Sunday, June 7, 2009

பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது!

இந்த பாப்பா பாட்டை, போன (பட்டாம்பூச்சி விருது) பதிவிலயே போடலாம்னு எழுதினேன். ஆனா அந்த பதிவே ரொம்ம்ம்ம்ப நீளமாயிருச்சு! அதனால எடுத்துட்டேன். வரவர, 'வளவள'ன்னு எழுதறேன் போல தெரியுது :(






பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது
பாப்பா நெஞ்சை மயக்குது மயக்குது
வண்ணம் காட்டிச் சிரிக்குது சிரிக்குது
வாவா என்றே அழைக்குது அழைக்குது!

ஊரைச் சுற்றித் திரியுது திரியுது
உணவைத் தேடி அலையுது அலையுது
மலரைக் கண்டால் மயங்குது மயங்குது
மதுவைக் குடித்து கிறங்குது கிறங்குது!

இறக்கை யெல்லாம் ஜொலிக்குது ஜொலிக்குது
இயற்கை அன்னையின் கைவண்ணம் கலக்குது
தொட்டுப் பார்க்க ஆசை பிறக்குது
கிட்டப் போனால் 'சட்'டுன்னு பறக்குது!

கூட்டுப் புழுவாய் பலநாள் இருந்தது
சிறகை விரித்து ஒருநாள் பறந்தது
நாமும் நினைத்தால் சிகரம் தொடலாம்
நாளை உலகை இன்றே தரலாம்!!

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/bestrated1/52666376/sizes/m/

24 comments:

  1. நல்ல இருக்கிறது

    ReplyDelete
  2. அருமையாக இருக்குது இருக்குது
    கடைசிப்பத்தி ரொம்பப் புடிக்குது புடிக்குது!

    ReplyDelete
  3. //கூட்டுப் புழுவாய் பலநாள் இருந்தது
    சிறகை விரித்து ஒருநாள் பறந்தது
    நாமும் நினைத்தால் சிகரம் தொடலாம்
    நாளை உலகை இன்றே தரலாம்!!//

    நல்லா இருக்கு

    ReplyDelete
  4. கவிதை வரிகள் நன்றாக இருக்குது இருக்குது !

    ReplyDelete
  5. பட்டாம்பூச்சி தொடருது தொடருது...அக்கா கவிதை கலக்குது கலக்குது ;))

    ReplyDelete
  6. என்னால எல்லாம் ஒரு போஸ்ட் கூட போட முடியல்ல...நீங்க ஒரு பட்டாம்பூச்சித் தொடரே எழுதறீங்க:))

    குமரன் என்னையும் கூப்பிட்டார்...மேட்டர் ஒண்ணும் தோணல்லன்னு விட்டுட்டேன்...உங்களுடைய இந்த போஸ்டை என் சார்பில் குமரன் கிட்ட காண்பிச்சுடவா :))

    ReplyDelete
  7. பட்டாம் பூச்சிகள் என்றவுடன் எமக்கு பாலர் பாட்டுத்தான் நினைவுக்கு வருகிறது.
    ஏனெனில் நாங்கள் சிறகடித்து கவலையில்லாமல் பறந்த காலம் அதுவல்லவா?
    அழகான பாட்டு.

    ReplyDelete
  8. வாங்க திகழ்மிளிர். நன்றி :)

    ReplyDelete
  9. வாங்க ராமலக்ஷ்மி.

    //கடைசிப்பத்தி ரொம்பப் புடிக்குது புடிக்குது!//

    கடைசி பத்தி எழுதும் போது உங்க நினைவு வந்தது :) நன்றி.

    ReplyDelete
  10. நல்வரவு ஞானசேகரன். முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  11. வாங்க சதங்கா.

    //கவிதை வரிகள் நன்றாக இருக்குது இருக்குது !//

    உங்க வருகை கண்டு மகிழ்ச்சியா இருக்குது இருக்குது :) நன்றி.

    ReplyDelete
  12. வாங்க கோபி.

    //பட்டாம்பூச்சி தொடருது தொடருது...அக்கா கவிதை கலக்குது கலக்குது ;))//

    நன்றி... நன்றி... :)

    ReplyDelete
  13. வாங்க மௌலி.

