மத்தாப்பூ போலே மனங்கள் சிரிக்கட்டும்!
புத்தாடை அழகாய் பொலிந்து துலங்கட்டும்!
பட்சணங்கள் போலே வாழ்க்கை சுவைக்கட்டும்!
இக்கணமே எங்கும் இன்பம் நிறையட்டும்!
இந்த பதிவில் என்ன சிறப்புன்னு கேட்கறீங்களா? ஹும்... நான் சதங்காவுடைய தொடர் பதிவு வலையில் மாட்டிக்கிட்டதுதான் சிறப்பு! நான் கூட அவரை ஒரு முறை ஏதோ ஒரு தொடருக்கு அழைச்சதா நினைவு. அவர் அதுக்கு பதிவிட்டாரா இல்லையான்னே எனக்கு நினைவில்லை! உங்களுக்கு நினைவிருக்கா? :)
இது சிறப்பு பதிவு மட்டுமில்லாம ஒரு அவசரப் பதிவும் கூடத்தான். என்ன அவசரம்னு கடைசில சொல்றேன்!
இப்ப, கேள்விகள்:
1. உங்களைப் பற்றி சிறு குறிப்பு ?
அச்சோ! 'கேள்விக்கென்ன பதில்?' படிச்சா என்னை பற்றிய பெரீய்ய குறிப்பே கிடைக்கும்ங்க! :)
2. தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம் ?
ஹ்ம்.. அப்படில்லாம் ஒண்ணும் நினைவுக்கு வரலை! ஸாரி...
3. 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?
ரிச்மண்டை விட்டா நமக்கு போக்கிடம் இல்லீங்க :)
4. தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி பற்றி ஒருசில வரிகள் ?
ரெண்டு மூணு வருடங்களுக்கு முன்பு வரை நண்பர் குடும்பங்களுடன் சேர்ந்து பட்டாசு, பலகாரங்களுடன் கொண்டாடிக் கொண்டிருந்தோம். இப்ப எல்லாரும் ரொம்பவே பிசி ஆயாச்சு. தொலைபேசில தீபாவளி வாழ்த்து சொல்றதோட சரி. வீட்டில் பூஜை, சாப்பாட்டில் தினமும் சமைக்கிறதை விட கூட ரெண்டு சிறப்பு ஐட்டம் இருக்கும்.
5. புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா ?
போன முறை ஊர்ல இருந்து வாங்கி கொண்டு வந்த புடவையெல்லாமே இன்னும் ரிலீஸ் பண்ணாம இருக்கு!
6. உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள் ? அல்லது வாங்கினீர்கள் ?
எல்லாமே நாளைக்குதான்! என்னன்னு இனிமேதான் யோசிக்கணும் :)
7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
மின்னஞ்சல், தொலைபேசி.
8. தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா ? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா ?
அது அந்தந்த நாளை பொறுத்தது. போன வருஷம் அலுவலகம் போயாச்சு. இந்த முறை சனிக்கிழமை பூரா நடன வகுப்புகள் இருக்கு.
9. இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒருசில வரிகள் ? தொண்டு நிறுவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம் ?
நிறுவனங்களுக்குன்னு இல்லை; உறவினர்கள் மூலம் யாருக்காவது உதவி வேணும்னு தெரிஞ்சா செய்யறதுதான்.
10. நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள் ?
யாருமே மாட்ட மாட்டேங்கிறாங்களே. கூப்பிடறவங்கள்ல பாதி பேர் பதிவிடறதும் இல்லை. இப்போதைக்கு
ஆர்.கோபிக்கும், தோழி ஜெஸ்வந்திக்கும் வலை விரிக்கிறேன்! :)
இப்போ இந்த தொடருக்கான விதிமுறைகள்:
1. கேள்விகளுக்கு உங்கள் வலைத்தளத்தில் புதிய பதிவில் பதிலளியுங்கள்.
2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.
3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.
4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.
5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.
அன்புடன்
கவிநயா
பி.கு: அவசரத்தின் காரணம் - அடுத்த வாரம் தொடங்கி ஒரு சில நாட்கள் வலையுலகம் பக்கம் வருவது சிரமம். அதனால குறைஞ்சது ரெண்டு வாரங்களுக்கு பதிவுகள் இருக்காது. (பொழச்சு போங்க! :) கோபி(நாத்), உங்க அழைப்பு நினைவிருக்கு. திரும்பி வந்த பிறகு எழுதறேன்! இது தீபாவளி தொடர் என்பதால் அவசரமா இட்டாச்!
படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/srivera/2799747313/sizes/m/
தீபாவளி வாழ்த்துக்கள் கவிநயா.என்னைப் பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி தோழி. நான் இந்தத் திருநாளைக் கொண்டாடுவது கிடையாது.
ReplyDeleteஆனாலும் அழைப்பை ஏற்று பதிவிடுகிறேன்.
தீபாவளி வாழ்த்துக்கள் ;)
ReplyDeleteபட்டாசு மாதிரி வெடிச்சிட்டிங்க பதிலில் ;))
பொங்கும் மங்களம் !
ReplyDeleteஎங்கும் தங்கட்டும்!!
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!!
தீபாவளி வாழ்த்துக்கள் கவி!
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் அழைப்பை ஏற்று சுடச் சுடப் பதிவினை இட்டதற்கு மனமார்ந்த நன்றிகள். பொறுமையா வந்து விரிவா பின்னூட்டுகிறேன்.
ReplyDelete//நான் இந்தத் திருநாளைக் கொண்டாடுவது கிடையாது.
