ஆடி வெள்ளிக் கிழமையிலே பாடி வந்தோமே
அம்மா உன் பதமலரைத் தேடி வந்தோமே
உன்னை எண்ணி நாடி ஆடிப் பாடி
வந்தோமே, எங்கள்
உள்ளமெல்லாம் உன்னையே கொண்டாடி
வந்தோமே!
வேப்பிலையில் இருப்பவளே வேத நாயகி,
எங்கள்
வேதனைகள் தீர்க்குமெழிற் கோதை
நாயகி
மஞ்சளிலே இருப்பவளே மாய நாயகி,
எங்கள்
மனதை விட்டு நீங்காத மங்கை நீயடி!
அகிலமெல்லாம் ஆளுகின்ற ஆதி நாயகி,
எங்கள்
அகத்தினிலே ஒளிருகின்ற அழகு நாயகி
உலகையெல்லாம் ஆக்கிப் பின்னே
காக்கும் நாயகி, எங்கள்
உள்ளம் விட்டு நீங்காத உறவு நீயடி!
-கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2781&Cat=3
அம்மன் பாடல் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மிக்க நன்றி, சே.குமார்!
Deleteஅருமயான சந்த நயத்தோடு அமைந்த பாடல். பாடும் போதே ஆடவும் தோன்றுகிறது. மனமெல்லாம் தெய்வீகப் பேரானந்தமும் உற்சாகமும் நிரம்புகிறது. அருமையானதொரு பாடல் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி!!!!
ReplyDeleteஅட.. ஆடினீங்களா? :) மிக்க நன்றி பார்வதி!
Deleteநல்ல பாடல்.... பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete