Monday, November 23, 2009

நினைவின் விளிம்பில் உலவும் நேரம்

பதிவெழுத வந்த கதையை பதிவா எழுதறதுதான் இந்த தொடர் பதிவின் நோக்கம் :) அன்புத் தம்பி கோபிநாத்தின் அழைப்புக் கிணங்கி இந்த பதிவு. அதனால் போற்றுதல்னா எனக்கும் தூற்றுதல்னா கோபிநாத்துக்கும் சேர்வதாக! ஹி..ஹி!!

கவிதை எழுதற பழக்கம் கல்லூரி நாளில் தொடங்கியது. என் அம்மாவுக்கு தமிழ் ஆர்வம் உண்டு. அவ்வப்போது ஏதாச்சும் எழுதுவாங்க. ஏதோ ஒரு சிரமமான காலகட்டத்தில், கவிதை போல ரெண்டு வரி சொன்னாங்க: “வேதனையும் சோதனையும் விருந்துக்கு வந்திருக்கு!” அப்படின்னு. அது மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தது. அதில் இன்னும் சில வரிகள் சேர்த்து முழு கவிதையாக்கினேன்:

வேதனையும் சோதனையும்
விருந்துக்கு வந்திருக்கு.
‘உமக்கென்ன வேலை இங்கு?
போம்… போம்’, என
யாரோ விரட்டினார்கள்.
யார் இந்த நண்பர்கள்?
அட, நம்பிக்கையும் தைரியமும்தான்!

நல்லாருக்கா? :) இதுதான் என்னோட முதல் கவிதை.

அதற்குப் பிறகு பல வாழ்த்துக் கவிதைகளும், நட்புக் கவிதைகளும், இயற்கைக் கவிதைகளும் எழுதினேன். அவ்ளோதான். திருமணமான பிறகு மேல் படிப்புக்கும் சேர்ந்ததால் கவிதையெல்லாம் காற்றில் போயிடுச்சு! சில வருஷங்களுக்கு ஒண்ணும் எழுதல. அப்பப்ப பூர்வ ஜென்ம நினைவு மாதிரி சில கவிதைகள், கதைகள் எழுதியிருப்பேன். ஆனால் வாசகர்கள் யாருமில்லை.

அமெரிக்கா வந்த பிறகு தனிமை. மறுபடியும் எழுத்தோடு அறிமுகம். சில நண்பர்களோடு சேர்ந்து தமிழுக்கு சங்கம் ஆரம்பிக்க முடிவு செய்தோம். அப்போ அன்னைத் தமிழை வாழ்த்தி (உருப்படியா) ஒரு கவிதை எழுதி, தொடக்க நாளன்று மக்கள் முன்னாடி வாசிக்கவும் செய்தேன்.

கவிதை எழுதுவேன்னு தெரிஞ்சப்புறம் சில நண்பர்கள் நிறைய எழுதச் சொல்லி அன்பா ஊக்குவிச்சாங்க! இதில் நாகு, மற்றும் ஸ்ரீலதா (இவர்தான் என் முதல் வாசகரா ரொம்ப நாள் இருந்தார். என்ன எழுதினாலும் முதலில் இவருக்கு அனுப்பிடுவேன்!), இவங்க பெயர்களை சொல்லியே ஆகணும். பிறகு தமிழ்ச் சங்கம் மூலமா நடந்த கவிதை / சிறு கதை போட்டிகளில் பரிசு வாங்கினேன். அதுதான் என்னுடைய முதல் சிறுகதை முயற்சியும்!

இந்த இடத்தில் ஒரு குலோப்ஜாமூன் விளம்பரம் நினைவுக்கு வருது!

அப்பா: “என்ன விசேஷம், குலோப்ஜாமூன் செய்திருக்கே?”
அம்மா: “ரேஸ்ல செகண்டாம்”
அப்பா: “வெரி குட். வெரி குட். எத்தனை பேர் ஓடினாங்க?”
பையன்: “ரெண்டு!”

அந்த மாதிரிதாங்க! அந்த போட்டிகள்ல விரல் விட்டு எண்ணக் கூடியவங்கதான் கலந்துக்கிட்டிருப்பாங்க! :) ஆனால் இன்னொரு முறை “அவளைப் போல்” என்கிற கதைக்கும் பரிசு வாங்கினேன்.