ReplyDeleteஆனாலும் அழைப்பை ஏற்று பதிவிடுகிறேன்.//
அச்சோ, ரொம்ப ச்வீட் ஜெஸ்வந்தி. உங்களை சங்கடப்படுத்த விரும்பலை. அப்படி சங்கடம் ஏதும் இல்லைன்னா மட்டுமே பதிவிடுங்கள். (வேற தொடருக்கு மாட்டி விட்டா போச்சு! :) அன்புக்கு மிக்க நன்றி!
//தீபாவளி வாழ்த்துக்கள் ;)//
ReplyDeleteஉங்களுக்கும் கோபி!
//பட்டாசு மாதிரி வெடிச்சிட்டிங்க பதிலில் ;))//
அப்படியா? சூப்பர் வேகத்தில் எழுதினதால அந்த tone வந்திருச்சு போல...
வருகைக்கு நன்றி கோபி :)
// Anonymous said...
ReplyDeleteபொங்கும் மங்களம் !
எங்கும் தங்கட்டும்!!
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!!//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி! உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்!
//தீபாவளி வாழ்த்துக்கள் கவி!//
ReplyDeleteவாங்க திவா. ரொம்ப நாளா ஆளை காணுமே. உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்!
//இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் அழைப்பை ஏற்று சுடச் சுடப் பதிவினை இட்டதற்கு மனமார்ந்த நன்றிகள். பொறுமையா வந்து விரிவா பின்னூட்டுகிறேன்.//
ReplyDeleteஎன்னை பதிவிட சொல்லிட்டு நீங்க பலகாரம் பண்ண (அல்லது சாப்பிட?) போயிட்டீங்க போல! இது உங்களுக்கே நியாயமா இருக்கா சதங்கா? :)))
கவி...
ReplyDeleteஅழைப்புக்கு நன்றி...
தங்களுக்கும், குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், உற்றார் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....
என் தீபாவளி பதிவிற்கு வருகை தந்து பரிசு பெற்று சென்றமைக்கு நன்றி...
தொடர் எழுத அழைத்தமைக்கு நன்றி...
விரைவில் தொடரப்படும்...
நன்றி கவிநயா ....
என்குறிப்பு : ஜெஸ்... நீங்க தீபாவளி கொண்டாடாமல் இருப்பதற்கு ஏதேனும் விசேஷ காரணம் இருக்கா?? சும்மா ஒரு க்யூரியாஸிட்டில கேட்டுட்டேன்... சொல்லலாம்னா சொல்லலாம்... தப்பா இருந்தா கோபித்துக்கொள்ள வேண்டாம்... நன்றி....
வாங்க கோபி! அழைப்பை ஏற்றுக் கொண்டதற்கு மிக்க நன்றி :) உங்க பரிசில்தான் தீபாவளி கொண்டாடறோம் இந்த வருஷம் :) மீண்டும் இனிய வாழ்த்துகள் உங்களுக்கு.
ReplyDeleteகவிநயா, அவர் நண்பர் குழாமினர், குடும்பத்தினர் அனைவருக்கும்,
ReplyDeleteமனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
மிக்க அன்புடன்,
ஜீவி
வாங்க ஜீவி ஐயா. அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் உங்களை சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய மனம் கனிந்த வாழ்த்துகளையும் தெரிவிச்சுக்கறேன்!
ReplyDelete// cyclopseven said...
ReplyDeletenice blog.//
மிக்க நன்றி!
//இந்த பதிவில் என்ன சிறப்புன்னு கேட்கறீங்களா? ஹும்... நான் சதங்காவுடைய தொடர் பதிவு வலையில் மாட்டிக்கிட்டதுதான் சிறப்பு! நான் கூட அவரை ஒரு முறை ஏதோ ஒரு தொடருக்கு அழைச்சதா நினைவு. அவர் அதுக்கு பதிவிட்டாரா இல்லையான்னே எனக்கு நினைவில்லை! உங்களுக்கு நினைவிருக்கா?//
ReplyDeleteநினைவில் இல்லாமல் இருக்குமா ? உங்கள் அழைப்பை ஏற்று பதிவும் போட்டாச்சே அப்பொழுதே. இதோ, இங்கே ...
நீங்கள் விடுப்பு எடுக்கும் நேரத்திலும், அழைப்பினை ஏற்று தொடர் பதிவு இட்டமைக்கும் மனமார்ந்த நன்றிகள் கவிநயா.
நாலாவது கேள்விக்கான பதிலில், இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடிய பண்டிகை நாட்கள் மீண்டும் தொடர வாழ்த்துக்கள்.
கேள்விகளுக்கு அழகாக பதில்கள் தந்து நண்பர்கள் இருவரை இழுத்து விட்டதற்கும் நன்றிகள்.
//நினைவில் இல்லாமல் இருக்குமா ? உங்கள் அழைப்பை ஏற்று பதிவும் போட்டாச்சே அப்பொழுதே. இதோ, இங்கே ...//
ReplyDeleteநினைவூட்டலுக்கு நன்றி சதங்கா :) பதிவிட்டமைக்கும் :)
//நண்பர்கள் இருவரை இழுத்து விட்டதற்கும் நன்றிகள்.//
ரெண்டு பேரும் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள் என்பதோடு, ஜெஸ்வந்தி அப்பவே பதிவும் இட்டு விட்டார். என்னை அழைத்த உங்களுக்கும், என் அழைப்பை ஏற்றுக் கொண்ட ஜெஸ்வந்தி மற்றும் கோபிக்கும் மீண்டும் நன்றிகள்.
அன்பின் கவிநயா
ReplyDeleteஅருமையான பதில்கள் - இடுகை ரசித்தேன் - மகிழ்ந்தேன்
நல்வாழ்த்துகள் கவிநயா
//அருமையான பதில்கள் - இடுகை ரசித்தேன் - மகிழ்ந்தேன்//
ReplyDeleteமிக்க நன்றி சீனா ஐயா :)