Thursday, June 18, 2009

கேள்விக்கென்ன பதில்?

என்னையும் பொருட்டாக மதித்து அன்புடன் ஆட்டத்தில் சேர்த்துக்கிட்ட குமரனுக்கும், கபீரன்பன் அவர்களுக்கும் நன்றி!


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

தானா வரலைங்க. நானே வச்சுக்கிட்டேன்! ரொம்பவே பிடிக்கும் :) சில வருஷங்களுக்கு முன்னால், தொடர்ந்து எழுதலாம்கிற எண்ணம் ஏற்பட்ட போது புனை பெயர் வேணும்னு தோணிச்சு. அதற்காக எனக்கு பிடித்த கவிதையையும், அபிநயத்தையும் சேர்த்து நானே (முதன்முதலா) உருவாக்கினது. (காப்பிரைட் வாங்கியிருக்கணுமோ? :)

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

ஏற்கனவே உடல் நலம் குன்றிய அம்மாவுக்கு மேலும் சில பிரச்சனைகள் இருக்குன்னு கண்டுபிடிச்சிருப்பதை அறிந்த போது.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

இன்னும் கொஞ்சம் அழகா இருக்கலாம் என்கிற எண்ணம் ஏற்படுவதுண்டு. ஆனா எல்லாருக்கும் புரியறாப்லதான் இருக்கும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

ரசஞ்சோறு, உருளைக்கிழங்கு கறி :) அம்மா வைக்கும் அவல் பாயசம் ரொம்பப் பிடிக்கும்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

புன்னகையும் அன்பும் எப்பவும் எல்லோருக்கும் உண்டு. ஆழ்ந்த நட்பிற்கு நாளாகும்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடலில் குளிச்சிருக்கேன். அருவில குளிச்சதே இல்ல :( அட, நெசமாதாங்க! பம்பு செட்டு குளியல் ரொம்ப பிடிக்கும். அதான் இதுவரை எனக்கு கிடைச்ச அருவி!

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகமும் கண்ணும்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சது - பெரிசா எந்தவிதமான ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இருக்கறது.
பிடிக்காதது - சின்ன விஷயத்துக்கும் துவண்டு போயிடறது.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

சாய்ஸ்ல விட்டாச்!

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என் பெற்றோர் பக்கத்தில்.

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

பழுப்பு வண்ண சூரிதார்.

12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

கடிகாரச் சத்தம் கேட்டுக்கிட்டு பதி(ல்)வு எழுதிக்கிட்டிருக்கேன்.

13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம்.

14. பிடித்த மணம்?

காட்டுமல்லி வாசம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

சுப்பு தாத்தா - இவருக்கு தெரியாத விஷயமே இல்லை. ஆனால் என்னை மாதிரி ஒண்ணும் தெரியாதவங்ககிட்டயும் அன்பா இருப்பார். நான் எழுதற எல்லா கவிதைகளுக்கும் தவறாமல் இசை அமைச்சிடுவார்!

சதங்கா - யூத் விகடனை சிறுகதை எழுத குத்தகைக்கு எடுத்திருக்கார். கவிதை எழுதுவார், படம் வரைவார், சமையல் பண்ணுவார்... வேறென்னங்க பண்ணுவீங்க? எங்க ஊர்ல இருந்துகிட்டே முகம் காட்டாம பேர் சொல்லாம ரொம்ப நாள் ஏச்சுக்கிட்டிருந்தார். யூத் விகடன் வந்ததும் இவர் முகமுடி கிழிஞ்சதில் (என் யூகம் சரியானதில்) எனக்கு ரொம்ப குஷி! :)

திகழ்மிளிர் - இவரோட அழகான பெயரும் தமிழில் இவருக்குள்ள ஆர்வமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதோடு தவறாமல் இங்கே பின்னூட்டறதையும் சேர்த்துக்கலாம் :)

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

கபீரன்பன் அவர்கள் - இவருடைய கபீரின் கனிமொழிகள் வலைப்பூ மிகவும் பிடித்தது. இவருடைய பிற வலைப்பூக்களுக்கும் அவ்வப்போது போவேன். அருமையாக படங்களும் வரைவார் என்பது தெரியும்.

குமரன் - வலை உலகிற்கு வந்த போது இவர் பதிவுகளைத்தான் முதன் முதலில் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன். இவருடைய அபிராமி அந்தாதி வலைப்பூவும், கோதைத் தமிழும், மிக மிக பிடித்தது.

