பெற்றவளை அம்மா என்றுதான்
நானும் அழைத்தேன்
நீயும் அழைத்தாய்
அகர முதல எழுத்தெல்லாம்
அரிச் சுவடி தொடங்கித்தான்
நானும் படித்தேன்
நீயும் படித்தாய்
வானத்தின் நிறத்தை நீலம் என்பதாய்த்தான்
நானும் அறிந்தேன்
நீயும் அறிந்தாய்
வானவில் காண்கையில் அழகு என்றுதான்
நானும் ரசித்தேன்
நீயும் ரசித்தாய்
இருப்பினும்
கண்டத்தில் புறப்பட்ட
பொருளில்லாச் செருமல் போல்
நீ பேசுவன எனக்கும்
நான் பேசுவன உனக்கும்
புரியாமலே போவ தெப்படி?
--கவிநயா
//கண்டத்தில் புறப்பட்ட
ReplyDeleteபொருளில்லாச் செருமல் போல்//
ஆம் அழகாய் சரியாய் சொன்னீர்கள்! கவிதைக்கு மிகப் பொருத்தமாக அந்தப்படமும்.
நல்லதொரு சிந்தனை!!
ReplyDeleteகவிதைக்கான நிழற்படம்
ReplyDeleteகவிதையின் அடிக்கருத்தியலுக்கு
மேலும் சிறப்பளிப்பதாக விளங்குகிறது.
//ஆம் அழகாய் சரியாய் சொன்னீர்கள்! கவிதைக்கு மிகப் பொருத்தமாக அந்தப்படமும்.//
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி :)
//நல்லதொரு சிந்தனை!!//
ReplyDelete//கவிதைக்கான நிழற்படம்
கவிதையின் அடிக்கருத்தியலுக்கு
மேலும் சிறப்பளிப்பதாக விளங்குகிறது.//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, திரு.குணசீலன்.
இதுதான் 'பேசும் படம்'!
ReplyDeleteகவிதையின் கருத்தை அழகாக பிரதிபலிக்கிறது!
//நீ பேசுவன எனக்கும்
ReplyDeleteநான் பேசுவன உனக்கும்
புரியாமலே போவ தெப்படி?//
முதலில் ஒரு பின்னூட்டம் போட்டு நீக்கி விட்டேன். நீங்கள் சொல்வது ஒன்றாகவும், நான் அர்த்தப்படுத்திக் கொண்டது வேறாகவும் போயின் கவிதை மாதிரியே கதையாகிவிடும் என்கிற நினைப்பு தான்.
அவரவர் கொள்ளும் கருத்து தான்
அவரவரிடமிருந்து வெளிப்படுகிறது.
ஒரு செயலின் விளைவாகவும் வினையாகவும் அந்த செயலுக்கே எதிரும் புதிருமாகக் கொள்ளும் எண்ணங்களாய் வெளிப்படும் கருத்துக்கள். இதனாலேயே ஒருவருக்கொருவர் புரிதலற்றுப் போகிறது. ஒரே மொழியாயினும் இந்த சாத்தியப்பாடு உண்டெனில், மொழி என்ன செய்யும், பாவம்?..
இதைத் தானே நீங்களும் சொல்ல வந்தீர்கள்?..
//இதுதான் 'பேசும் படம்'!
ReplyDeleteகவிதையின் கருத்தை அழகாக பிரதிபலிக்கிறது!//
நன்றி லலிதாம்மா :)
//முதலில் ஒரு பின்னூட்டம் போட்டு நீக்கி விட்டேன். நீங்கள் சொல்வது ஒன்றாகவும், நான் அர்த்தப்படுத்திக் கொண்டது வேறாகவும் போயின் கவிதை மாதிரியே கதையாகிவிடும் என்கிற நினைப்பு தான்.//
ReplyDelete:)))
//ஒரு செயலின் விளைவாகவும் வினையாகவும் அந்த செயலுக்கே எதிரும் புதிருமாகக் கொள்ளும் எண்ணங்களாய் வெளிப்படும் கருத்துக்கள். இதனாலேயே ஒருவருக்கொருவர் புரிதலற்றுப் போகிறது.//
உண்மைதான் ஜீவி ஐயா. பல சமயங்களில் ஒரு விஷயத்தை ஒருவரின் கோணத்திலிருந்து மற்றவரால் பார்க்க முடிவதில்லை. வேறு எந்தத் திசையிலும் பார்க்க இயலாத கடிவாளம் இட்ட குதிரை போல். அதனால் ஏற்படும் வினைதான் இது. உங்கள் புரிதல் சரியே.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி உங்களுக்கு :)