Sunday, September 4, 2011

என்ன பேரு வைக்கலாம்?

பேர் வெக்கிறதுன்னா ரொம்பப் பிடிக்கும், சந்திரனுக்கு. இப்பன்னு இல்ல, சின்னப் புள்ளையில இருந்தே அப்படித்தான். ஒண்ணாங் கிளாஸ் படிக்கும் போதே ‘ஓகே மிஸ்’ அப்படின்னு இஞ்கிலீஷ் டீச்சருக்கு பேர் வச்சான்! ஏன்னா அவங்க “ஓகே? ஓகே?” அப்படின்னு மூச்சுக்கு முந்நூறு தரம் சொல்லுவாங்களாம்.

இப்ப குடும்பஸ்தனா ஆனபிறகும் அந்தப் பழக்கம் விடல. நண்பர்கள், உறவினர்கள், ஏன், பஸ்ல, ரயில்ல பழகறவங்களுக்குக் கூட பேர் வெச்சிருவான்.

அன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. சாயந்திரம் நொறுக்கறதுக்கு உருளைக்கிழங்கு போண்டா பண்ணியிருந்தா, அவன் மனைவி ரமா. சுடச் சுட ஆனந்தமா சாப்பிட்டான்.

“ரமா, இந்த போண்டாவைப் பார்த்தோன்ன உனக்கு என்ன ஞாபகம் வருது, சொல்லு பார்ப்போம்”

போண்டாவை எண்ணெயில போட்டுக்கிட்டே “ரவி… ரவி… நீயும் வந்து போண்டா எடுத்துக்கோட கண்ணா. உனக்குப் பிடிக்குமே”, என்று மகனைக் கூப்பிட்டவள், “எனக்கொண்ணும் நினைவு வரலையே?” புருவத்தைச் சுருக்கினா, ரமா.

“நம்ம வீட்டுக்கு வந்த ஒத்தர் நீ பண்ணின போண்டாவெல்லாம் யாருக்கும் மிச்சம் வெக்காம தானே சாப்பிட்டாரே… நினைவில்லயா நம்ம போண்டா மாமாவை? அப்பாடி. என்னமா சாப்டார் மனுஷன்!”

“ஏங்க, என் போண்டா அவருக்கு அவ்வளவு பிடிச்சதில எனக்கு சந்தோஷம் தான். பாவம் அவர ஏன் நீங்க இன்னும் கிண்டல் பண்றீங்க?” சொல்லிக்கிட்டே மணக்க மணக்க காஃபியைப் பக்கத்தில வெச்சா.

“அதில்ல ரமா. அவர் பொண்டாட்டி அவருக்கு போண்டாவே செஞ்சு குடுத்திருக்க மாடாங்கன்னு நெனக்கிறேன்… ஆமா, அந்தம்மாவை நினைவிருக்கோ ஒனக்கு?”

“ஏன் நினைவில்லாம? நல்லா நினைவிருக்கே”

“அதானே. எதை மறந்தாலும் அந்த ஜி.ஆர்.டி. ஆண்ட்டியை எப்படி மறப்பே?”

“ஏங்க, அவங்க எக்கச்சக்கமா நகை போட்டுக்கிட்டு வந்தது உண்மைதான், அதுக்குன்னு இப்படியா பேர் வெப்பீங்க?” அப்படின்னு சொன்னாலும் இதழில் பிறந்த புன்னகையைத் தடுக்க முடியலை, ரமாவுக்கு.

“பின்ன என்ன ரமா? நம்ம பையன் பிறந்த நாளுக்கு வர்றவங்க இப்படியா வர்றது? பையனோட அம்மா, நீயே அவ்வளவு பிரமாதமா அலங்காரம் பண்ணிக்கல! வந்தவங்களுக்கே சந்தேகம் வந்திருக்கும், அது யார் வீட்டு விசேஷம்னு!”

அத்தனையும் பேசிட்டு, கூடவே மறக்காமல், “காஃபியும் போண்டாவும் சூப்பர் ரமா”, மனைவியையும் மனமாரப் பாராட்டும் போது அழைப்பு மணி அடிச்சது.

“நாம் பாக்கிறேம்மா”, ரவி எழுந்து வாசலுக்கு ஓடிப் போய் கதவத் தொறந்தான்.

“ஹாய் அங்கிள். ஹாய் ஆண்ட்டி”, என்றவன், “அப்பா, நீங்க பேசிக்கிட்டிருந்தீங்களே அந்த போண்டா மாமாவும், ஜி.ஆர்.டி. ஆண்டியும் வந்திருக்காங்க”, என்று உள்ளே திரும்பி சத்தமாக அறிவித்தான்!