17. பிடித்த விளையாட்டு?

கேரம், ஷட்டில், விளையாட. பார்க்க கூடைப்பந்து, டென்னிஸ்.

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம். கணினிக்கும், படிக்கவும்.

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் மாதிரியான சில அந்தக் கால படங்கள் பிடிக்கும். இப்பல்லாம் திரைப்படம் பார்க்க அவ்ளோ பிடிக்கிறதில்லை.

20. கடைசியாகப் பார்த்த படம்?

தசாவதாரம்னு நினைக்கிறேன்.

21. பிடித்த பருவ காலம் எது?

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொண்ணு பிடிக்கும். பனிக்காலத்திலும் பனிப்பூ பிடிக்கும்; குளிர் மட்டும் பிடிக்கவே பிடிக்காது.

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

ஸ்ரீ சாரதாதேவி பற்றின "அம்மா" என்ற புத்தகம். திரு.ரா.கணபதி எழுதியது.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

மாத்தறதில்லை.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது - குழந்தையின் கலகல சிரிப்பு சத்தம், கொலுசு சத்தம், பறவைகள் சத்தம்.
பிடிக்காதது - மும்முரமா எழுதும் போதோ வேலை செய்யும் போதோ தொந்தரவு செய்யற எந்த சத்தமும்.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

இப்போ இருக்கிறதுதான்.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தெரியல. என்னை தெரிஞ்சவங்கதான் சொல்லணும்.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

அப்படி எதுவும் சட்டுன்னு தோணலை. (எனக்கு சகிப்புத் தன்மை கொஞ்சம் அதிகம் :)

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

தாழ்வு மனப்பான்மை. அதனால பல சமயங்களில் நினைச்சதை பளிச்சுன்னு சொல்ல ஏற்படும் தயக்கம்.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கடலும் அருவியும் ஆறும் ஏரியும் இருக்கிற இடங்கள்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

குழந்தை மனசுடன், பகைவனுக்கும் அருளும் அன்புடன்.

31. கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

பதிவுகள் எழுதுவதும் படிப்பதும். (நன்றி: குமரன் :)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ். வாழ விடு.

36 comments:

 1. உங்கள் பெயர்க் காரணத்தை ஒருமுறை சரியாக நானும் சொன்னேன், இல்லையா:)?

  //காப்பிரைட் வாங்கியிருக்கணுமோ? //

  நிச்சயமா, காப்பிரைட் வாங்கி வைத்துக் கொள்வது நல்லதுதான்:)!

  எல்லா பதில்களையும் ரசித்தேன். கடிகாரச் சத்தத்தைக் கேட்பீர்களா? நானும்:)!

  நீங்கள் அழைத்த மூவரும் தரவிருக்கும் பதில்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 2. இயல்பான பதில்கள்

  நீலம் - நாமும் தான்.

  வாழ் - வாழவிடு - அருமை.

  ReplyDelete
 3. எளிமையான அழகான பதில்கள் கவிநயா.

  ReplyDelete
 4. /32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

  வாழ். வாழ விடு./

  அருமை

  /12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

  கடிகாரச் சத்தம் கேட்டுக்கிட்டு பதி(ல்)வு எழுதிக்கிட்டிருக்கேன்./

  /1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

  தானா வரலைங்க. நானே வச்சுக்கிட்டேன்! ரொம்பவே பிடிக்கும் :) சில வருஷங்களுக்கு முன்னால், தொடர்ந்து எழுதலாம்கிற எண்ணம் ஏற்பட்ட போது புனை பெயர் வேணும்னு தோணிச்சு. அதற்காக எனக்கு பிடித்த கவிதையையும், அபிநயத்தையும் சேர்த்து நானே (முதன்முதலா) உருவாக்கினது. (காப்பிரைட் வாங்கியிருக்கணுமோ? :)
  /

  அத்தனையும் க‌விநய‌மான‌ ப‌தில்

  ஏற்கனவே அமுதா அழைப்பாணை அல்ல அல்ல அன்பாணை
  அனுப்பிள்ளார்கள், அத்துடன் உங்களிடமிருந்துமா ???????????!!!!!!!!!!!!!!!!!

