செல்லக் குட்டிக் கண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
கண்ணன் - என் குழந்தை
சின்னக் கண்ணா வாடா, என்றன்
செல்லக் கண்ணா வாடா!
அன்னை மனம் மகிழ, நீயோர்
அன்பு முத்தம் தாடா!
பட்டுப் பிஞ்சுப் பாதம், பதித்து
தத்தித் தவழ்ந்து வாடா!
கட்டி முத்தம் ஒன்று, அம்மா
கன்னத் திலே தாடா!
சின்னச் சிட்டுப் போலே, கிள்ளைமொழி
பேசிக் கொண்டு வாடா!
சின்னச் செப்பு வாயில், தேனொழுக
செல்ல முத்தம் தாடா!
வண்ண மயிற் பீலி, அசைய
அன்னம் போல வாடா!
வெண்ணெய் உண்ட வாயால், எனக்கோர்
வெல்ல முத்தம் தாடா!
மண்ணி லோர் மாமணியாய், வந்த
மன்ன வனே வாடா!
மண்ணை யுண்ட வாயால், எனக்கோர்
முத்து முத்தம் தாடா!
கண் ணிரண்டும் வண்டாய், சுழல
கண்ணின் மணி வாடா!
கன்னத்தில் கன்னம் வைத்து, எனக்கோர்
கன்னல் முத்தம் தாடா!
பூவைப்பூ வண்ணக் கண்ணா, பூப்போல்
மெல்ல மெல்ல வாடா!
பாதாதி கேச மெங்கும், பட்டுப்போல்
முத்தம் தரேன் வாடா!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.punjabigraphics.com/pg/janmashtami/page/2/
நீல வண்ணக் கண்ணா வாடா
ReplyDeleteநீ எனக்கொரு முத்தம் தாடா
என்ற பழையப் பாட்டு நினைவுக்கு வருது
நல்லா இருக்கு கண்ணன் பாட்டு.
நன்றி
Beautiful!!
ReplyDeleteHappy Krishna Jayanthi (we celebrate it tomorrow).
Kannan unga veetukku vandhaana??
Nalla virundhu sappadu sapptaana?
Kannathil mutham thandhaana??? :))
PAADHAADHIKESAMENGUM PATTUPPOL
ReplyDeleteMUTHTHAM THAREN VAADAA!VAAADAAA!!
//நல்லா இருக்கு கண்ணன் பாட்டு.
ReplyDeleteநன்றி//
ரொம்ப நாள் கழிச்சு உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, கபீரன்பன் ஜி :) ரசித்தமைக்கு நன்றி.
//Beautiful!!
ReplyDeleteHappy Krishna Jayanthi (we celebrate it tomorrow).
Kannan unga veetukku vandhaana??
Nalla virundhu sappadu sapptaana?
Kannathil mutham thandhaana??? :))//
வந்தான், சாப்பிட்டான், தந்தான், நெறய்ய்ய்ய :)
உங்களிடமும் வந்திருப்பான், எல்லாம் தந்திருப்பான் இந்நேரம்னு நினைக்கிறேன் :)
வருகைக்கு நன்றி, கள்வனின் காதலி!
//PAADHAADHIKESAMENGUM PATTUPPOL
ReplyDeleteMUTHTHAM THAREN VAADAA!VAAADAAA!!//
வாங்க லலிதாம்மா :)
பெரியாழ்வாருக்கு அடுத்து இன்னொரு யசோதை நீங்கள் தானா அக்கா?
ReplyDelete//பெரியாழ்வாருக்கு அடுத்து இன்னொரு யசோதை நீங்கள் தானா அக்கா?//
ReplyDeleteஆஹா, எவ்ளோ பெரிய வார்த்தை சொல்லீட்டீங்க. யசோதை எங்கே, பெரியாழ்வார் எங்கே, இந்த வெகு சாதாரணத்திற்கும் கீழான சின்னப் பெண் எங்கே! இருந்தாலும் இப்படி ஒரு சொல் கேட்கவுமே கூட தவம் செய்திருக்கணும்னு நினைக்கிறேன். அந்த சொல்லைச் சொன்ன தம்பி குமரனுக்கு மனமார்ந்த நன்றிகள்.
எண்ணத்தைக் கொள்ளை கொண்ட
ReplyDeleteகண்ணனின் முத்தத்தைப் பெற்றுக் கொள்ள வந்து விட்டேன். :)))))
அழகான பாடல்
வரிகள் நன்று
வாழ்த்துகள்
//எண்ணத்தைக் கொள்ளை கொண்ட
ReplyDeleteகண்ணனின் முத்தத்தைப் பெற்றுக் கொள்ள வந்து விட்டேன். :)))))//
நல்ல வேலை செய்தீர்கள்! நன்றி திகழ் :)