வணக்கம். நல்லாருக்கீங்களா? ரொம்ப நாள் ஓய்வு குடுத்தாச்சில்ல! அதான் நீங்க என்னை மறந்து போறதுக்குள்ளே கொஞ்சமா தலையை காண்பிச்சுட்டு போலாம்னு... :)
தென்கச்சின்னா என்ன நினைவு வரும் உங்களுக்கு? கரெக்ட்! சமீபத்தில் அவருடைய 'தென்கச்சி பதில்கள்' அப்படிங்கிற புத்தகத்தை படிக்கிற வாய்ப்பு கிட்டியது. அதிலிருந்து சில கேள்வி பதில்கள் இங்கே...
'பல் போனால் சொல் போச்சு' என்கிறார்களே ஏன்?
பல் போகாமல் இருக்கும்போது கூடச் சொல் போய் விடுகிறதே... அது தெரியுமா உங்களுக்கு! வெற்றிலை பாக்குப் போடுக்கிறவர்களைத்தான் சொல்லுகிறேன். தாம்பூலம் போட்டுக் கொண்டிருக்கும் ஒருவரைக் கூப்பிட்டு 'ஸ்டாம்பு' வாங்கி வரச் சொல்லிப் பாருங்கள்... அவர் 'ஷாம்பு' தான் வாங்கி வருவார்!
அறிவாளி எப்போது முட்டாள் ஆகிறான்? முட்டாள் எப்போது அறிவாளி ஆகிறான்?
அறிவாளி தன்னை அறிவாளி என்று நினைக்கிற போதெல்லாம் முட்டாள் ஆகிறான்! முட்டாள் தன்னை முட்டாள் என்று உணர்கிற போதெல்லாம் அறிவாளி ஆகிறான்!
மதுவும் - மாதுவும் ஒன்றுதானே?
ஏதோ ஒன்றில் மயங்கியிருக்கிறீர்கள்... அதனால்தான் உங்களுக்கு இரண்டும் ஒன்றாகத் தெரிகிறது. எனக்கு அப்படி இல்லை... எனக்கு எல்லாமே இரண்டு இரண்டாகத் தெரிகிறது!
தென்கச்சி எந்த மாவட்டத்தில் இருக்கிறது? அந்த ஊரின் சிறப்பு அம்சம் என்ன?
உங்கள் ஊர் (கேள்வி கேட்டவர் ஸ்ரீரங்கம்) எந்த மாவட்டத்தில் இருக்கிறதோ அதே மாவட்டத்தில்தான் இருக்கிறது. அப்படியிருந்தும் கூட அது இன்னும் உங்களுக்கு எட்டாமல் இருக்கிறதே அதுதான் அதன் சிறப்பு அம்சம்!
விதி என்பது என்ன? விளக்கம் தருக.
ஒருத்தன் ஒரு அம்மையாரை பார்த்து, "தாயே" என்றான்.
உடனே அந்த அம்மையார் இவனைப் பளாரென்று அறைந்து விட்டார்கள்! என்ன காரணம்?
இவன் 'தாயே' என்று அழைத்தது அந்த அம்மையார் காதில் 'நாயே' என்று விழுந்து விட்டது!
இதற்கு என்ன விளக்கம்? விதி! அவ்வளவுதான்!
மறுக்க முடியாதது எது? மறைக்க முடியாதது எது? மறக்க முடியாதது எது?
தயாராக இருங்கள்... உங்களை கொஞ்சம் குழப்பப் போகிறேன்...
மறக்க முடியாததை மறுக்க முடியாது! மறுக்க முடியாததை மறைக்க முடியாது! மறைக்க முடியாததை மறக்க முடியாது!
ஒரு மனிதனை அடையாளப் படுத்துவது எது?
உண்ணவும் உறங்கவும் பிறந்தவை விலங்குகள்; எண்ணவும் இரங்கவும் பிறந்தவன் மனிதன் என்பது வாரியார் வாக்கு. இதை அளவுகோலாக வைத்து அடையாளம் கண்டு கொள்ளுங்கள்!
