வணக்கம். நலந்தானே? ரொம்ப நாளாச்சு
பார்த்து.
பூ அழகா இருக்குல்ல? என் தோழி வீட்டில் பூ பூத்தா
வலைப்பூவில் இடறேன்னு சொல்லியிருந்தேன். கொடுத்த வாக்கைக் காப்பத்தணுந்தானே?
இந்தப் பூவுக்கு அப்படி என்ன
சிறப்புங்கிறீங்களா? அவங்களுக்கும் தாவரங்களுக்கும் ரொம்ப தூரம்… இப்பதான் பழக ஆரம்பிச்ச்சிருக்காங்க.
அந்தப் பழக்கத்தை ஊக்குவிக்கறதுக்காகத்தான்… என்கிறது வெளிப்படையான காரணம் :) (அந்தச் சாக்கிலாவது நானும் ஒரு பதிவிட்டேன்னு
பேர் பண்ணிக்கலாமே அப்படிங்கிறது உள்ளுக்குள்ள
இருக்க காரணம்!)
இந்தப் பூ மாதிரி நீங்களும் எப்பவும் அழகா சிரிச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கணும்னு வாழ்த்தறேன்!
அன்புடன்
கவிநயா
வணக்கம்
ReplyDeleteஓரு நாள் மலர்ந்து ஒரு நாள் மடியும் அல்லவா.. இந்த மலர்...
நிச்சயம் எப்போதும் புன்னகைதான்... நாம...
இனிய காலை வணக்கம்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆமாம், நிஜப்பூ வாடிப் போகும். படத்தில் இருக்கிறது அப்படியே இருக்கும் :) நன்றி ரூபன்!
Deleteசரி...
ReplyDeleteதொடர்ந்து மலருங்கள்...
முயற்சிக்கிறேன்... நன்றி தனபாலன்!
Deleteபூக்களின் முகங்களில் தான் எத்தனைச் சிரிப்பு?!
ReplyDeleteவலைப்பூவில் இடம்பெற்ற இவ்விளம்பூக்களைக் கண்டதும்,
இம்மனுப்பூவிற்கும் மனதில் மகிழ்வது, முகிழ்ப்பு..... இயல்பு!
ஒரே செடியில் இரு 'பூ' (ஊக்குவிப்பு, பதிப்பு) பறித்த கவிப்பூவிற்கு வாழ்த்துகள் :) :)
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்
:) பூப்பூவான பின்னூட்டத்திற்கு நன்றி சுந்தர்! :)
Deleteமிக அழகு.
ReplyDeleteதோழிக்கு வாழ்த்துகள்! பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்துகளுடன் நன்றி :)