நலந்தானே? எம்புட்டு நாளாச்சு பாத்து! உங்களை எல்லாம் நினைச்சுக்கிட்டேதான் இருந்தேன், ஆனா வரவே முடியலை... முதல் முதலா ஒரு மாணவிக்கு பரத நாட்டிய அரங்கேற்றம் செய்தேன். நேரமெல்லாம் அதுவே இழுத்துடுச்சு. இனிமேலாவது மாதம் ஓரிரு பதிவாவது இடணும்கிற எண்ணம் இருக்கு... பார்க்கலாம்....
அன்பின் உருவாய் அவள்* உருவம்
அவளின் வடிவாய் இவ்வுலகம்
அன்பே சங்கிலியாய்ப் பிணைக்கும்
அமைதி அதனுள் தவழ்ந்திருக்கும்
கோபம் தாபம் இங்கில்லை
கவலை கண்ணீரும் இல்லை
இன்பம் துன்பம் என்றில்லை
ஆனந்தம்ஒன்றே இதன் எல்லை
புதுசா விரியும் பூ வாசம்
மனசில் முளைக்கட்டும் புது நேசம்
புதுசாப் பிறக்குது புதுவருஷம்,
பல
தினுசா சிறக்கட்டும் அனைவருக்கும்!
--கவிநயா
*அவள்: அவள் வேறு யாருமில்லை, அகிலத்துக்கெல்லாம் அன்னை பராசக்திதான்!
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு இனியதாகப் பிறக்கட்டும்! சிறக்கட்டும்!
--கவிநயா
*அவள்: அவள் வேறு யாருமில்லை, அகிலத்துக்கெல்லாம் அன்னை பராசக்திதான்!
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு இனியதாகப் பிறக்கட்டும்! சிறக்கட்டும்!
நல்ல வரிகள்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார், சுற்றத்தார் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteமிக்க நன்றி திரு.துளசிதரன்!
Deleteநன்றி. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteமகிழ்ச்சி. மாணவியின் அரங்கேற்றம் சிறப்பாக நடை பெற்றிருக்குமென நம்புகிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள்:).
இறையருளால் அரங்கேற்றம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மிக்க நன்றி ராமலக்ஷ்மி!
Deleteவணக்கம்
ReplyDeleteஅருமையாக உள்ளது இரசித்தேன்
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் ரூபன். மிக்க நன்றி.
Deleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..இவ்வருடம், தங்களுக்கு மிக இனிய ஆண்டாக அமைந்து, எண்ணியதெல்லாம் ஈடேறப் பிரார்த்திக்கிறேன்!.
ReplyDeleteபிரார்த்தனைக்கு மிக்க நன்றி பார்வதி.
Delete
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி குமார்!
Deleteஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள், கவிநயா!
ReplyDeleteவருக ஜீவி ஐயா. மிக்க நன்றி.
Deleteமிக்க நன்றி கீதாம்மா!
ReplyDelete