நாகுதான் எங்க ஊர் எழுத்தாளர்கள் நிறைய பேருக்கு ‘பின்னாடி’ இருந்து ஊக்குவிக்கிறவர் (குத்தறவர் இல்லை!). அவர் மூலமாத்தான் ஈ-கலப்பை அறிமுகமாச்சு. தமிழ் தட்டச்ச கத்துக்கிட்ட பின் நிறைய எழுத ஆரம்பிச்சேன். நன்றி நாகு! அந்த காலகட்டத்தில்தான் ‘கவிநயா’ன்னு நானே நாமகரணம் செய்துகிட்டேன். ‘திண்ணை’யில் கவிதைகளும் சிறுகதைகளும் தொடர்ந்து வாராவாரம் எழுத ஆரம்பிச்சேன்.

‘திசைகள்’ வர ஆரம்பிச்சதும் அங்கேயும் கதை கவிதைகள் எழுதினேன். புது எழுத்தாளர்களை ஊக்குவித்துக் கொண்டிருந்த திரு.மாலன் அவர்கள், என்னோட “அமெரிக்க வாழ்க்கை” என்ற கவிதையை முதன் முதலா பிரசுரிச்சப்போ ரொம்ப சந்தோஷமா இருந்தது!

பிறகு வாசகர் வட்டத்தையும் கருத்து பரிமாறல்களையும் தேடி “மரத்தடி”க்குப் போனேன். ஆனா அங்கே அவ்வளவா ஒட்டலை. தூரத்தில் இருந்து பார்ப்பேன், அவ்வளவுதான். அங்கே என் கவிதை ஒன்றைப் படிச்ச முஜிப் என்பவர், ‘அன்புடன்’ தமிழ் குழுமத்தில் எழுதுங்களேன்னு சொல்லி, அங்கே என்னை அறிமுகம் செய்தார். அதுதான் என் எழுத்துக்கு சரியான உரமாக அமைஞ்சது!


இன்னும் கொஞ்சம் இருக்கு. அது அடுத்த வாரம்... (வேண்டாம்னு சொல்லிட மாட்டீங்கன்னு ரொம்பவே நம்பிக்கை! :)


அன்புடன்
கவிநயா

22 comments:

  1. ஆகா...நன்றிக்கா ;))

    ம்ம்ம்...கதை கேட்க என்ன பிரச்சனை இருக்கு...ஆனா 1 வாரம் இருக்க வேண்டுமா! ;(

    ரைட்டு ;)

    ReplyDelete
  2. ஸ்பெசல் வாழ்த்து அம்மாவின் வரிகளுக்கும் உங்கள் முதல் கவிதைக்கும் ;))

    ReplyDelete
  3. நினைவின் விளிம்பில் நீங்கள் உலவியிருப்பதும் அழகோ அழகு.

    ஊக்கங்கள் உயர்த்தியதையும் உள்ளிருப்பவற்றை வெளிக்கொணந்ததையும் அருமையாய் விவரித்திருக்கிறீர்கள்.

    தொடர்ந்து எழுதி எங்களை மகிழ்விக்க உங்கள் தொடர் வாசகியாய் ரசிகையாய், என் நல்வாழ்த்துக்கள் கவிநயா!

    ReplyDelete
  4. //வேண்டாம்னு சொல்லிட மாட்டீங்கன்னு//

    கண்டிப்பா சொல்ல மாட்டோம் கவி...

    உங்க வேதனையும் சோதனையும் கவிதை நல்லாயிருக்கு..

    உங்க மத்த கதை, கவிதையெல்லாம் படிச்சிட்டு திருப்பி வரேன்...

    ReplyDelete
  5. //வேதனையும் சோதனையும்
    விருந்துக்கு வந்திருக்கு//

    நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்....... கவிநயா......

