறுத்தி, வழியில் வர்ற ஆளுங்களை வழி கேட்டுக்கிட்டே போயிருவோம், இங்க இப்படி நாமளே கஷ்டப்பட்டு நிறுத்தி நிறுத்தி பாத்துக்கிட்டே வர வேண்டியதா இருக்கே, அப்படின்னு. அது கூட பரவாயில்லை, கொஞ்சம் விட்டுட்டோம்னா, சுத்தி கித்தி, தொலைஞ்சு போயி, மறுபடி சரியான வழியைப் பிடிக்கிறதுக்குள்ள டென்ஷன் ஆகி… போதும் போதும்னு ஆயிடும்.

அந்த குருட்டாம்போக்கு யோசனையின் போதுதான் நம்ம ஊர்ல சொல்ற பழமொழி நினைவு வந்தது – ‘வாயுள்ள புள்ளை பிழைக்கும்’னு சொல்வாங்க இல்ல? அதே போல ‘வாயில இருக்கு வழி’, அப்படின்னும் சொல்வாங்க. அதாவது பேச்சுத் திறமை இருந்தா போதும், பொழச்சுக்கலாம். வாயத் தொறந்து சங்கோஜமில்லாம வழி கேக்க தெரிஞ்சா போதும், ஊர் போய்ச் சேந்துரலாம்.

‘வாயில இருக்கு வழி’ பத்தி நினைக்கும் போதுதான் ‘பளீர்’னு ஒரு பல்பு எரிஞ்சது. ஒரு வேளை இது ஆன்மீக சம்பந்தமாக ஏற்பட்டதோ, அப்படின்னு. பலப்பல மகான்களும், நாம சங்கீர்த்தனம்தான் இறைவனை அடைய கலியுகத்தில் சுலபமான வழின்னு சொல்லியிருக்காங்க. நாம சங்கீர்த்தனம் வாயினாலதானே பண்ணனும்? அதன்படி பார்த்தா, இறைவனை அடையும் வழி வாயில்தானே இருக்கு!

இது எப்படி இருக்கு? :) 


--கவிநயா

நன்றி: வல்லமை 
படத்துக்கு நன்றி: தினமலர்

8 comments:

  1. "இது எப்படி இருக்கு?"

    ithu rombave nallaarukku!

    aum nama:chivaaya!

    ReplyDelete
  2. நல்ல வழி. நல்ல விளக்கம். நன்றி கவிநயா.

    நானும் சொல்லிக் கொள்கிறேன்: நமசிவாய!

    ReplyDelete
  3. //ithu rombave nallaarukku!//

    நன்றி லலிதாம்மா.

    ReplyDelete
  4. //நல்ல வழி. நல்ல விளக்கம். நன்றி கவிநயா.

    நானும் சொல்லிக் கொள்கிறேன்: நமசிவாய!//

    நல்லது :) நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  5. //நல்லா இருக்கு. :-)//

    நன்றி குமரன் :)

    ReplyDelete
  6. ஜூப்பரு கவிநயா. வல்லமையிலேயே வாசிச்சேன். இன்னொருக்கா இங்கியும் வாசிச்சு ரசிச்சேன்.

    ReplyDelete
  7. மிகவும் நன்றி அமைதிச்சாரல் :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)