சுப்பு தாத்தா நெகிழ்ந்து மகிழ்ந்து பாடித் தந்ததைக் கேட்டு மகிழுங்கள்!
நானிலம் போற்றிட நாற்றிசை வாழ்த்திட
நானிலம் போற்றிட நாற்றிசை வாழ்த்திட
சின்னக் கண்ணன் பிறந்தான்
வானகம் போற்றிட வையகம் வாழ்த்திட
வண்ணக் கண்ணன் பிறந்தான்
செக்கச் சிவந்திட்ட செங்கமலம்
போல
சின்னத் திரு வடிகள்
எட்டி உதைத்திட விட்டு விட்டு
ஓடும்
முன்னைப் பழ வினைகள்
மொட்டு மலர்ந்தது போல விரிந்திடும்
பட்டுப் போன்ற இதழ்கள்
சிட்டுப் போல அவன் சிந்திடும்
சிரிப்பில்
சொக்கி விடும் மனங்கள்
சுற்றி வருகின்ற சூரியனைப் போல
வட்டக் கரு விழிகள்
வட்டக் கரு விழிகள்
சுட்டு எரிக்கின்ற துன்பம் அத்தனையும்
சுட் டெரிக்கும் விழிகள்
ஆலிலைக் கண்ணன் தன் காலின் விரலினை
வாயில் ருசித் திருப்பான்
ஆயிர மாயிரம் பாயிரம் பாடிட
கேட்டு மகிழ்ந் திருப்பான்
ஆழி துயில்பவன் தாயின் மடியினில்
பிள்ளை யாகப் பிறந்தான்
வாழி வாழி யென்று நெஞ்சம் நெகிழ்ந்திட
வாழ்த்தி மகிழ்ந் திடுவோம்!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.motherszone.com/baby-names-meaning-lord-krishna/
Krishna Jeyanthi Greetings!
ReplyDeleteஇனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை. இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete