கீழே இருக்கிற பாட்டை 'மூத்த' காதலர் ஒருத்தர் பாடித் தந்திருக்காரு. நீங்களே போட்டுப் பார்த்துக் கண்டு பிடிங்க! கண்டிப்பா கடைசி வரை பாருங்க. கடைசியில் ஒரு surprise இருக்கு! :)
லலிதாம்மாவும் 'why this கொல வெறி' மெட்டில் பாடி அசத்தி இருக்காங்க, இங்கே!
பெண்:
வச்ச கண்ணு வாங்கவில்ல
வாங்கிய பின் தூங்கவில்ல
ராசாவே செல்ல ராசாவே
ஆண்:
மச்ச விழிப் பார்வையாலே
மச்சான் நெஞ்சத் தைக்கிறியே
ரோசாவே சின்ன ரோசாவே
பெண்:
சின்ன மனக் கூட்டுக்குள்ள
சிம்மாசனம் போட்டு வச்சேன்
சிம்மாசனத்துக்குன்னே
சிங்கம் போல வந்து சேர்ந்தே
ஆண்:
வம்பெதுவும் வேணாமுன்னு
எம்மனசப் பூட்டி வெச்சேன்
கள்ளச் சாவி கொண்டுகிட்டு
காத்தப் போல நீ நுழைஞ்சே
பெண்:
ஊருறங்கும் வேளையிலே
ஊதக் காத்து வீசையிலே
யாரு கண்ணும் படாம
பேசுறது வேணாமய்யா
ஆண்:
ஊரெல்லாங் கூட்டி வச்சு
ஒங் கழுத்தில் தாலி கட்டி
கண்ணப் போலக் காப்பாத்துவேன்
கவலையெதும் வேணாமடி--கவிநயா
படத்துக்கு நன்றி: கூகுளார்
படத்துக்கு நன்றி: கூகுளார்
அருமையான பாடல்:)!
ReplyDeleteலிங்க் வேலை செய்யவில்லையே. ஆனாலும் மூத்த காதலர்களின் சம்பாஷணை பதிவொன்றை நேற்று வாசித்தேன். அவரே இதையும் பாடியிருப்பாரென்று ஒரு அனுமானம்:)! லிங்க சரி செய்து வையுங்கள். வந்து கேட்கிறேன்.
லிங்க் பற்றி சொன்னதுக்கு நன்றி ராமலக்ஷ்மி. இப்போ சரியா இருக்கும்னு நினைக்கிறேன். பார்த்துட்டு வாங்க, காத்திருக்கேன் :)
ReplyDeleteமீண்டும் மீண்டும் போட்டுக் கேட்டு ரொம்ப எஞ்சாய் பண்ணேன் ;
ReplyDeletesr citizen போட்டிக்கு நானும்[நேரம் கிடைத்தால்] பாடி அனுப்ப இருக்கேன்!
ஜாக்கிரதை !!
subbu thatha than padi irukkanum. appurama potu ketkiren.
ReplyDeleteலலிதாம்மா, நீங்க பாடித் தந்ததையும் இணைச்சிருக்கேன். உங்க குரல் டீனேஜர் குரல் போல சும்மா கொஞ்சுது போங்க! நன்றி அம்மா :)
ReplyDeleteவாங்க கீதாம்மா. பாத்துட்டீங்களா, கடைசி வரை? :)
ReplyDeleteso sweet :)
ReplyDeleteரொம்ப அழகு. மொதல்ல சுத்திப் போடுங்க. :)
நல்லாயிருக்கனும் முருகா! நல்லாயிருக்கனும் :)
வாங்க ஜிரா. உங்க பரவசத்தைப் பார்த்து சந்தோஷமா இருக்கு :) உரியவங்க பார்த்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். மிகவும் நன்றி.
ReplyDelete