  கண்டிப்பாக எழுதுகின்றேன்.
  நேரம் கிடைக்கும் பொழுது

  அன்புடன்
  திகழ்

  ReplyDelete
 5. //அதற்காக எனக்கு பிடித்த கவிதையையும், அபிநயத்தையும் சேர்த்து நானே (முதன்முதலா) உருவாக்கினது. (காப்பிரைட் வாங்கியிருக்கணுமோ? :) ///

  Ka.Vinaya thaan kavinaya aachoonnu ninaithen.:))

  Vinayamaana pathilgalukku athuvum poruththam enRe ninaikkiren

  vaazhga, vaLarga

  ReplyDelete
 6. //அதற்காக எனக்கு பிடித்த கவிதையையும், அபிநயத்தையும் சேர்த்து நானே (முதன்முதலா) உருவாக்கினது. (காப்பிரைட் வாங்கியிருக்கணுமோ? :)//

  நோ வே! அப்பறம் ஒவ்வொரு முறையும் நாங்க உங்கள கூப்பிடும் போதெல்லாம் ராயல்டி கட்டணுமே! அதுக்காக உங்கள கூப்பிடாமலும் இருக்க முடியாதே-க்கா!
  கவிநயா இஸ் ஃபார் ஆல் தம்பீஸ்! நோ காப்பிரைட்ஸ்! :)

  //பம்பு செட்டு குளியல் ரொம்ப பிடிக்கும்//

  அதுவும் 17kw பம்பு செட்டு, அருவி மாதிரியே தான் பீய்ச்சி அடிக்கும்-க்கா! தண்ணித் தொட்டிக்குள்ள குதி குதி-ன்னு குதிக்கலாம்! இதை நான் என் பதிவில் சொல்ல மறந்தேன்! நீங்க சொல்லிட்டீங்க! ஜூப்பரு! :)

  //9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

  சாய்ஸ்ல விட்டாச்!//

  ஹா ஹா ஹா! செல்லாது செல்லாது! இது 32 ஆட்டம்! நாட் 31! :)

  //14. பிடித்த மணம்?

  காட்டுமல்லி வாசம்//

  இங்கே வீட்டுல இருக்கா-க்கா?

  //கண்ணாடி அணிபவரா?

  ஆமாம். கணினிக்கும்//

  உங்களுக்குச் சரி! ஆனா கணிணி-க்கு கண்ணாடி போட்டு விடறதெல்லாம் ஓவரோ ஓவர்! :)

  ReplyDelete
 7. //(எனக்கு சகிப்புத் தன்மை கொஞ்சம் அதிகம் :)//

  கரெக்ட்டு! என்னையே அக்கா சகிச்சிக்கிட்டு இருக்காங்க-ன்னா பாத்துக்குங்க! :)

  //32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

  வாழ். வாழ விடு//

  இது ரெண்டு வரி! ஒரு வரி தான் சொல்லணும் என்பது கண்டிஷன்! :)

  //ஏற்கனவே உடல் நலம் குன்றிய அம்மாவுக்கு மேலும் சில பிரச்சனைகள் இருக்குன்னு கண்டுபிடிச்சிருப்பதை அறிந்த போது//

  உம்....கவலைப் படாதீங்கக்கா!
  என்றும் அன்னையைப் பாடும் உங்க கவிதார்ச்சனையாலேயே அம்பாள் பக்கத் துணை இருந்து காத்திடுவாள்!

  பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணும்!

  ReplyDelete
 8. மிக அழகாக பதில் சொல்லிட்டீங்க.
  பெயருக்கு காப்பி ரைட் வாங்கிடலாம் போல தான் தோணுது. :)

  தனிமையில் கடிகாரச் சத்தம் அருமை, நானும் கவனிப்பேன்.

  ReplyDelete
 9. அழகான பதில்கள் கவிநயா ! எல்லாப் பதில்களும் எனக்குப் பிடித்தது, ஆனால் தாழ்வு மனப்பான்மை ,நினைப்பதை நேருக்கு நேர் சொல்லத் தயங்குவது என்று சொன்னீர்களே,அது மட்டும் பிடிக்கல . கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்ளுங்க.
  நேருக்கு நேர் சொல்வதால் கேட்பவர்களுக்கும் சொல்பவர்களுக்கும் நன்மைதான். புரியாதவர்களைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.
  பார்த்தீர்களா ! இப்போ நான் இதை உங்களுக்கு நேரே சொல்ல வில்லையா ? நீங்கள் என்னுடன் கோபப் படப் போகிறீர்களா?

  ReplyDelete
 10. ஆகா...அக்கா நீங்களும் போட்டுட்டிங்களா!!