    ReplyDelete
  6. /வேதனையும் சோதனையும்
    விருந்துக்கு வந்திருக்கு.
    ‘உமக்கென்ன வேலை இங்கு?
    போம்… போம்’, என
    யாரோ விரட்டினார்கள்.
    யார் இந்த நண்பர்கள்?
    அட, நம்பிக்கையும் தைரியமும்தான்!/

    இந்தக் கவிதையைத் தான் நிறைய நாள்களாக தேடி கொண்டு இருந்தேன். இதை எழுதியது நீங்கள் தானா

    :)))))))))))))

    நல்ல இருக்கிறது

    ReplyDelete
  7. /இன்னும் கொஞ்சம் இருக்கு. அது அடுத்த வாரம்... (வேண்டாம்னு சொல்லிட மாட்டீங்கன்னு ரொம்பவே நம்பிக்கை! :)/

    வேண்டாம் என்று சொல்ல முடியுமா சொல்லுங்க‌

    அப்பொழுது தான் பழைய பல கவிதைகளை இந்த இடுகையின் வாயிலாக வாசிக்க வாய்ப்பு கிடைக்கும்.

    ஆவலுடன் அடுத்த இடுகையை எதிர் நோக்கி

    :)))))))))))))))))

    ReplyDelete
  8. வாங்க கோபி!

    //ஆனா 1 வாரம் இருக்க வேண்டுமா! ;(//

    ஆகா, நீங்க இப்படி கேட்டதே சந்தோஷமா இருக்கு :) இந்த வாரம் ஏற்கனவே 2 பதிவாயிருச்சு. வாசிக்கிறவங்களுக்கு overaload ஆகிடக்கூடாதேன்னு அக்கறைதான் :)

    //ஸ்பெசல் வாழ்த்து அம்மாவின் வரிகளுக்கும் உங்கள் முதல் கவிதைக்கும் ;))//

    ரொம்ப நன்றி. அம்மாகிட்டயும் சொல்லிடறேன் :)

    ReplyDelete
  9. //தொடர்ந்து எழுதி எங்களை மகிழ்விக்க உங்கள் தொடர் வாசகியாய் ரசிகையாய், என் நல்வாழ்த்துக்கள் கவிநயா!//

    ரொம்ப நன்றி ராமலக்ஷ்மி! உங்களை தொடர் வாசகியா பெற்றதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  10. //கண்டிப்பா சொல்ல மாட்டோம் கவி...//

    ரொம்ப நன்றி ஸ்வர்ணரேக்கா!:)

    //உங்க வேதனையும் சோதனையும் கவிதை நல்லாயிருக்கு..//

    மீண்டும் நன்றி.

    //உங்க மத்த கதை, கவிதையெல்லாம் படிச்சிட்டு திருப்பி வரேன்...//

    உங்க வருகையை எதிர்பார்த்து... :)

    ReplyDelete
  11. //நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்....... கவிநயா......//

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சங்கவி!

    ReplyDelete
  12. //இந்தக் கவிதையைத் தான் நிறைய நாள்களாக தேடி கொண்டு இருந்தேன். இதை எழுதியது நீங்கள் தானா//

    ஆகா, திகழ்! நெசமாத்தானா? :))) ஆமா, இப்படில்லாம் (சிறுபிள்ளைத்தனமா) எழுத என்னால் மட்டுமே முடியும்! :)

    //ஆவலுடன் அடுத்த இடுகையை எதிர் நோக்கி//

    அச்சோ, நீங்க எதிர்பார்க்கிற அளவெல்லாம் இருக்குமான்னு தெரியல, ஆனா நீங்க இப்படிச் சொன்னதில் ரொம்பவே சந்தோஷம்! :)

    நன்றி திகழ்.

    ReplyDelete
  13. குலாப்ஜாமூன் சாப்பிட கசக்குமா எங்களுக்கு கவிநயா? உங்களோட கவிதை ஆர்வத்தின் படிப்படியான வளர்ச்சியை ரசிக்கும்படி விவரிச்சிருந்தீங்க. அடுத்த பாகத்தை ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன். :-))

    ReplyDelete
  14. Romba nallaaairukku.ammavukkum romba santhosham.
    Anbudan Natarajan.

    ReplyDelete
  15. //அடுத்த பாகத்தை ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன். :-))//

    ஆகா, ரொம்ப நன்றி மீனா!

    ReplyDelete
  16. //Romba nallaaairukku.ammavukkum romba santhosham.//

    அப்பா! :)))

    ReplyDelete
  17. திரு. RM. நடராஜன் அவர்களின் பின்னூட்டமும் அதற்கு தங்களது ஒற்றை வார்த்தைப் பதிலும் ஒரு அழகான அற்புதமான கவிதை கவிநயா:)!