**

பாடம் 1: புறம் பேசாமல் இருப்பது மிக மிக நல்லது.
பாடம் 2: அப்படியே பேசினாலும் குறைந்தது குழந்தைகள் முன்பு பேசாமல் இருப்பது நல்லது.

**

--கவிநயா

17 comments:

  1. நன்னா வேணும் அந்த தம்பதிக்கு !, இனிமேலாவது புத்தி வந்தா சரி. கதை அருமை.

    ReplyDelete
  2. //நன்னா வேணும் அந்த தம்பதிக்கு !, இனிமேலாவது புத்தி வந்தா சரி. கதை அருமை.//

    நன்றி தானைத் தலைவி :)

    ReplyDelete
  3. கதையின் முடிவுக்குப் பின்னான காட்சியை மனக்கண்ணில் பார்த்தேன்:)! படிப்பினை தரும் நல்ல கதை கவிநயா.

    ReplyDelete
  4. நன்றி கவிநயா !, அந்த அம்மா மட்டுமல்ல, புதுகோட்டை, வைதீஸ்வரன் கோவில் எல்லாமே உங்களுக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமைகள். நேற்று தான் உங்கள் வைதீஸ்வரன் கோவில் பாதயாத்திரை அனுபவங்களை படித்தேன்.அருமை.

    ReplyDelete
  5. கவிநயா !, புவனேஸ்வரி குறித்த உங்கள் பாடலை கேட்க முடியவில்லை, என்னிடம் அதற்கான facilities இல்லை என்று நினைக்கிறன். youtube மாதிரி எதாவது வேறு options இருக்கிறதா ?

    ReplyDelete
  6. இதைப்படித்ததும் என் மகள் மூணு வயசிலே பண்ணது நினவுக்குவறது!

    அப்போவே பளிச்சு பளிச்சுன்னு ஸ்பஷ்டமா பேசுவா;சேட்டர்பாக்ஸ் ன்னு டைட்டில் வாங்கியிருந்தா;தண்ணிப் பைத்தியம்;யாராவது பாத்ரூம்கதவைத்திறந்தா இவளும் பின்னாடியே உள்ளே நோழைஞ்சிடுவா;

    அதத்தடுக்கறதுக்காக "மத்தவா குளிக்கப்போரச்சே நீ அங்கே போகக்கூடாது;போனா ஒன்ன தண்ணிடப்ல வேளயாடவே விடமாட்டேன்''

    என்று மிரட்டி வைத்தேன்.

    ஒருநாள் ஒரு பல்லியைப் பார்த்ததும் அதைப்பிடிக்க ட்ரை பண்ணிண்டிருந்தா;எனக்கோ அந்தண்ட நகர்ந்தா இவ அதக் கையாலே புடிச்சுடுவாளோன்னு பயம்;தடுக்கறதுக்காக ரொம்ப அன்பா அவளை மடியில ஒக்காத்திவச்சி,''பல்லிய கையாலே தொடாதே கண்ணா; அது ஒரே dirty "

    என்றேன்."இல்லையே ;க்லீனாத்தான் இருக்கும்மா!"

    ''இல்லே கண்ணா ;அதெல்லாம் குளிக்கறதே இல்லையே ;ஒரே அழுக்கு;

    தொடக்கூடாது''

    ''பல்லி க்லீன்தான்மா;குளிக்கும்;பாத்ரூமுக்குள்ள அது போறச்சே பாத்தேனே!''

    ''பல்லி குளிச்சதைப்பாத்தியா?"

    "நீதானே மத்தவா குளிக்கரச்சே பாக்கக்கூடாதுன்னு சொன்னே?''

    ReplyDelete
  7. //கதையின் முடிவுக்குப் பின்னான காட்சியை மனக்கண்ணில் பார்த்தேன்:)!//

    :) நல்ல வேளையாப் போச்சு போங்க! :)

    //படிப்பினை தரும் நல்ல கதை கவிநயா.//

    நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  8. //அந்த அம்மா மட்டுமல்ல, புதுகோட்டை, வைதீஸ்வரன் கோவில் எல்லாமே உங்களுக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமைகள்.//

    மிக்க மகிழ்ச்சி தானை தலைவி :)

    //என்னிடம் அதற்கான facilities இல்லை என்று நினைக்கிறன். youtube மாதிரி எதாவது வேறு options இருக்கிறதா ?//

    யூட்யூபில் இல்லையே :( இதுவரை எதுவும் போட்டதில்லை. esnips-ல இருந்து play பண்றதுக்கு உங்க browser-ல Windows media player plugin இருக்கணும். இல்லைன்னா அதுலயே download பண்ற option வருமே?