  ரசஞ்சோறு - ஒரே இனம் ;))

  ReplyDelete
 11. // சாய்ஸ்ல விட்டாச் //

  நீங்க ரொம்ப அதிருஷ்டம் பண்ணினவங்க. பாவம், அவரு கிட்டேயாவது என்னான்னு
  சொல்லிப்போடுங்க.. அவருக்கு ஃபோன் போட்டு அப்புறமா நான் விசாரிச்சுக்கரேன்.

  இங்கென் பாருங்க, எங்க வீட்டு அம்மா..என்கிட்டே என்ன பிடிக்காதுன்னு இப்பவே
  எல்லாத்துக்கு முன்னாடி சொல்லிப்போடு அப்படின்னு மிரட்டுது...

  அம்மா மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி எல்லாம் மொத்தமா
  வந்து என்னைக் காக்கவேணும்.

  அது சரி. நம்ம எது எல்லாம் நம்ம சாய்ஸ் அப்படின்னு நினைக்கிறோமோ அதெல்லாமே
  சான்ஸ் ஃபாக்டர்ஸ் தான். கரெக்டா சொல்லப்போனா, நம்ம சாய்ஸ்ன்னு ஒன்னுமே
  கிடையாது.

  இரண்டாவது சரி.
  நான் இத்தொடருக்கு கூப்பிடவேண்டும் அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு ஈ மெயில் ஐ.டி. கிடைக்கலையே.
  அப்படியே ப்ளாக் வழியா கூப்பிடலாமா அல்லது அவங்க பதிவுக்கு சென்று பின்னூட்டமா
  போடலாமா .. ஒரு சின்ன அட்வைஸ் ஃபீஸ் இல்லாம கொடுங்களேன்.

  என்னுடைய பதில்களை எனது பதிவு,
  http://arthamullavalaipathivugal.blogspot.com
  ல் இட்டிருக்கிறேன்.

  வருக.
  தொடருக்கு நான் அழைக்கும் நபர்கள்
  1. மேடம் துளசி கோபால்.அவர்கள்.
  2. அபி அப்பா அவர்கள்.
  3. திவா அவர்கள்.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 12. அதென்ன எல்லாருமே இதே வசனம் பேசுறீங்க? 'என்னையும் நினைவுல் வச்சு கூப்பிட்டதுக்கு நன்னி'ன்னு ஒரே பல்லவியிலேயே இராகவன் தொடங்கி கேட்டுக்கிட்டு வர்றேன். நீங்க தான் இந்தப் பல்லவி பாடற கடைசி ஆளா இருக்கும்ன்னு நம்பறேன். இன்னொருத்தர் சொன்னாருன்னா எரிச்சல் வரும்ன்னு நினைக்கிறேன். :-)

  அம்மாவின் உடல் நலம் பெற வேண்டுதல்கள் அக்கா.

  டக்கு டக்குன்னு எல்லா கேள்விக்கும் பதில் சொல்லியிருக்கீங்க. ரொம்ப நீட்டி முழக்கலை. :-)

  ReplyDelete
 13. வாங்க ராமலக்ஷ்மி.

  //உங்கள் பெயர்க் காரணத்தை ஒருமுறை சரியாக நானும் சொன்னேன், இல்லையா:)?//

  நீங்க புத்திசாலியாச்சே:)

  //கடிகாரச் சத்தத்தைக் கேட்பீர்களா? நானும்:)!//

  :)))

  வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 14. வாங்க ஜமால்.

  //நீலம் - நாமும் தான்.//

  அப்படியா? :)

  //இயல்பான பதில்கள்//

  மிக்க நன்றி ஜமால்.

  ReplyDelete
 15. வாங்க ஷையக்கா. எதிர்பார்க்கவே இல்லை...

  //எளிமையான அழகான பதில்கள் கவிநயா.//

  மிக்க நன்றி :)

  ReplyDelete
 16. வாங்க திகழ்மிளிர்.

  ரசனைக்கு மிக்க நன்றி.

  //கண்டிப்பாக எழுதுகின்றேன்.
  நேரம் கிடைக்கும் பொழுது//

  அவசியம் கூடிய விரைவில் எழுதுங்கள்!

  ReplyDelete
 17. நல்வரவு திரு.கபீரன்பன் அவர்களுக்கு. வாய்ப்புக்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி :)

  ReplyDelete
 18. வருக கண்ணா.