***
இப்போதைக்கு அம்புட்டுதான்! பிடிச்சிருந்தா சொல்லுங்க, இன்னும் கொஞ்சம் தட்டச்சி தாரேன்!
இந்த கேள்விகளுக்கு நீங்க என்ன பதில் சொல்லியிருப்பீங்க என்பதையும் தெரிஞ்சுக்க ஆவல்!
அன்புடன்
கவிநயா
நல்வரவு.
ReplyDeleteஒருவாறாக ‘நலம்தானே?’ என உங்கள் இனிய குரல் கேட்டுடுச்சு:)! நைஸ்.
//இப்போதைக்கு அம்புட்டுதான்! பிடிச்சிருந்தா சொல்லுங்க, இன்னும் கொஞ்சம் தட்டச்சி தாரேன்!//
இப்போதைக்கு இது போதும். சில பதில்கள் சிரிக்கவும், சில சிந்திக்கவும் மொத்தத்தில் ரசிக்கவும் வைத்தன. நேரம் கிடைக்கையில் தொடருங்கள்.
//வணக்கம். நல்லாருக்கீங்களா? ரொம்ப நாள் ஓய்வு குடுத்தாச்சில்ல! அதான் நீங்க என்னை மறந்து போறதுக்குள்ளே கொஞ்சமா தலையை காண்பிச்சுட்டு போலாம்னு... :)//
ReplyDeleteவாங்க கவிநயா... இப்போவாவது வர்றதுக்கு வழி தெரிஞ்சதே... அதுவரைக்கும் சந்தோஷம்... "மூன்" போனவிய்ங்க எல்லாம் ரிடன் ஆகி மூணு மாசம் ஆச்சே.. நீங்க எங்கன்னு தேடிகிட்டு இருந்தேன்...
//தாம்பூலம் போட்டுக் கொண்டிருக்கும் ஒருவரைக் கூப்பிட்டு 'ஸ்டாம்பு' வாங்கி வரச் சொல்லிப் பாருங்கள்... அவர் 'ஷாம்பு' தான் வாங்கி வருவார்!//
சூப்பர்... தென்கச்சி தென்கச்சி தான்... நான் என்னிக்குமே அவர் கட்சிதான்...
//மறக்க முடியாததை மறுக்க முடியாது! மறுக்க முடியாததை மறைக்க முடியாது! மறைக்க முடியாததை மறக்க முடியாது!//
ஃபெண்டாஸ்டிக் ஆன்சர்.... யச்சச்ச கச்சச்ச.... கச்சச்ச யச்சச்ச... நாங்களும் சொல்வோம்ல...
//ஒரு மனிதனை அடையாளப் படுத்துவது எது?
உண்ணவும் உறங்கவும் பிறந்தவை விலங்குகள்; எண்ணவும் இரங்கவும் பிறந்தவன் மனிதன் என்பது வாரியார் வாக்கு.//
ரொம்ப நல்ல கருத்து... ஆழமாக சிந்திக்க வைக்கின்ற கருத்து...
//இப்போதைக்கு அம்புட்டுதான்! பிடிச்சிருந்தா சொல்லுங்க, இன்னும் கொஞ்சம் தட்டச்சி தாரேன்!//
இம்புட்டுதானா?? இன்னும் கொஞ்சம் தர்றது... தட்டச்சுங்கோ... தொடங்கிடுங்கோ...
//இந்த கேள்விகளுக்கு நீங்க என்ன பதில் சொல்லியிருப்பீங்க என்பதையும் தெரிஞ்சுக்க ஆவல்!//
எனக்கும் இதே ஆவல்தான்... இந்த கேள்விகளையும், அதற்கான உங்கள் பதில்களையும் ஒரு பதிவாக போடுங்கள்... அங்கே நாங்கள் வந்து எங்கள் பதில்களை சொல்கிறோம்... சரியா........
நலம் ;-)
ReplyDeleteநீங்கள நலமா அக்கா!?