    ReplyDelete
  18. மலரும் நினைவுகளா? சுவாரசியமா இருக்கு!

    ReplyDelete
  19. //திரு. RM. நடராஜன் அவர்களின் பின்னூட்டமும் அதற்கு தங்களது ஒற்றை வார்த்தைப் பதிலும் ஒரு அழகான அற்புதமான கவிதை கவிநயா:)!//

    ரசித்த உங்கள் மனசும்தான்! :)

    ReplyDelete
  20. //மலரும் நினைவுகளா? சுவாரசியமா இருக்கு!//

    நெசம்மாத்தானா? :)

    நன்றி திவா!

    ReplyDelete
  21. நான் எழுதுன முதல் கவிதை எதுன்னு தெரியுமா அக்கா? கூடல்ல ஒரு தடவை சொல்லியிருக்கேன்.

    கடவுளும் அவள் இடையும் ஒன்று
    சிலர் உண்டு என்பர்
    சிலர் இல்லை என்பர்

    இப்ப யோசிச்சுப் பார்த்தா 'இடையோ இல்லை இருந்தால் முல்லை கொடி போல் மெல்ல வளையும்'ங்கற வரியும் 'உண்டென்றால் அது உண்டு; இல்லையென்றால் அது இல்லை'ங்கற வரியும் சேர்ந்து தான் இதை எழுத வச்சதோன்னு தோணுது. அப்ப எல்லாம் பழைய பாட்டு ரொம்ப கேட்பேன்.

    திண்ணை பக்கமும் மரத்தடி பக்கமும் நான் போனதில்லை; அப்பப்ப படிக்க போயிருக்கேன். திசைகள் இதழுக்கு எழுதித் தரச் சொல்லி ஒரு அக்கா ரொம்ப் நாளைக்கு முன்னாடி கேட்டாங்க - பாருங்க இப்ப அவங்க பேரு கூட மறந்துட்டேன். எழுதித் தர்றேன்னு சொன்னவன் தான்; அப்புறம் மறந்தே போயிட்டேன். அவங்களும் வற்புறுத்தாம விட்டுட்டாங்க.

    ReplyDelete
  22. //நான் எழுதுன முதல் கவிதை எதுன்னு தெரியுமா அக்கா? கூடல்ல ஒரு தடவை சொல்லியிருக்கேன்.

    கடவுளும் அவள் இடையும் ஒன்று
    சிலர் உண்டு என்பர்
    சிலர் இல்லை என்பர்//

    நினைவிருக்கு குமரா. முதல் கவிதையிலேயே அசத்திட்டீங்க :)

    //இப்ப யோசிச்சுப் பார்த்தா 'இடையோ இல்லை இருந்தால் முல்லை கொடி போல் மெல்ல வளையும்'ங்கற வரியும் 'உண்டென்றால் அது உண்டு; இல்லையென்றால் அது இல்லை'ங்கற வரியும் சேர்ந்து தான் இதை எழுத வச்சதோன்னு தோணுது. அப்ப எல்லாம் பழைய பாட்டு ரொம்ப கேட்பேன்.//

    நம்ம மனசை பாதிச்ச விஷயங்கள் நம்மை அறியாமயே பல சமயங்களில் பல விதமா வெளிப்படறது இயற்கைதானே :)

    //திண்ணை பக்கமும் மரத்தடி பக்கமும் நான் போனதில்லை; அப்பப்ப படிக்க போயிருக்கேன். திசைகள் இதழுக்கு எழுதித் தரச் சொல்லி ஒரு அக்கா ரொம்ப் நாளைக்கு முன்னாடி கேட்டாங்க - பாருங்க இப்ப அவங்க பேரு கூட மறந்துட்டேன். எழுதித் தர்றேன்னு சொன்னவன் தான்; அப்புறம் மறந்தே போயிட்டேன். அவங்களும் வற்புறுத்தாம விட்டுட்டாங்க.//

    திசைகள் இல்லை இப்போ :( திண்ணையில எழுதலாமே! (பாத்து... அப்புறம் என் பேரையும் மறந்துடப் போறீங்க :)

    வருகைக்கும் அனுபவப் பகிர்தலுக்கும் நன்றி குமரா.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)