குளுகுளுவென மிதக்கும் சந்திரன்
கலகலவென குதிக்கும் கடலலை
சிலுசிலுவென சிரிக்கும் தென்றல்...
சலசலவென ஓடும் ஆறு
படபடவெனப் பாயும் அருவி
கமகமவென மணக்கும் பூக்கள்
சநிதபவென ஒலிக்கும் பாக்கள்...
இவை இயல்பினில் மாறுவதில்லை
தம் கடமையில் தவறுவதில்லை
பிறர் புகழ்ச்சிக்கு ஏங்குவதில்லை
தம் துயரத்தில் துவளுவதில்லை...
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://hdw.eweb4.com/out/1058950.html
படத்துக்கு நன்றி: http://hdw.eweb4.com/out/1058950.html

உண்மைதான் ... //தம் துயரத்தில் துவளுவதில்லை...// அட்டகாசம்
ReplyDeleteகவிதை அருமை...
ReplyDelete