சூரியனும், குகையும் ஒரு நாள்
சந்தித்துக் கொண்டார்கள். சூரியனுக்கு, குகை சொல்லுகின்ற இருள் என்றால் என்ன, குளிரான
ஈரமான இடம் என்றால் என்ன, என்று புரியவில்லை. அதே போல் குகைக்கும் சூரியன் சொல்லுகின்ற
ஒளி என்றால் என்ன, பளிச்சென்ற தெளிவான இடம் என்றால் என்ன, என்றும் புரியவில்லை. அதனால், இரண்டு
பேரும் மற்றவர் இடங்களைச் சென்று பார்வையிடலாம் என்று தீர்மானித்தார்கள்.
குகை, சூரியன்
இருக்குமிடத்திற்கு வந்தது. “ஆஹா, எவ்வளவு அருமையாக இருக்கிறது உன் இடம்! கற்பனைக்கும்
அப்பாற்பட்ட அற்புதமாக இருக்கிறது! சரி… இப்போது நீ வந்து நான் இருக்கும் இடத்தைப்
பார்”, என்றது.
குகைக்கு வந்து பார்த்த சூரியன், “எனக்கு ஒன்றும் வித்தியாசமே தெரியவில்லையே!”
என்றதாம்!
இதிலிருந்து என்ன தெரிகிறது?
நீங்களே சொல்லுங்களேன்!
எல்லோரும் நல்லாருக்கணும்!
அன்புடன்
கவிநயா
அருமை அருமை
ReplyDeleteபுரிந்தது வாழ்த்துக்கள்
எல்லோரும் நல்லாருக்கணும்!
ReplyDeleteNice
எல்லாரும் நல்லாயிருக்கணும்...
ReplyDeleteஅருமை...
அருமை...
அருமை....
ReplyDeleteஎல்லோரும் நன்றாகவே இருக்கட்டும்!
"எல்லோரும் நல்லாருக்கணும்" - இது நான் வழக்கமா கட்டுரைகளை முடிக்கும் போது எழுதறதுதான் :)
ReplyDeleteரமணி, ரிஷபன், சே.குமார், மற்றும் வெங்கட், அனைவரின் வருகைக்கும் மிக்க நன்றி!