Thursday, October 14, 2010

ஆய கலைகளின் அரசி!

நவராத்திரி சிறப்புப் பதிவு.


ஆய கலைகளின் அரசியளாம் – அவள்
வேத முதல் வியளாம்
மாயஇருள் விலக்கி தூயஒளி நல்கும்
ஞான வடி வினளாம்

வெள்ளைக் கலை உடுத்தி
வீணை மடி இருத்தி
மின்னல் கொடியெனவே வீற்றிருப்பாள்
கன்னல் தமிழில் தொழ களித்திருப்பாள்

தென்றலைப் போல் நடைஎழிலாள்
தேறல்இசைக் கனி மொழியாள்
தேவியுன்றன் திருப்பதங்கள் சரணம்அம்மா
தெண்டனிட்டோம் உன்பதங்கள், வரணும்அம்மா!


--கவிநயா

4 comments:

  1. வெள்ளைத்தாமரைப் பூவிலிருப்பாளை நன்கு வணங்கினீர்கள் அக்கா.

    ReplyDelete
  2. வாங்க குமரன். நன்றி.

    ReplyDelete
  3. அருமையான படம் மற்றும் கவிதை. :-)

    ReplyDelete
  4. வாங்க ராதா. இந்தப் பக்கம் உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி :) ரசித்தமைக்கு நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)