Sunday, November 6, 2011

நிரப்புவோமா?



மன மென்னும் கலன் –
காலியாய் வைத்திருந்தால்
கசடுகள் சேர்ந்து விடும்
கருமையில் தோய்ந்து விடும்
அன்பாலே நிரப்பி வைத்தால்
அகமெல்லாம் இன்பம் பொங்கும்
அகிலமெல்லாம் இனிமை தங்கும்!


--கவிநயா

10 comments:

  1. அருமை கவிநயா. அழகான படமும்.

    கண்வலி இப்போது பரவாயில்லையா?

    ReplyDelete
  2. கண்டிப்பாக அன்பால் நிரப்பினால் அதுவே நிறைவாகும்.
    கவிதை சின்னதானாலும் சிறப்பு .

    ReplyDelete
  3. தேன்தான் கெடாத பொருள்; அது போல அன்பும், அப்படின்னு குறிப்பா காண்பிக்கறதுக்காக... :)

    பரவாயில்லை... இன்னும் சிகிச்சை போய்க்கிட்டிருக்கு.

    நன்றி ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  4. //கண்டிப்பாக அன்பால் நிரப்பினால் அதுவே நிறைவாகும்.
    கவிதை சின்னதானாலும் சிறப்பு .//

    ஷைலஜா அக்காவை இந்தப் பக்கம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி :) நன்றி அக்கா.

    ReplyDelete
  5. மனக்கலத்தின் விளிம்பில் தளும்பும் அன்பு ஒரு குட்டிக் கவிதையாய்.......

    ReplyDelete
  6. வாங்க லலிதாம்மா! மிக்க நன்றி.

    ReplyDelete
  7. நல்ல கவிதை ! கண்கள் நலமா ?

    ReplyDelete
  8. கண்கள் அவள் கையில் :)

    மிக்க நன்றி தானை தலைவி!

    ReplyDelete
  9. வைஷ்ணவ குருவாகிய ஸ்ரீ ராமானுஜரின் சகோதரர் ஸ்ரீ எம்பார் சுவாமிகள் (சித்தி பையன்). இவர் சென்னையை அடுத்துள்ள மதுர மங்கலம் என்ற ஊரில் பிறந்தவர்.இந்த ஊர் ஸ்ரீ ராமானுஜரின் அவதார ஸ்தலமான ஸ்ரீ பெரும்புதுருக்கு அருகில் உள்ளது. என் மகள் ஐந்து வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டி வந்துவிட்டது( நானும் சிறு வயதிலிருந்தே கண்ணாடி தான்). அப்போது ஒரு தோழி இந்த எம்பார் சுவாமிகளின் ஸ்லோகம் எழுதி கொடுத்து தினமும் சொல்லிவரும் படி கூறினார். அவர் கொடுத்த ஸ்லோகத்தை நானும் என் மகளும் தினமும் சொல்லி வருகிறோம். ஒரு முறை மதுர மங்கலதிர்க்கும் குழந்தையை அழைத்து சென்று வந்தோம். அந்த ஸ்லோகங்களை உங்களுக்கு அனுப்புகிறேன். தினமும் சொல்லி வாருங்கள். மதுரையம்பதி மௌலி சார் இவரை பற்றி ஒரு பதிவு எழுதி உள்ளார்.



    ஸ்ரீ எம்பார் விஷயமான முக்தக ஸ்லோகங்கள்.

    ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வா s நபாயிநீ |
    ததா யத்தத்ஸ்வருபா ஸா ஜீயாந்மத்விச்ரமஸ் த வீ ||

    ஹ்ருதி நாராயணம் பச்யந் நாப்யகச் சத்ர ஹஸ்ஸதா |
    யஸ்ஸ்வதாரரதெள சாபி கோவிந்தம் தமுபாஸ்மஹே ||

    புஷ்யே புனர்வசுதினே ஜாதம் கோவிந்த தேசிகம் |
    ராமானுஜ பதாம்போஜ ராஜஹம்சம் சமாஸ்ரயே ||

    மங்களம் தேசிகேந்த்ராய மங்களம் குணசிந்தவே |
    மங்களம் கோவிந்தார்யாய நித்யஸ்ரீர் நித்ய மங்களம் ||

    *********************************

    ReplyDelete
  10. ஆஹா, ஸ்லோகத்திற்கு மிகவும் நன்றி தானைத் தலைவி!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)