கண்ண நிற மேகமே!
செல்வதெங்கே மேகமே!
சொல்லிச் செல்வாய் மேகமே!
காற்று உனக்கு அன்னையோ!
கை பிடித்துச் செல்கிறாய்!
கூட்டிச் செல்லும் இடமெல்லாம்
கருணை மழை பொழிகிறாய்!
தாகத்துக்குக் கடலின் நீரைத்
தயக்கமின்றிக் குடிக்கிறாய்!
கரிக்கும் நீரைக் குடித்த போதும்
இனிக்கும் நீரைக் கொடுக்கிறாய்!
கன்னங் கரு மேகமுந்தன்
உள்ளம் மிக வெள்ளையே!
உன்னைப் பார்த்துப் பாடங் கற்றேன்,
நானும் நல்ல பிள்ளையே!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://anadequatemom.wordpress.com/2012/11/14/there-are-no-words-but-im-trying/
வணக்கம்
ReplyDeleteஆகா ....ஆகா....என்ன வரிகள் என்ன உவமைகள் அழகிய வரியில் புனைந்த பாவினை நானும் இரசித்தேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன்!
Deleteகார்மேகக் கருணை குணம் மாந்தர்க்குள் வீட்டிருந்தால், இதயமெல்லாம் தளிர்த்தெங்கும் இன்பமே பொங்கி நிற்கும்!!
ReplyDeleteமழைபிள்ளையிடம் மனிதப்பிள்ளைகள் கற்பதற்கு, பாடங்கள் நிறைய இருக்கின்றன!!
கருத்துமேகக்கவிதை, அழகு :)
உண்மைதான். நன்றி சுந்தர்!
Deleteகன்னங்கரு மேகமே...
ReplyDeleteகவிதை அருமை.
வாழ்த்துக்கள்.
நன்றி சே.குமார்!
DeleteGreat ! மிகவும் நேர்மறையான வரிகள் ! எளிய நடை! அற்புதம் !
ReplyDeleteமிக்க நன்றி தானைத் தலைவி!
Deleteஅருமை.
ReplyDeleteபாராட்டுகள்.