Sunday, June 28, 2009

காத்திருப்பேன்...



அன்றொரு நாள் அழுதிருந்தேன்
ஆதுரமாய் அன்பு செய்தாய்
உயிர் கொண்ட தேவதையாய்
உவந்தென்னை மகிழ வைத்தாய்

கைகால்கள் முளைத்தெழுந்த
கனவாக நீ வந்தாய்
கவிதைக்குள் கருவானாய்
நிஜத்தினிலே உருவானாய்

துயர்துடைத்து முடித்த பின்னே
தொலைவினிலே மறைந்து விட்டாய்
உன் கடமை முடிந்தது போல்
உதறி விட்டுச் சென்று விட்டாய்

வந்திடுவாய் நீ என்றே
வாசல் பார்த் திருக்கின்றேன்
உன்னோடு சேர்ந்திடவே
உயிர் சேர்த்து வைக்கின்றேன்...


--கவிநயா

('அன்புடன்' குழுமத்தில் நிறைய எழுதிக் கொண்டிருந்த போது படத்திற்கென எழுதிய கவிதை)

சுப்பு தாத்தாவின் குரலில், இசையமைப்பில்... (நன்றி தாத்தா!)

22 comments:

  1. படத்தில் இருப்பவரின் கண்களில் தெரியும் காத்திருப்பின் ஏக்கத்தினை அப்படியே உள்வாங்கிப் பிரதிபலிக்கின்றது கவிதை.

    //கைகால்கள் முளைத்தெழுந்த
    கனவாக நீ வந்தாய்//

    அருமை.

    ReplyDelete
  2. உண்மை தான்

    படத்தில் இருக்கும் கண்களில் தெரிகின்றது தேடல் அல்லது காத்திருப்பு

    ReplyDelete
  3. மனத்தை என்னவோ செய்கிறது

    ReplyDelete
  4. நல்லதொரு கவிதை !

    ReplyDelete
  5. கவிதை மனதைத் தொட்டது.
    அழகான வரிகள். It is great.

    ReplyDelete
  6. படமும் கவிதையும் அருமை ;)

    ReplyDelete
  7. சூப்பர் கவிதை. அசத்தறீங்க வழக்கம் போல. :-))

    ReplyDelete
  8. வாங்க ராமலக்ஷ்மி.

    //படத்தில் இருப்பவரின் கண்களில் தெரியும் காத்திருப்பின் ஏக்கத்தினை அப்படியே உள்வாங்கிப் பிரதிபலிக்கின்றது கவிதை.//

    மிக்க நன்றி.

    ReplyDelete
  9. வாங்க ஜமால்.

    //படத்தில் இருக்கும் கண்களில் தெரிகின்றது தேடல் அல்லது காத்திருப்பு//

    மிக்க நன்றி.

    ReplyDelete
  10. வாங்க திகழ்மிளிர்.

    //மனத்தை என்னவோ செய்கிறது//

    படத்தை பார்க்கையில் அப்படித்தான் இருந்தது எனக்கும். மிக்க நன்றி.

    ReplyDelete
  11. //நல்லதொரு கவிதை !//

    பாராட்டுக்கு நன்றி ரிஷு.

    ReplyDelete
  12. //கவிதை மனதைத் தொட்டது.
    அழகான வரிகள். It is great.//

    ரசித்தமைக்கு மிக்க நன்றி ஜெஸ்வந்தி.

    ReplyDelete
  13. //படமும் கவிதையும் அருமை ;)//

    நன்றி கோபி.

    ReplyDelete
  14. //சூப்பர் கவிதை. அசத்தறீங்க வழக்கம் போல. :-))//

    வருகைக்கு நன்றி மீனா. நலந்தானே?

    ReplyDelete
  15. //கைகால்கள் முளைத்தெழுந்த
    கனவாக நீ வந்தாய்//

    கனவெல்லாமே
    கை கால் முளைத்தெழுந்து
    காட்சி தந்தால் ? கவி நயாவின்
    கற்பனையின் கடைசி கோடோ ! (Code)
    நிற்பதெது ? நில்லாதது எது் ?
    நிஜமெது ! நிழலெது !
    நின்னை நீயே அறிந்துகொள்ள
    ஆண்டவன் தரும் கடைசி
    அஸ்திரமோ !

    ஒரு பத்து ராகங்களில் பாடிவிட்டுக் கடைசியில்
    ஷண்முகபிரியாவில் பாடி எனது வழக்கமான‌
    பதிவிலிட்டு இருக்கிறேன்.

    வழக்கமான எனது பதிவில் கேட்கவும்.
    சுப்பு ரத்தினம்
    http://menakasury.blogspot.com
    OR
    http://www.youtube.com/watch?v=HPSuQLMs3to

    ReplyDelete
  16. வாங்க தாத்தா.

    //கனவெல்லாமே
    கை கால் முளைத்தெழுந்து
    காட்சி தந்தால் ?//

    அச்சோ. எல்லா கனவும் வேணாம்; சில கனவுகள் மட்டும் அப்படி ஆனா போதும் :)

    ஷண்முகப்ரியா வெகு பொருத்தம். நீங்களும் ரசிச்சு பாடியிருக்கீங்க. ரொம்ப நல்லா வந்திருக்கு. படங்களும்!

    தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும் தாத்தா. இப்போதான் பாடலை கேட்க முடிஞ்சது. பதிவிலும் இணைக்கிறேன்... மிக்க நன்றி.

    ReplyDelete
  17. "உன்னோடு சேர்ந்திடவே
    உயிர் சேர்த்து வைக்கின்றேன்...மனத்தைத்தொடுகிறது.

    ReplyDelete
  18. //உன்னோடு சேர்ந்திடவே
    உயிர் சேர்த்து வைக்கின்றேன்...மனத்தைத்தொடுகிறது.//

    வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி மாதேவி.

    ReplyDelete
  19. தங்களின் கவிதையும் , சுப்பு தாத்தாவின் பாடல்களும் அருமையாக செல்கின்றது. வளர்க உங்கள் சேவை

    ReplyDelete
  20. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கைலாஷி!

    ReplyDelete
  21. படத்த பாத்தா ரொம்ப காத்திருக்கிற மாதிரி இருக்கு :)

    ReplyDelete
  22. //குறை ஒன்றும் இல்லை !!! said...

    படத்த பாத்தா ரொம்ப காத்திருக்கிற மாதிரி இருக்கு :)//

    உண்மைதாங்க :) வருகைக்கு நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)