Thursday, October 7, 2010

நீலநிறக் காளியம்மா!

நவராத்திரி சிறப்புப் பதிவு. அன்னையின் திருவடிகள் சரணம்.


நீலநிறக் காளியம்மா!
சூலங்கொண்டு வாடியம்மா!
தண்ணருளைப் பொழிகின்ற தாயே!
தரணியினைக் காத்திடவே வாயேன்!

கங்கெனவே இருகண்கள்
கயவர்களைக் கலக்கிவிடும்!
தொங்குகின்ற தீநாவோ
தீயவரைத் துரத்திவிடும்!
பதினெட்டுக் கரங்களுடன் தாயே!
பிள்ளைகளை அரவணைக்க வாயேன்!

கோரைப்பல் உடன்வந்து
கொடுவினைகள் களைந்துவிடும்!
விரிந்திருக்கும் கருங்கூந்தல்
வல்வினையை விரட்டிவிடும்!
பயங்கரியாய் உருக்கொண்ட தாயே!
பால்வெள்ளை உள்ளத்தில் வாயேன்!

தத்தகிட என்றாடி
தானவரை அழித்திடுவாய்!
தீம்தகிட என்றாடி
தீமைகளைப் பொசுக்கிடுவாய்!
திக்கெட்டும் சுழன்றாடும் தாயே!
தூவெள்ளை உள்ளத்தில் வாயேன்!


--கவிநயா

6 comments:

  1. நல்லாயிருக்கு. படத்தை பாத்தா கொஞ்சாம் பயம்தான். :-))

    ReplyDelete
  2. வாங்க திவாஜி!

    ஆமாம், ஆனா ஏனோ எனக்கு இந்த படம் பிடிச்சு போச்சு :)

    வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி திவாஜி.

    ReplyDelete
  3. :) சாமியப்பர்த்தாலே பயமா கெடக்கு’

    கவிதை படத்துக்கு பொருத்தமா நல்லா இருக்குங்க!

    ReplyDelete
  4. //கவிதை படத்துக்கு பொருத்தமா நல்லா இருக்குங்க!//

    மாத்திச் சொல்லீட்டீங்க! கவிதை எழுதிட்டுதான் படம் தேடினேன்! :)

    //:) சாமியப்பர்த்தாலே பயமா கெடக்கு’//

    அதான் யாரையும் இந்தப் பக்கம் காணும் போல :) தைரியமா வந்ததுக்கு மிக்க நன்றி வசந்த் :)

    ReplyDelete
  5. //அதான் யாரையும் இந்தப் பக்கம் காணும் போல :) //

    காக்கும் கடவுளைக் காண பயமென்ன நமக்கு:)?

    அருமையான பாடல் கவிநயா!

    ReplyDelete
  6. //காக்கும் கடவுளைக் காண பயமென்ன நமக்கு:)?//

    அதானே! :)

    வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)