5.
காலாம்பு(3)தாளி லலிதோரஸி கைடபா(4)ரே:
தா(4)ராத(4)ரே ஸ்புரதி யா தடி(3)த(3)ங்க(3)னேவ
மாதுஸ்ஸமஸ்த ஜக(3)தாம் மஹனீய மூர்தி:
ப(4)த்(3)ராணி மே தி(3)ச(H)து பா(4)ர்க(3)வ நந்த(3)னாயா:
கைடப அரக்கன் தலையைக் கொய்தசக் ராயுத பாணி
சாமள வண்ணப் பரந் தாமனின் மார்பின் மேலே
கருத்திட்ட மேகத் திரளில் தெறித்திட்ட மின்னல் போலே
ஒளிர்ந் திட்டாய் பிருகு வம்சம் பிறந்திட்ட அன்புத் தாயே
அகிலத்தின் அன்னை உன்றன் எழில்விழி என்மேல் பட்டால்
இகபரச் சுகங்கள் யாவும் இன்றேநான் கொள்வேன் தாயே!
6.
ப்ராப்தம் பத(3)ம் ப்ரதமத: கலுயத் ப்ரபா(4)வாத்
மாங்கல்யபா(4)ஜி மது(4)மாதினி மன்மதேன
மய்யாபதேத் ததி(3)ஹ மந்தரம் ஈக்ஷணார்த(4)ம்
மந்தா(3)லஸம் ச மகராலய கன்யகாயா:
போர்க்கணை தொடுத்த அரக்கனைப் புறமிடச்செய் தோன்மீது
மலர்க்கணை தொடுத்து எளிதாய் மாரனும் வென்றது உன்றன்
நிகரில்லாக் காதல் பொங்கும் நீள்விழி துணையால் அன்றோ
நேயத்தால் நெகிழ்ந்து நோக்கும் நங்கையுன் விழிகள் தம்மின்
கடைவிழிப் பார்வை யேனும் கடையன்மேல் பட்டால் போதும்
அளவிலாச் செல்வம் பெற்று அவனியில் உய்வேன் தாயே!
--கவிநயா
(தொடரும்)
அருமையான படம். மொழியாக்கமும் நன்றாக உள்ளது.
ReplyDeleteவரிகள்ல கொஞ்சும் அழகு அப்பிடியே அக்கா போட்ட படத்துலையும் துள்ளி விளையாடர்து!! லக்ஷ்மி கடாக்ஷமான முகம் என்பதன் அர்த்தம் வரிகளிலும் அவளின் விழிகளிலும்! :))
ReplyDeleteஅற்புதமான படங்கள். அழகழனான வரிகள். பகிர்தலுக்கு நன்றி.
ReplyDeleteஅருமை....
ReplyDelete//அருமையான படம்.//
ReplyDeleteஆமால்ல? :)
//மொழியாக்கமும் நன்றாக உள்ளது.//
நன்றி கீதாம்மா.
//வரிகள்ல கொஞ்சும் அழகு அப்பிடியே அக்கா போட்ட படத்துலையும் துள்ளி விளையாடர்து!! லக்ஷ்மி கடாக்ஷமான முகம் என்பதன் அர்த்தம் வரிகளிலும் அவளின் விழிகளிலும்! :))//
ReplyDeleteஅவளைப் பற்றி பேசினாலே தானாக வந்து அமர்ந்திடுவா போலருக்கு... :)
நன்றி தக்குடு.
//அற்புதமான படங்கள். அழகழனான வரிகள். பகிர்தலுக்கு நன்றி.//
ReplyDeleteமிக்க நன்றி ஜீவி ஐயா.
//அருமை....//
ReplyDeleteநன்றி மௌலி :)
அட இத்தனை நாளா இங்கே வரமலேயெ நாளை வேஸ்ட் பண்ணிட்டேன்.
ReplyDeleteநல்லா எழுதறீஙக கவிநயா. தொடரட்டும் இறைப்பணி
படமும் வரிகளும் அழகு.
ReplyDelete//தொடரட்டும் இறைப்பணி//
ReplyDeleteஆசிகளுக்கு மிக்க நன்றி தி.ரா.ச ஐயா.
//படமும் வரிகளும் அழகு.//
ReplyDeleteமிக்க நன்றி ராமலக்ஷ்மி.