கேள்வி பதில் நல்லாயிருக்கு இன்னும் போடுங்கள்..;)
தங்கள் நலமா
ReplyDeleteஅத்தனையும் அருமை
பிடிக்காமல் இருக்குமா
நீங்களே சொல்லுங்கள்
பகிர்வுக்கு நன்றிங்க
வாருங்க்கள்! வந்து வழக்கம் போல் விதம் விதமான பதிவுகளைத் தாருங்கள்!
ReplyDeleteஇது தென்கச்சியாருக்கு சிரத்தாஞ்சலி இடுகை என்று நினைத்தேன். அதைப்பற்றி ஒன்றும் காணோமே.
ReplyDeleteஅவர் ஆன்மா சாந்தியடையட்டும்.
வாங்க அக்கா.
ReplyDeleteவாங்க ராமலக்ஷ்மி. வரவேற்புக்கு நன்றி :) கேள்வி பதில்களை ரசித்தமைக்கும் :)
ReplyDeleteவாங்க கோபி.
ReplyDelete//"மூன்" போனவிய்ங்க எல்லாம் ரிடன் ஆகி மூணு மாசம் ஆச்சே.. நீங்க எங்கன்னு தேடிகிட்டு இருந்தேன்...//
அட, என்னை தேடவும் ஆள் இருக்குன்னு சந்தோஷமா இருக்கு :)
//இம்புட்டுதானா?? இன்னும் கொஞ்சம் தர்றது... தட்டச்சுங்கோ... தொடங்கிடுங்கோ...//
இப்போதைக்கு புத்தகம் வேற கைக்கு போயிருக்கு. வந்ததும் தொடங்கிடறேன்!
//எனக்கும் இதே ஆவல்தான்... இந்த கேள்விகளையும், அதற்கான உங்கள் பதில்களையும் ஒரு பதிவாக போடுங்கள்... அங்கே நாங்கள் வந்து எங்கள் பதில்களை சொல்கிறோம்... சரியா........//
இது நல்லாருக்கே! நான் உங்களுக்கு வீட்டுப் பாடம் குடுத்தா, நீங்க எனக்கே குடுக்கறீங்க? :) பாவம் நானு...
வருகைக்கும், ரசனை பின்னூட்டுக்கும் மிக்க நன்றி கோபி :)
வாங்க கோபி(நாத்)!
ReplyDelete//நலம் ;-)//
சந்தோஷம் தம்பீ :)
//நீங்கள நலமா அக்கா!?//
கொஞ்சம் பக்கத்தில் இருக்கேன் :)
//கேள்வி பதில் நல்லாயிருக்கு இன்னும் போடுங்கள்..;)//
புத்தகம் மறுபடி கைக்கு வந்ததும் போடறேன்!
வருகைக்கு மிக்க நன்றி கோபி!
வாங்க திகழ்!
ReplyDelete//தங்கள் நலமா
அத்தனையும் அருமை
பிடிக்காமல் இருக்குமா
நீங்களே சொல்லுங்கள்
பகிர்வுக்கு நன்றிங்க//
பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சதில் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் திகழ்!
//வாருங்க்கள்! வந்து வழக்கம் போல் விதம் விதமான பதிவுகளைத் தாருங்கள்!//
ReplyDeleteவாருங்கள் ஜீவி ஐயா! அன்பான வரவேற்புக்கு மிக்க நன்றி!
//இது தென்கச்சியாருக்கு சிரத்தாஞ்சலி இடுகை என்று நினைத்தேன். அதைப்பற்றி ஒன்றும் காணோமே.
ReplyDeleteஅவர் ஆன்மா சாந்தியடையட்டும்.//
வாருங்கள் கபீரன்பன் ஐயா. ஆம், அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.
கொஞ்ச நாளாகி விட்டதால் குறிப்பா சொல்லலை. புத்தகமும் தற்செயலாதான் கிடைச்சது.
வருகைக்கு நன்றி.
//வாங்க அக்கா.//
ReplyDeleteநன்றி குமரா! :)
வருக, வருக, கவிதை படைக்க
ReplyDelete//வருக, வருக, கவிதை படைக்க//
ReplyDeleteமிக்க நன்றி கைலாஷி!