கண்ணன் பிறந்தான், சின்னக் கண்ணன்
பிறந்தான்
நானிலம் மகிழ, நான்மறை புகழக்
கண்ணன் பிறந்தான்
எங்கள் மன்னன் பிறந்தான்
பூவைப் பூ வண்ணம் அவன் பூந்தளிர்
மேனி, அவன்
பூஞ்சிரிப்பில் கிறங்கி விடும்
மனமென்னும் தேனீ
வெள்ளித் தண்டை கொஞ்சக் கொஞ்ச
சேவடிகள் கெஞ்சக் கெஞ்ச
மூவடியால் உலகை அளந்த மாயன் வருகிறான்,
அவன்
ஏதும் அறியாத குழந்தை போலத் தவழ்கிறான்
வா யிதழில் தே னொழுக
வண்டு விழி தான் சுழல
அண்டமெல்லாம் தன்னுள் கொண்ட மாயன்
வருகிறான், அவன்
ஏதும் அறியாத குழந்தை போலத் தவழ்கிறான்
அன்னை இல்லை என்பதனால்
அன்னை அன்பிற் கேங்கினனோ?
அன்னை யசோ தாவைத் தேடி மாயன்
வருகிறான், அவன்
அழகுக் குழந்தையாகி அவள் மடியில்
தவழ்கிறான்
---கவிநயா
அருமை.
ReplyDeleteகண்ணன் பிறந்தான்...
ReplyDeleteகவிதை அருமை...
எத்தனையோ நாட்களுக்குப் பிறகு எழுதினாலும், தவறாமல் வந்து வாசித்துப் பின்னூட்டிய வெங்கட், மற்றும் சே.குமாருக்கு நன்றிகள் பல!
ReplyDelete