Sunday, December 9, 2012

கல்லால் அடித்த போதினிலும்...



ஓங்கி உயர்ந்து வளர்ந்திடுமாம்!
ஒதுங்க நிழலைத் தந்திடுமாம்!
பாடித் திரியும் பறவைகட்கு
கூடி வசிக்க இடந்தருமாம்!

வானந் தொட்டு வளர்ந்தாலும்
வளைந்தே காற்றில் அசைந்திடுமாம்!
மேகந் தொட்டு மழை நீரால்
மண்ணின் தாகம் தீர்த்திடுமாம்!

வளர்ந்து அடர்ந்து காடாகி
விலங்கு களுக்கும் புகல்தருமாம்!
இயற்கைத் தாய்க்கு உறுதுணையாய்
இயல்பாய் உதவி செய்திடுமாம்!

கல்லால் அடித்த போதினிலும்
கனியே தந்திடும் மரத்தைப் போல்
இன்னா செய்யும் மனிதருக்கும்
இனிதாய் அன்பே செய்திடுவோம்!

--கவிநயா 

நன்றி: வல்லமை


Quotes on trees:
Someone's sitting in the shade today because someone planted a tree a long time ago
--- Warren Buffett 
Trees are the earth's endless effort to speak to the listening heaven.
-- Rabindranath Tagore

12 comments:

  1. கல்லால் அடித்த மரமும் கனிகள் தரும் போலே
    பல்லால் கடித்த பழமும் இன்சுவை படைக்கும் போலே
    சொல்லால் நான் அடித்தாலும் வைதாலும் = என் செல்ல
    இல்லாளின் அன்பிற்கு இணையுண்டோ சொல் !!

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! சூப்பர் தாத்தா!
      (ஆமா... பாட்டிக்கு எதுக்கு இவ்ளோ ஐஸ்?! :)

      Delete
  2. /கல்லால் அடித்த போதினிலும்
    கனியே தந்திடும் மரத்தைப் போல்../

    உண்மைதான் கவிநயா. இயற்கையிடம் கற்றிடதான் எவ்வளவு இருக்கின்றன?

    ReplyDelete
    Replies
    1. //இயற்கையிடம் கற்றிடதான் எவ்வளவு இருக்கின்றன?//

      ஆம் ராமலக்ஷ்மி நன்றாகச் சொன்னீர்கள். நன்றி.

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி திரு.நடராஜன்.

      Delete
  4. ரொம்ப அருமையான பொருளாழம் மிகுந்த பாட்டுக்கு நன்றி கவிநயா !

    சூரிசார் பாட்டு ரொம்ப ச்வீட்டு !

    ReplyDelete
    Replies
    1. :) நன்றி லலிதாம்மா. ரொம்ப நாளா காணுமே. நலந்தானே?

      Delete
  5. இயற்கையை போலவே உங்கள் கவிதையையும் அழகாய்....

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும், ரசித்தமைக்கும் மிக்க நன்றி, கார்த்தி யுவன் :)

      Delete
  6. இன்னா செய்யும் மனிதருக்கும்
    இனிதாய் அன்பே செய்திடுவோம்!

    Good thought .

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் முதல் வருகைன்னு நினைக்கிறேன். மிக்க நன்றி ரிஷபன்!

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)