தேடுகின்ற கண்களுக்குள் ஓடி வரும்
சுவாமி
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும்
சுவாமி
வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும்
சுவாமி
வஞ்சமில்லா நல்லவர்க்கே அருள்புரியும்
சுவாமி!
ஐயப்ப சுவாமி….. அருள் புரி சுவாமி
கண்ணனும் நீ கணபதி நீ கந்தனும்
நீயே – எங்கள்
காவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும்
நீயே
அண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும்
நீயே – எம்மேல்
அன்பு வைத்து எம்மனதில் குடி
புகுந்தாயே!
ஐயப்ப சுவாமி இன்னும் அருள் புரி
சுவாமி
(தேடுகின்ற)
ஹரிஹரனின் புத்திரனாய் அவதரித்தாயே
– எமக்கு
அருள்செய்ய சபரிமலைக்கு இர/ற/ங்கி
வந்தாயே
கருணையினால் பதினெட்டாம் படி
அமர்ந்தாயே – எங்கள்
கண்கண்ட தெய்வமென ஆகி விட்டாயே!
ஐயப்ப சுவாமி இன்னும் அருள் புரி
சுவாமி
(தேடுகின்ற)
--கண்ணதாசன்/கவிநயா
சுவாமியே..............சரணம் ஐயப்பா!
படத்துக்கு நன்றி: http://temple.dinamalar.com/en/historydivinity.php
படத்துக்கு நன்றி: http://temple.dinamalar.com/en/historydivinity.php
பாடல் மிகச் சிறப்பாக இருக்கிறது
ReplyDeleteகண்ணதாசன் அவர்கள் நிச்சயம் படித்தால்
பாராட்டவே செய்வார்கள்
வாழ்த்துக்கள்
நானும் சின்ன வயதில் படம் பார்த்திருக்கிறேன். இந்தப் பாடலும் பிடிக்கும். உங்க வரிகளோடு இன்னும் அருமை. நன்றி கவிநயா:)!
ReplyDeleteசுவாமியே சரணம் ஐயப்பா....
ReplyDeleteமிகவும் நன்றி, ரமணி, ராமலக்ஷ்மி, மற்றும் சே.குமார்!
ReplyDelete