  //கவிநயா இஸ் ஃபார் ஆல் தம்பீஸ்!//

  :)))

  //இது 32 ஆட்டம்! நாட் 31! :)//

  100 வாங்கினா அலர்ஜி! 99 தான் அதிர்ஷ்டம். அதான் போகட்டும்னு :)

  //இங்கே வீட்டுல இருக்கா-க்கா?//

  வீட்ல இல்லை. ஆனா எங்க வீடு இருக்கும் பகுதில நடுநடுவில இன்னும் வீடு கட்டாத பகுதிகள்ல நிறைய மரங்களும் செடிகொடிகளுமா இருக்கும். அதுல காட்டுமல்லியும் வளர்ந்து கிடக்கு. குறிப்பா, வசந்த காலம் ஆரம்பிக்கும் போது பூத்துக் குலுங்கும். நாம அந்தப் பக்கம் போகும் முன்னேயே வாசம் நம்மை தூக்கிட்டு போயிடும்!

  //ஆனா கணிணி-க்கு கண்ணாடி போட்டு விடறதெல்லாம் ஓவரோ ஓவர்! :)//

  இதைப் படிச்சு நல்லா சிரிச்சேன் :)

  ReplyDelete
 19. //இது ரெண்டு வரி! ஒரு வரி தான் சொல்லணும் என்பது கண்டிஷன்! :)//

  சரி, அப்படின்னா முற்றுப்புள்ளிக்கு பதில் அரைப் புள்ளி வச்சிடறேன்!

  "வாழ்; வாழ விடு!" :)))

  //என்றும் அன்னையைப் பாடும் உங்க கவிதார்ச்சனையாலேயே அம்பாள் பக்கத் துணை இருந்து காத்திடுவாள்!///

  மிக்க நன்றி கண்ணா, வேண்டுதலுக்கும், வருகைக்கும். 'கவிதார்ச்சனை' என்ற பிரயோகம் நல்லாருக்கே!

  ReplyDelete
 20. வாங்க மௌலி.

  //மிக அழகாக பதில் சொல்லிட்டீங்க.
  பெயருக்கு காப்பி ரைட் வாங்கிடலாம் போல தான் தோணுது. :)//

  மிக்க நன்றி.

  //தனிமையில் கடிகாரச் சத்தம் அருமை, நானும் கவனிப்பேன்.//

  :)))

  ReplyDelete
 21. வாங்க ஜெஸ்வந்தி.

  //நீங்கள் என்னுடன் கோபப் படப் போகிறீர்களா?//

  இல்லை :)

  நினைச்சதைப் பளிச்சுன்னு சொன்னதுக்கு நன்றிதான் சோல்வேன். அதோட எத்தனையோ பேர் இதைப் படிப்பாங்கன்னு தெரிஞ்சும் உள்ளதை சொன்னேனே அதுவே முன்னேற்றம்னு நானே நினைச்சுகிட்டேன் :)

  மீண்டும் நன்றி.

  ReplyDelete
 22. வாங்க கோபி.

  //ரசஞ்சோறு - ஒரே இனம் ;))//

  :)))

  நன்றி கோபி.

  ReplyDelete
 23. வாங்க சுப்பு தாத்தா.

  தொடருக்கு கூப்பிட மின்னஞ்சல் முகவரி இல்லைன்னா, அவங்க வலைப்பூவில் போய் பின்னூட்டி கூப்பிடலாம் :)

  //அம்மா மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி எல்லாம் மொத்தமா
  வந்து என்னைக் காக்கவேணும்.//

  அம்மா உங்களை காக்கட்டும். :)

  உடனே பதிவிட்டதற்கு மிக்க நன்றி தாத்தா.

  ReplyDelete
 24. வருக குமரா.

  //அதென்ன எல்லாருமே இதே வசனம் பேசுறீங்க?//

  நல்ல கதையா இருக்கே! நான் படிச்ச யாரும் இப்படி சொன்னதா தெரியல! நான் என் போக்கில் சொன்னதுதான்... :)

  //இன்னொருத்தர் சொன்னாருன்னா எரிச்சல் வரும்ன்னு நினைக்கிறேன். :-)//

  அப்படின்னா சுப்பு தாத்தாவோட முதல் பத்தியை படிக்காதீங்க! பாவம் அவரு :)

  //அம்மாவின் உடல் நலம் பெற வேண்டுதல்கள் அக்கா.//

  நன்றி குமரா.

