Monday, January 25, 2016

அகரம் முதல் எழுத்தானது ஏன்?

வந்துட்டேன்னு பிரமாதமா அறிவிப்பெல்லாம் கொடுத்திட்டு, மறுபடி காணாமப் போயிட்டேன்! தொடர்ந்து ஒரு வேலையைச் செய்யறது இருக்கே, அது ரொம்ப சிரமம்தான். முதல்ல மனசும் விருப்பமும் இருக்கணும். பிறகு உடம்பும் அறிவும் ஒத்துழைக்கணும். என்ன சொல்றீங்க? நானும் எழுதுவேன்னு சொல்லிக்க ஆரம்பிச்சு ரொம்ப வருஷமாச்சு. அதுல இந்த மாதிரி ஒரு பெரிய தேக்கம் இதுவரை வந்ததில்லை. வலைப்பூவில் இடலைன்னாக் கூட ஏதாச்சும் எழுதிக்கிட்டிருப்பேன். ஆனா இப்பல்லாம் எழுதறதுக்கு நிறைய கரு தோணினாலும், அப்பப்பவே எழுத முடியாததால மறந்து போயிடுது. அப்புறமா திரும்ப யோசிச்சு எழுத சோம்பேறித்தனம் வந்துடுது. ஹ்ம்… இந்த மனநிலைலதான் இப்ப இருக்கேன்.

 
சரி, இப்ப தலைப்புக்கு வருவோம்… எந்த மொழியை எடுத்துக்கிட்டாலுமே, அதுக்கு வரி வடிவம்னு ஒண்ணு இருக்கு. சுழி, பிறை,வளைவு, நேர் கோடு, குறுக்குக் கோடு, என்கிற இவைதான் எந்த மொழியின் வரிவடிவத்துக்குமே அடிப்படை. பொதுவா எந்த மொழியையாவது எழுதக் கத்துக் குடுக்கணும்னா, எது ரொம்ப சுலபமா எளிமையா இருக்கோ அந்த எழுத்தைத்தான் முதல் எழுத்தாக வெச்சு கத்துத் தருவாங்க. ஆனா தமிழ்ல மட்டும் “அ” வைத்தான் முதல்ல கத்துக் குடுக்கிறோம். நமக்கே தெரியும் “அ” எழுதறது எவ்வளவு கஷ்டம்! அதிலும் முதல் முதலா எழுதக் கத்துக்கற குழந்தைங்களுக்கு இன்னும் எவ்வளவு கஷ்டமா இருக்கும்! ஆனா, “அ”வைக் கவனிச்சு மெதுவா எழுதிப் பார்த்தா தெரியும்... அதில மேலே சொன்ன 5 அடிப்படையும் இருக்கு. சுழி இருக்கு, வளைவு இருக்கு, பிறை இருக்கு, குறுக்குக் கோடு இருக்கு, பிறகு நேர் கோடும் இருக்கு. அதனால “அ” வை முறையா எழுதக் கத்துக்கற குழந்தைங்களுக்கு மற்ற எழுத்தெல்லாம் சுலபமா வந்துடுமாம். எழுத்து என்ன, வேற எந்த மொழி எழுதறதும் கத்துக்கறதும் அவங்களுக்கு கஷ்டமில்லையாம்.

கலைமாமணி திருமதி.தேச மங்கையர்க்கரசி அவர்கள் ஒரு சொற்பொழிவின் போது சொல்லக் கேட்டது.

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா


6 comments:

  1. நல்ல விளக்கம். பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  2. தேக்கம் இல்லாமல் தொடர்வதற்கு நீங்களும் 'அ' போட்டு 'ஆ'வன்னா என்று ஆரம்பித்து விட்டீர்கள். தொடருங்கள். மற்ற பதிவர்கள் பதிவுக்கு வந்து பார்த்தீர்களென்றால், உற்சாகமும் பிறக்கும். அதான் மருந்து.

    ReplyDelete
    Replies
    1. வருக ஐயா! ஆசைதான்... ஆனால் முன்போல முடிவதில்லை... மற்ற பொறுப்புகள் முன்னுரிமை எடுத்துக் கொள்கின்றன... முயற்சி செய்கிறேன்.

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)