    அப்படி இல்லன்னா பாட்டையே download பண்ணி ப்ளே பண்ணலாம்.

    அதுவும் இல்லன்னா, எனக்கு மடல் அனுப்புங்க - தக்குடுகிட்ட என் மின்னஞ்சல் கிடைக்கும்.

    (இவ்வளவெல்லாம் கஷ்டப்பட்டுட்டு, கேட்கும்போது சகிக்கலைன்னா என்னைத் திட்டக் கூடாது! :)

    ReplyDelete
  9. //இதைப்படித்ததும் என் மகள் மூணு வயசிலே பண்ணது நினவுக்குவறது!//

    OMG அம்மா! படிக்கப் படிக்க, கற்பனையில் காட்சி ஓட, விழுந்து விழுந்து சிரிச்சேன் :) குட்டீஸ்னா குட்டீஸ்தான்! :)

    பகிர்தலுக்கு மிக்க நன்றி லலிதாம்மா :)

    ReplyDelete
  10. நல்ல சுவாரஸ்யமான பயனுள்ள பதிவு
    கடைசியாக பாடம் 1,2 எனப் போட்டிருந்தது
    பிடித்திருந்தது.லலிதா மிட்டல் அவர்களின்
    பின்னூட்டமும் அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. //நல்ல சுவாரஸ்யமான பயனுள்ள பதிவு
    கடைசியாக பாடம் 1,2 எனப் போட்டிருந்தது
    பிடித்திருந்தது.லலிதா மிட்டல் அவர்களின்
    பின்னூட்டமும் அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்//

    வாருங்கள் ரமணி. ரசித்தமைக்கு மிகவும் நன்றி :)

    ReplyDelete
  12. //migavum rasiththen//

    மிக்க நன்றி திரு.நடராஜன் :)

    ReplyDelete
  13. கரெக்டுதான் அக்கா, அதனால தான் நான் எந்த மாமா/மாமிக்கும் பேரே வைக்கர்து கிடையாது ...:PP இது எதோ என்னோட எதிர்கால குடும்ப கதை மாதிரி இருக்கு!! :-)

    @ தானை தலைவி அக்கா, கவினயாக்காவோட மெயில் ஐடி உங்களுக்கு அனுப்பி வைக்கறேன்.

    ReplyDelete
  14. //கரெக்டுதான் அக்கா, அதனால தான் நான் எந்த மாமா/மாமிக்கும் பேரே வைக்கர்து கிடையாது ...:PP இது எதோ என்னோட எதிர்கால குடும்ப கதை மாதிரி இருக்கு!! :-)//

    அடக் கடவுளே! என் தம்பி தக்குடுவைப் பத்தி தெரியாதா உங்களுக்கு? தக்குடு நமக்கு பேர் வெக்கக் கூடாதான்னு ஏங்கறவங்கதான் அதிகம்! :) தக்குடு பேர் வெச்சா, அவங்க முகத்துக்கு நேரே சொன்னாலும் சந்தோஷப் படற மாதிரி, அவங்களே ஆசைப்படற மாதிரி இருக்கும். இந்தக் கதை மற்றவங்க மனம் புண்படற மாதிரி பேசறவங்களுக்காகத்தான். தக்குடுவுக்கு இல்லை!

    ReplyDelete
  15. //தக்குடு பேர் வெச்சா, அவங்க முகத்துக்கு நேரே சொன்னாலும் சந்தோஷப் படற மாதிரி, அவங்களே ஆசைப்படற மாதிரி இருக்கும்// அதென்னவோ வாஸ்தவம் தான். ப்ளாக்ல உள்ள ரெண்டு மாமிக்கு அவாளோட சொந்தபேர் காணாம போய் எல்லாரும் தக்குடு செல்ல்லமா வச்ச பேர்ல கூப்பிட்டுண்டு இருக்கா!! :))

    ReplyDelete
  16. //அதென்னவோ வாஸ்தவம் தான். ப்ளாக்ல உள்ள ரெண்டு மாமிக்கு அவாளோட சொந்தபேர் காணாம போய் எல்லாரும் தக்குடு செல்ல்லமா வச்ச பேர்ல கூப்பிட்டுண்டு இருக்கா!! :))//

    மீள் வருகைக்கு நன்றி தம்பீ!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)