    //நீங்க ஒரு பட்டாம்பூச்சித் தொடரே எழுதறீங்க:))//

    தொடர் எழுதணும்கிற நினைப்பெல்லாம் இல்லப்பா. பட்டாம்பூச்சி பத்தி பாப்பா பாட்டு எழுதணும்கிற எண்ணம் இந்த சமயத்துல நிறைவேறிடுச்சு. அம்புட்டுதான் :)

    //உங்களுடைய இந்த போஸ்டை என் சார்பில் குமரன் கிட்ட காண்பிச்சுடவா :))//

    ஆஹா, செய்ங்களேன்...

    வருகைக்கு நன்றி மௌலி :)

    ReplyDelete
  14. வாங்க ஜெஸ்வந்தி.

    //பட்டாம் பூச்சிகள் என்றவுடன் எமக்கு பாலர் பாட்டுத்தான் நினைவுக்கு வருகிறது.
    ஏனெனில் நாங்கள் சிறகடித்து கவலையில்லாமல் பறந்த காலம் அதுவல்லவா?//

    ஆமாம், நல்லா சொன்னீங்க.

    //அழகான பாட்டு.//

    வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  15. அடடா ! என்ன பாட்டு ! உற்சாகம் கொந்தளிக்கிறது.
    உணர்ச்சி பெருக்கு எடுத்து நாளைய உலகத்தை எண்ணி
    வீறு நடை போடுகிறது.

    பட்டாம் பூச்சி போல் பறந்து வந்து
    எனது மழலைச் செல்வங்களுக்கான தமிழ்ப்பதிவு
    http://ceebrospark.blogspot.com
    உடன் வாருங்கள்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  16. சிறகை விரித்து ஒருநாள் பறந்தது
    நாமும் நினைத்தால் சிகரம் தொடலாம்\\

    தன்னம்பிக்கை வரிகள்.

    ReplyDelete
  17. வாங்க தாத்தா. ரசித்தமைக்கு மிக்க நன்றி. நீங்க பாடினதை கேட்டேன். பட்டாம்பூச்சி மதுவைக் குடித்து கிறங்கற இடத்துல நீங்க கொஞ்சம் கூடவே கிறங்கி போனதை ரசிச்சேன் :) மீண்டும் நன்றி.

    ReplyDelete
  18. வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி ஜமால் :)

    ReplyDelete
  19. பட்டாம் பூச்சி பறக்குது பறக்குது
    கவிநயா பாட்டு கலக்குது கலக்குது
    நாவினில் மெட்டு துடிக்குது துடிக்குது
    கைகள் தாளம் போடுது போடுது

    நாலு வரி ரைமிங்கா எழுதவே எனக்கு கஷ்டமா இருக்கு. நீங்க எப்படி தான் இத்தனை கவிதை எழுதறீங்களோ தெரியலை. தொப்பி தூக்கி வணங்குகிறேன் கவிநயா. :-) (Hats off)

    ReplyDelete
  20. வாங்க மீனா.

    //நாலு வரி ரைமிங்கா எழுதவே எனக்கு கஷ்டமா இருக்கு. நீங்க எப்படி தான் இத்தனை கவிதை எழுதறீங்களோ தெரியலை.//

    அதே போல நானும் சொல்லலாமே... எப்படிதான் இவ்வ்வ்வ்ளோ அழகா பாடறீங்களோ, இவ்வ்வ்ளோ அருமையா நகைச்சுவையில கலக்கறீங்களோ.... :)))

    //தொப்பி தூக்கி வணங்குகிறேன்:-) (Hats off)//

    மேலே சொன்னவைகளுக்காக தொப்பி தூக்கல் உங்களுக்கு ரிப்பீட்டேய்! :)

    வருகைக்கும், நாலுவரிக்கும் நன்றிகள் :)

    ReplyDelete
  21. வண்ணத்துப்பூச்சிகளாய் சிறகடிக்கும் பாப்பாக்களின் மனத்தைக் கவரும் கவிதை இது.

    ReplyDelete
  22. சேத்து வெச்சு சங்கரி பாப்பாவுக்கு கொடுக்கணும்!

    ReplyDelete
  23. நல்வரவு மாதேவி.

    //வண்ணத்துப்பூச்சிகளாய் சிறகடிக்கும் பாப்பாக்களின் மனத்தைக் கவரும் கவிதை இது.//

    முதல் வருகைக்கும், அழகான கருத்துக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  24. வாங்க திவா.

    //சேத்து வெச்சு சங்கரி பாப்பாவுக்கு கொடுக்கணும்!//

    ஆஹா, இதைவிட சிறப்பா பாராட்ட முடியாது :) மிக்க நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)