  //டக்கு டக்குன்னு எல்லா கேள்விக்கும் பதில் சொல்லியிருக்கீங்க. ரொம்ப நீட்டி முழக்கலை. :-)//

  நீட்டி முழக்க சரக்கில்லை :)

  வருகைக்கும் வாய்ப்புக்கும் மிக்க நன்றி உங்களுக்கு.

  ReplyDelete
 25. நானும் ஏதோ வழக்கம் போல, பாக்கறது, கேக்கறதுனு ஜல்லி அடிச்சிகிட்டு இருந்தேன்.

  'சிவாஜி வாயில ஜிலேபி' தொடருக்கு அப்புறம் எங்கும் சிக்காம (சொல்லிக்க வேண்டியது தான் :)) தப்பிச்ச என்னையும் மாட்டிவிட்டீங்களே...

  சரீ, எழுதறேன் நேரம் கிடைக்கையில் :)

  ReplyDelete
 26. உங்கள் பதில்கள் யாவும் யதார்த்தம். அருமை.

  ReplyDelete
 27. வாங்க சதங்கா.

  //சரீ, எழுதறேன் நேரம் கிடைக்கையில் :)//

  நேரம் உண்டாக்கிக்கிட்டு எழுதுங்க! :)

  //உங்கள் பதில்கள் யாவும் யதார்த்தம். அருமை.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 28. //அருவில குளிச்சதே இல்ல//

  ஒரு அருமையான அனுபவத்தை இன்னும் தாங்கள் பெறவில்லை. சமயம் கிடைக்கும் போது அனுபவித்து பாருங்கள்.

  ReplyDelete
 29. வாங்க கைலாஷி.

  //ஒரு அருமையான அனுபவத்தை இன்னும் தாங்கள் பெறவில்லை. சமயம் கிடைக்கும் போது அனுபவித்து பாருங்கள்.//

  ம்... அப்படித்தான் கேள்விப்படறேன். பார்க்கல்லாம்... :)

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 30. ந. செந்தில் குமார், புதுக்கோட்டைJuly 21, 2009 at 2:33 PM

  //அதற்காக எனக்கு பிடித்த கவிதையையும், அபிநயத்தையும் சேர்த்து நானே (முதன்முதலா) உருவாக்கினது.//

  உங்களுக்கு கவிதை பிடிக்கும் என்பது உங்கள் கவிதையை படிக்கும்போதே தெரிகிறது. உங்களுக்கு அபிநயம் பிடிக்கும் என்றால் பரதம் நாட்டியம் தெரியுமா?

  ReplyDelete
 31. நல்வரவு செந்தில் குமார்.

  //உங்களுக்கு கவிதை பிடிக்கும் என்பது உங்கள் கவிதையை படிக்கும்போதே தெரிகிறது. உங்களுக்கு அபிநயம் பிடிக்கும் என்றால் பரதம் நாட்டியம் தெரியுமா?//

  இதை படிக்கும் யாரும் பார்த்ததில்லைங்கிறதால தைரியமா சொல்லலாம் - பரத நாட்டியம் ஆடுவேன்... :)

  முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

  ReplyDelete
 32. அறிமுகம் அறிய இங்கு வந்தேன்

  நல்ல பதில்கள் - இயல்பான நடை

  நல்வாழ்த்துகள் கவிநயா

  ReplyDelete
 33. //அறிமுகம் அறிய இங்கு வந்தேன் //

  வாங்க சீனா ஐயா. இது உங்கள் முதல் வருகைன்னு நினைக்கிறேன். வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி :)

  ReplyDelete
 34. அன்பின் கவிநயா - அக்டோபர் 2009ல் மறுமொழி இட்டிருக்கிறேனே ! நினைத்தேன் - நிச்சயமாக எனது மறுமொழி அங்கிருக்குமென ! ராமலக்‌ஷ்மி, கபீர், ஜமால், ஷைலஜா, கேயாரெஸ், மதுரையம்பதி, குமரன், சதங்கா, கைலாஷி இவர்கள் எல்லாம் 2009ல் எனது நட்பு வட்டத்திலிருந்தவர்கள் என நினைக்கிறேன். அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 35. பின் தொடவதற்காக

  ReplyDelete
 36. அன்பினிய சீனா ஐயா, உங்கள் மீள் வருகை மகிழ்ச்சி தருகிறது :) மிக்க நன்றி!

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)